உள்ளடக்கத்துக்குச் செல்

முடியரசன் தமிழ் வழிபாடு/032-049

விக்கிமூலம் இலிருந்து

32. பாடிக் கொண்டேயிருப்பேன்


பாடிக்கொண் டேயிருப்பேன் - என்

பைந்தமிழைச் செந்தமிழை நான்

-பாடிக்

ஓடிக்கொண் டேயிருக்கும் ஊறுஞ்செங் குருதி

ஒடா துறைந்தே ஓய்ந்திடும் நாள்வரை

-பாடிக்

கடும்பிணி கொடுஞ்சிறை கடுகி வந்தாலும்

கலக்கிடும் வறுமைகள் காய்ந்திடும் போதும்

இடும்பைகள் வந்தெனை எற்றிடு மேனும்

எதையும் அஞ்சிடேன் என்றுமே துஞ்சிடேன்

-பாடிக்

பதவியும் பட்டமும் பணங்களுங் காட்டிப்

பகட்டினும் எதற்கும் பணியேன் கைநீட்டி

முதுமொழி என்மொழி முத்தமிழ் மொழியை

மொய்ம்புறக் காத்திட முனைந்திடும் வழியைப்

-பாடிக்

[தாய்மொழி காப்போம்]