உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'பைங்கிளித்தூது பலித்தது' 295 முன் சொன்னவன்: உன்னைவிட்டு ஊரில் எனக்கு வெகுவாழ்வோ! இரண்டு பேரும் இவ்வூரிலேயே இறப் போம். காசியிலிறந்தாலும் கதியுண்டு.' மற்றவன் : 'ஏற்கனவே உள்ள பழி ஒன்று போதாதென்று உன் தாய், தகப்பனார், பெண்டாட்டி யிவர்கள் பழியும் எனக்கு வேண்டுமோ' முன் சொன்னவன் : ' உன்னை விட அவர்கள் இரு வரும் எனக்குப் பெரிதில்லை ; இங்கேயே இருவரும் இறப்போம் வா.' மற்றவன் : 'சுவாமி விசுவேசுவரர், உனக்கு இது சம்மதமா!' என்று உரக்கக் கூவி ' சரி இங்கே உட் கார்ந்திருந்தால் எப்படி!' என்று சொல்ல இருவரு மாய்க் கீழேயிறங்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது உள்ளேயிருந்த லட்சுமி தமிழ்ப் பேச்சாயிருக்கிறது, தன் நாயகன் குரல்போலுமிருக் கிறது என்று திடுக்கிட்டு, சுந்தரத்தை யழைத்து 'வாச லில் யார் பார்' என்று சொல்ல, சுந்தரம் ஓடிவந்து வாசலில் பார்க்க, தனது அத்திம்பேர். ஸ்ரீநிவாசனா யிருக்கக் கண்டு, சந்தோஷத்துடன் ' அத்திம்பேரே' என்று கூவினான். அதைக்கேட்டு ஸ்ரீநிவாசனும், சுப்ப ராயனும் திடுக்கிட்டு திரும்பி சுந்தரத்தைக் கண்டு அவனைத்தட்டிக்கொடுத்து இங்கேயா இருக்கிறீர்கள், அக்கா எங்கே?' என்று கேட்க, சுந்தரம் சந்தோஷம் பெருக்கால் பேசமாட்டாது உள்ளே கை காட்டினான். உடனே ஸ்ரீநிவாசன் விரைந்து உள்ளே செல்ல,லட்சுமி எதிர்கொண்டு ஓடிவந்து அவனை இறுகத் தழுவி மூர்ச் சித்தாள். ஸ்ரீநிவாசன் அவளை இறுக மார்புறத் தழுவி ஆனந்தத்தால் கண்ணீர் பெருக்கினான். சுப்பராயன் சுந்தரத்தைத் தழுவிக்கொண்டு விம்மினான். நெடு நேரம் சென்ற பிறகு, லட்சுமி மூர்ச்சை தெளிந்து,