உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஓர் அதிரகசியமான கடிதம் 179 தது. இவ்விதமாகச் சாப்பிட்டு, அவனும் சினேகித னுமாகத் திரும்பி வருகையில் தபால்காரன் எதிரே வந்து அவன் கையில் ஒரு கடிதத்தைக் கொடுத்தான். ஏன் இத்தனை நாழிகை யென்று தபால்காரனைக் கேட்டான். அவன் ' இன்றைக்கு மெயிலே இப் போதுதான் வந்தது' என்று சொன்ன மறுமொழி கூட. காதில் படாமல் கடிதத்தை அவன் ஆவலுடன் உடைத்துப் பார்த்தான். அதில் அடியில் வருகிறபடி எழுதியிருந்தது : என் அன்பை அதிகரிக்கின்ற என் பிராண நாயகராகிய சீமா அய்யரவர்களுக்கு அநேக நமஸ் காரம். க்ஷேமம், க்ஷேமத்துக்கு எழுதவும். என் கடிதத்தை கண்டவுடனேயே பதில் எழுதுவதற்கு ஐயரவர்களுக்கு சாவகாசப் படவில்லை. நீங்கள் என்ன செய்வீர்கள் ! பலஜோலிக்காரர். என் ஞாபகம் எங்கேயிருக்கப் போகிறது! மேலும் உத் தரவு கொடுக்க வேண்டியவர்கள் உத்தரவு கொடுத் துத்தானே நீங்கள் பதில் எழுதலாம். இருக்கட்டும், இருக்கட்டும்; நான் நேரில் வந்து உங்களுக்குத் தக்க வழி சொல்லுகிறேன். ராத்திரிக்கு ராத்திரியே வந்து ஓசைப்படாமல் என் மனதைத் திருடிக்கொண்டு போகிறது. அப்புறம் 'கூ கூ' என்றாலும் ரேபட்ட காகிதத்துக்குக்கூட பதில் கிடையாது. தைரியமிருந் தால் நேரே வரவேணும். இல்லாவிடில் சும்மாயிருக்க வேணும். " என் துரையே! நான் என்ன வேடிக்கையாக எழுத வேண்டுமென்றாலும் எழுத முடியவில்லையே . தங்களை விட்டுப் பிரிந்து அனலிலிட்ட மெழுகுபோல உருகி, சோனை மழை பெய்யுமே - ஒருதரம் காற்று வீசுகிறது உடனே பலபலவென்று மழை பெய்கிறதுஅதுபோல் பெருமூச்சும் கண்ணீருமாய் வழியில் படுத் துக்கொண்டிருக்கும் மலைப் பாம்பைப்போல் ஓடாத