116 கமலாம்பாள் சரித்திரம் கிரமமாகக் கல்யாணம் செய்து கொண்ட மனைவிமா. பதின்மூன்றுபேர். அக்கிரமமாக அனுபவித்த ஸ்தி கள் அனந்தம். சிங்கக்குட்டி போன்ற இச்சிற்றரசன் பேரைக் கேட்டால் அந்தப் பிரதேசத்தில் அழுத பிள் ளையும் வாய்மூடும். சுப்பிரமணியய்யர் வீட்டில் அவன் திருடக காரணமென்னவென்றால் சில நாளைக்கு முன் சிறு குளத்தில் பிரமாதமான ஜெல்லிக்கட்டு ஒன்று நடந் தது. அதில் வந்தது சுமார் ஆயிரம் மாடு இருக்கும். அது சுப்பிரமணியய்யருடைய கெடுக்கட்டு. உருமால், புஷ்பம், கருப்பணஸ்வாமி பூஜை முதலிய சகல செல் வும் அவருடையதே. சுப்பிரமணியய்யர் வீட்டில் பொன்னம்மாளிடத்தில் பயங்கொள்ளியாயிருந்தா லும் வெளியில் உற்சாகப் பிரியர். அவர் புதிதாக 400 ரூபாய் போட்டு ஒரு ஜோடி உருமால் கட்டி மாடு வாங்கியிருந்தார். அதுவரையில் அந்தப் பிரதேசங் களில் பிரசித்தமாயிருந்தது பக்கத்திலுள்ள கோமள நாயக்கனூர் ஜமீன் தாருடைய கண்ணாடி மயிலை என்ற காளை. அதையும் சுப்பிரமணியய்யருடைய புது மாட் டையும் போட்டியில் விட்டுப் பார்க்கவேண்டுமென்று அந்த கெடுக்கட்டு அவரால் ஏற்பாடு செய்யப்பட் டது. டம், டம், டம்டம் என்று அடிக்கிற பறைக் கொட்டுகளோடும், பூம் பூம், பூம், என்று முழங்குகிற கொம்பு வாத்தியங்களோடும் அரசமரத்தடியில் திருக் கோயில் கொண்டெழுந்தருளிய கருப்பணக் கடவு ளுக்குப் பழம் நைவேத்தியமான பிறகு அக்கோயிலி லிருந்து கொட்டு முழக்கத்துடன் முக்கியமான ஒரு முப்பது கூளிக்காளைகள், இருபக்கமும் வீசப்பட்ட கயிறுகளை சொந்தக்காரர்கள் தூரத்திலிருந்து பயபக் தியுடன் பிடித்துவர, நந்தியாவட்டை , காட்டரளி, செம்பரத்தை, முதலிய பூமாலைகளை ஏராளமாயணிந்து கொண்டு சதங்கை மாலைகள், அரக்கு மாலைகளால்