பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



294 கமலாம்பாள் சரித்திரம் பெருக்கினாள் பாட்டைக் கேட்டவர்கள் பைங்கிளிக் கண்ணியினினிமைக்கும், பாட்டின் திறமைக்கும், உருகியழுதார்கள். பாடிக்கொண்டிருந்த லட்சுமியோ தன் கணவனுக்குக் கண்ணிதோறும் கண்ணிதோறும் தூதுவிட்டுத் தூதுவிட்டு துக்கத்தால் பாடமாட்டாது முகமீது துணிபோட்டுக் கண்ணீரால் நனைந்திருந்த வீணையைக் கைவிட்டுக் கீழேவைத்து கோவென்று அலறி அழுதாள். இப்படியிவர்கள் கரை தெரியாத துக்கக் கடலுள் மூழ்கியிருக்கும் காலத்தில் ஒருநாள், தாங்கள் தங்கியிருந்த ஜாகைக்குக்குக் கொஞ்ச தூரத் துக்குள் திரிகால ஞானியாகிய சச்சிதானந்த சுவாமிகள் என்று ஒரு பெரியவர் இருப்பதாகக் கேள்விப்பட்டு அவரைத் தரிசிக்கும் பொருட்டு அம்மையப்பபிள்ளை, ஜானகியம்மாள், கமலாம்பாள் இம் மூவருமாகப் புறப் பட்டுச் சென்றார்கள். இவர்கள் போய்ச் சிறிதுநேரத் துக்கெல்லாம் அவர்களுடைய ஜாகையின் வாசற்றின் ணையில் இரண்டு சிறுவர் வழிப்போக்காய் வந்து உட் கார்ந்தார்கள். அவர்களுள் பெரியவன் : 'காசிக்கு வந்திருப்பது மெய்யானால் இவ்வளவு அலைந்துமா அகப்படமாட் டார்கள்? சிதம்பரத்தில் நமக்குக் கொடுக்கப்பட்ட கடிதங்கள் பொய்யென்றல்லவோ ஆய்விட்டது. கல் யாணகாலத்தில் எப்பொழுது அவ்வளவு கெட்ட சகு னங்கள் நேரிட்டதோ அப்பொழுதே எனக்கு நம் பிக்கையில்லை. இனி ஊருக்குத் திரும்பவேண்டியது தான்.' மற்றவன்: 'ஊரிலென்ன வைத்திருக்கிறது எனக்கு, நீ மட்டும் போ. பாவம், எனக்காக நீயும் வீணலைச் சலலைகிறாய். நான் அவர்களுக்காக கயாவில் சிராத்தம் செய்துவிட்டு எனக்கும் சிராத்தம் செய்து கொண்டு விடுகிறேன், நீ சீக்கிரம் புறப்படு.'