120 கமலாம்பாள் சரித்திரம் அவர் பேயாண்டித் தேவனைப் பிடித்துவிட்டார்கள் என்றவுடனே 30 கான்ஸ்டேபிள்களையும் கூட்டிக் கொண்டு குதிரை போட்டுக்கொண்டு ஓடி வந்தார். அவர் வருவதற்குள் முத்துஸ்வாமி அய்யர், வேலைக் காரன் வீரனைக் கூப்பிட்டு, வண்டிக்காரனை வண்டி போடச் செய்யச் சொன்னார். வீரன் வண்டிக்காரன் மூக்கன் படுத்திருந்த இடத்துக்குப் போய் 'மூக் கண்ணே, மூக்கண்ணே' என்று சப்தம் போட்டான். பிறகு 'மூக்கா, மூக்கா' என்று சப்தம் போட்டான். பிறகு 'அடமூக்கா அடடேமூக்கா' என்று கூப்பிட்டுப் பார்த்தான், ஒன்றுக்கும் பதிலைக் காணோம். அசைத்து எழுப்பிப் பார்த்தான், அடித்து எழுப்பிப் பார்த்தான், உணர்ச்சி வரவில்லை. செத்துக்கித்துப்போயிட்டானா , மூச்சு துருத்தி ஊதினாப்போல ஊதுது, குறட்டு தயிர் கடையரதே' என்று சொல்லிக்கொண்டு மேலேறித் துவைத்தான். இவனுக்குத்தான் கால் வலித்ததே யொழிய அவ்விடத்திய யோக நிஷ்டைக்கு யாதொரு சலனமுமில்லை. 'இதேதடா கும்பகர்ணனாயிருக்கு' என்று சொல்லிக்கொண்டு அவன் காதில் போய் காத தூரங் கேட்கும்படி கத்திப் பார்த்தான். வீரனுடைய பிரம்மப் பிரயத்தனத்தைக் காட்டிலும் மூக்கனுடைய நித்திரை வைராக்கியம் பலமாயிருந்தது. கடைசியாய் அவனைத் தூக்கி நிறுத்திக்கொண்டு சுவரில் நாலைந்து தடவை பலமாய் மோதினான். நல்ல வேளையாய் எந்த சுவாமி புண்ணியத்திலோ கொஞ்சம் பிரக்ஞை வந் தது. 'என்னடா பாதித் தூக்கத்திலே' என்று சொல் லிக்கொண்டு தலையைச் சொரிந்துகொண்டு சுவரில் சாய்ந்தவண்ணமே மூக்கன் மறுபடி தூங்கத் துவக்கி னான். உடனே வீரன் பளீர் என்று பேயறைந்தாற் போல் அறைந்து 'ஊரெல்லாம் கொள்ளை போகுது, உனக்கு இன்னம் ஒறக்கம் போகல்லை' என்று சொல்லி அவனை வெளியிலிழுத்து வந்தான். இதற்குள் வைத் தியநாதய்யர் வந்து ஒரு நாழிகையாய்விட்டது. பிறகு