ஆசிரியர்:கவியரசு முடியரசன்
←ஆசிரியர் அட்டவணை: மு | முடியரசன் (1920–1998) |
கவியரசு முடியரசன் (அக்டோபர் 7, 1920 - டிசம்பர் 3, 1998) தமிழ்நாட்டின் மூத்த தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சுப்பராயலு-சீதாலக்ஷ்மி என்பார்க்கு அக்டோபர் 7, 1920-இல் பிறந்தவர். துரைராசு என்ற இவரது பெயரை முடியரசன் என்று மாற்றிக் கொண்டார். பாரதிதாசனோடு மிக நெருங்கிப் பழகி அவருடைய முற்போக்கு எண்ணங்களை ஏற்றுப் பாடியவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். சடங்குகளை மறுப்பவர். இவரது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்று வலியுறுத்தி அவ்வாறே நிறைவேறச் செய்தவர். காரைக்குடி மீ. சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர். |
ஆக்கங்கள்[தொகு]
கவிதைத் தொகுதிகள்[தொகு]
01. கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு)
02. கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு)
03. காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு)
04. காவியப் பாவை (நான்காம் பதிப்பு)
05. ஞாயிறும் திங்களும்
06. தமிழ் முழக்கம்
07. தாய்மொழி காப்போம்
08. நெஞ்சிற் பூத்தவை
09. நெஞ்சு பொறுக்கவில்லையே
10. பாடுங்குயில்
11. புதியதொரு விதி செய்வோம்
12. மனிதனைத் தேடுகிறேன்
13. மனிதரைக் கண்டுகொண்டேன்
14. முடியரசன் கவிதைகள் (முதல் தொகுதி)
15. முடியரசன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி)
16. முடியரசன் கவிதைகள் (இரண்டு தொகுதிகளும்)
17. முடியரசன் தமிழ் வழிபாடு
18. வள்ளுவர் கோட்டம்
காப்பியங்கள்
19. ஊன்றுகோல்
20. பூங்கொடி
21. வீரகாவியம்
கதைகள்[தொகு]
22. இளம்பெருவழுதி
23. ஊன்றுகோல்-2
24. எக்கோவின் காதல்
கட்டுரைகள்
25. எப்படி வளரும் தமிழ்
26. சீர்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார்
கடித இலக்கியம்[தொகு]
27. கவியரசர் முடியரசன் கடித இலக்கியம் (அன்புள்ள பாண்டியனுக்கு, இளவரசனுக்கு)
28. முடியரசன் படைப்புகள்-10 பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு)
பாட நூல்கள்[தொகு]
29. தமிழ்ச் சோலை
30. பாடுங்குயில்கள்
31. முடியரசன் தமிழ் இலக்கணம்
32. முடியரசன் தமிழ் உரைகள்