"பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ.' அம்மையப்ப பிள்ளை, கமலாம்பாள், லட்சுமி, சுந்தரம் முதலானவர்கள் பல ஊர்களில்லைந்து காசிக்கே கடைசியாய் வந்து ஓர் வீட்டில் தங்கியிருந் தார்கள். சில நாள் தங்கியிருந்த பிறகு, ஒருநாள் கம லாம்பாள் அவ்வீட்டில் வீணை யொன்றிருந்ததைக் கண்டு, பகவானைப் பற்றிப் பாடவேண்டுமென்று ஆசையுண்டானதால், லட்சுமியைக் கொஞ்சம் தேற்றி, உபசாரம் சொல்லி, அந்த வீணையை யெடுத் துப் பாடும்படி வேண்ட, அவளும் அரைமனதுடன் இசைந்து, * வீணையைக் கையிலெடுத்து, சுருதி கூட்டி பாடத் தொடங்கினாள். அகமேவு மண்ணலுக்கென் னல்லலெல்லாஞ் சொல்லி சுகமான நீபோய்ச் சுகம்கொடுவா பைங்கிளியே. ஆருமறியாமலெனை யந்தரங்கமாக வந்து சேரும்படியிறைக்குச் செப்பிவா பைங்கிளியே. ஆறாத கண்ணீர்க்கென்னங்க பங்கமானதையும் கூறாததென்னோ குதலை மொழிப் பைங்கிளியே. என்று விடியுமிறைவாவோ வென்றென்று நின்ற நிலையெல்லாம் நிகழ்த்தாயோ பைங்கிளியே. எந்தமடலூடுமெழுதா வென்னிறை வடிவைச் சிந்தைமடலாலெழுதிச் சேர்ப்பனோ பைங்கிளியே. கண்ணின் மணிபோலின்பங் காட்டியெனைப் பிரிந்த திண்ணியருமின்னம் வந்து சேர்வாரோ பைங்கிளியே. - என்றிப்படிப் பாடி வரும்போழுதே கமலாம்பாள் கனவில் தோன்றிய ராமனைக் குறித்துக் கண்ணீர்
- குறிப்பு. - வீணை பூரண வாத்தியம் என்பது பிரசித்தம். சுத்த சத்வமான அதனுடைய அழகிய நாதத்துக்கு எதுவும் ஈடில்லை. இவ்வாத்தியம் நமது ஸ்திரீகளுக்குள் அருமையாகி வருவது மிகவும் பரிதாபமான விஷயம்.