உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'இவன்தான் வீரப் பிரதாபன்' 115) பபா அவனது அளவற்ற ஊக்கமும் உற்சாகமும், கம்பீர மான தோற்றமும், காருண்யமான குணமும் அவனைக் காட்டிலும் எத்தனையோ வயதில் பெரிய திருடர் களைக்கூட அவனுக்கு நாய்போல அடிமைப்படச் செய்ததுமன்றி அவனிடத்தில் அவர்களுக்கு அச்சமும் அன்பும் ஏககாலத்தில் ஜனிக்கச்செய்தன. அவர் களுக்கு இவன் இட்டது சட்டம். இவன் சொன்னது வேதவாக்கியம். பேயாண்டித்தேவனுடைய விஸ்தார மான பட்டப்பெயர், 'ராஜகம்பீர வீரமார்த்தாண்ட சங்கிலி வீரப்ப பேயாண்டித்தேவரவர்கள்'. கன்னங் கறேலென்று கறுத்துப்பெருத்த அவனுடைய உருவ மும், கல்லைத் திரட்டிச் செய்தாற்போன்று, இருப்புச் சல்லடந் தரித்த அவனுடைய துடையும், யானைத் தும்பிக்கை போல் தடித்த அவன் கைகளும், பர்வதம் போல் பருத்து, வளர்ந்து, பரந்த அவனுடைய மார் பும், ஆட்டுக்கடாவின் கொம்புபோல் வளைந்து, திரண்டு கடையிற்கூறிய அவனுடைய மீசையும், திட சித்தத்தைத் தெளியத் தெரிவிக்கும் அவனது உள் ளடக்கிய உதடுகளும் அவனுடைய கூரிய மூக்கும், குறுகிய முகவாய்க்கட்டையும், கண்டோரைக் கலக் கும் கம்பீரமான தோற்றமும் 'இவன் தான் வீரப்பிர தாபன், இவன் தான் வீரப்பிரதாபன்' என்று இடை விடாத மௌனப் பிரசங்கம் செய்து விளக்கின. அவ னுடைய புருவங்களிரண்டும் வீரலட்சுமிக்காக அமைக்கப்பட்டிருக்கும் வில்வளைவு மண்டபங்கள் போல் விளங்கின. அவனுடைய கண்களோ அவன் அதிக திருப்தியுடன் அடிக்கடி அற்புதமாய்ச் சுழற் றுந்தோறும் அவனுடனிருந்தவர்களுடைய உயிரை யும் உணர்வையும் ஊடுருவிச் சென்றன. ஆனால் அவன் சந்தோஷமாயிருக்கும் சமயத்தில் புன்சிரிப்புத் தவழ்ந்த அவன் உதடுகளும், சாந்த சுவரூபமாய் ஜொலிக்கும் அவன் கண்களும் அவன் முகத்திற்கு ஓர் அற்புதமான வசீகர சக்தியைக் கொடுத்தன. அவன்