உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அதன் கழுத்தில் கைபோட்டு விட்டார்கள் 117 அலங்கரிக்கப்பட்டு கலீர் கலீர் என்று தொழுவுக்குள் பிரவேசமாயின. சிறிது நேரத்துக்கெல்லாம் மாடு கள் அந்தஸ்துக்குத் தக்கபடி உருவிவிடப்பட்டன; கடைசியாய், 'வருகிறதடோய் ஜமீன்தார் மாடு வரு கிறதடோய்' என்ற பிரமாதமான கட்டியத்துடன் கொம்புகளும் பேரிகைகளும் கொந்தளித்து முழங்கக் காதில் கடுக்கனும், கழுத்தில் அரைஞானும் அணிந்து பூமாலைகளும் சதங்கை மாலைகளும் ஏராளமாய்த் தாங்கி திமிளை டம்பமாய் அசைத்துக்கொண்டு ஓர் கம்பீரமான ரிஷபம் புறப்பட்டது. தொழுவினின்றும் புறப்பட்டுச் சிறிது தூரம் போவதற்கு முன்னேயே உயிரை வெறுத்த ராட்சஸப் பயல்கள் சிலர் சுப்பிர மணியய்யரால் முன்னமே தூண்டப்பட்டு அதன்மேல் திடீரென்று பாய்ந்தார்கள். பாயவே மனிதன் கை மேலே பட்டறியாத அந்தக்காளை வெகு ரோஷத் துடன் குபீரென்று கிளம்பி பளபளவென்று மின்னும் படி சீவி வைத்த தன் கூர்மையான கொம்புகளை இரு புறமும் வீசி நாலைந்து பேரைக் குத்திப் போட்டுவிட் டது. போட்டும் மற்றவர்கள் அதன் திமிளை விடாது பிடித்துக்கொண்டு முள்வேலிகள் மேலும் சுவர்களின் மேலும் அலட்சியமாய்த் தாவுகின்ற அந்த மாட்டுடன் தாங்களும் தாவி அதன் கழுத்தில் கைபோட்டு விட் டார்கள். உடனே கூட்டம் ஏகமாய் வந்துவிட்டது. மாடு கீழே படுத்துப்போய்விட்டது. ஜமீன் தாருடைய ஆட்களெல்லாம் சண்டைபோட்டும் அடங்காமல் சுப் பிரமணிய அய்யருடைய ஆட்கள் விடமாட்டோ மென்று அந்த மாட்டினுடைய கடுக்கன், அரைஞாண், உருமால் முதலிய எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு அதை முடுக்கிவிட்டார்கள். இதுவரையில் ஒருநாளும் பிடிபடாத அந்த மாட்டை சுப்பிரமணியய் யருடைய ஆட்கள் பிடித்ததைப்பற்றி வெகு கோபத் துடன் ஜமீன்தார் தன் அருகில் ஒரே பாயில் உட்கார்ந் திருந்த அய்யரைப் பார்க்க, அவர் கோபித்