விஜயலஷ்மி பண்டிட்/அத்தியாயம் 12
உலகத்திலே கொடுமை மேகங்கள் குழ்ந்து உறுமத் தொடங்கின. முஸோலினி, ஹிட்லர் ஆகிய பாசிச-நாஜிச வெறியர்கள் யுத்த விதையைத் துவிக் கொண்டிருக்தார்கள்.
நேருவின் குடும்பத்திலும் சோகமேகம் கவிந்தது. 1938-ம் வருஷம் ஜனவரி மாதத்தில் ஒரு நாள் ராணி நேரு திடீர் மரணம் அடைந்தாள். அவள் இறந்த இருபத்து நான்கு மணிநேரத்திற்குள்ளாகவே-தங்கையிடம் உயிரை வைத்திருந்த-'பீபி அம்மா'வின் ஆவியும் பிரிந்தது. அன்னையை இழந்ததால் வாழ்க்கையில் ஈடுசெய்ய முடியாத ஒரு பகுதியைப் பறிகொடுத்தோம் என்று நேருவும் சகோதரிகளும் வருந்தினர்கள்.
நாடு பிடிக்கும் வெறி ஆசை பற்றிய சர்வசதிகாரிகளின் தயவினால், 1939-ம் வருஷம் பிற்பகுதியில் இரண்டாவது உலக மகாயுத்தம் முளைத்து, ஓங்கி வளர்ந்தது. எதேச்சாதிகார குணம் படைத்த பிரிட்டிஷார் இந்தியாவையும் யுத்தத்தில் இழுத்துவிட்டனர்.
நாட்டினரின் சம்மதம் பெறாமல்–சட்டசபைகளையோ, மந்திரிகளையோ கலந்து ஆலோசிக்காது–'தான் நினைத்த மூப்பாக', தனக்குச் சாதகமாக பிரிட்டிஷ் சர்க்கார் செயல் புரிந்ததை இந்தியர் கண்டித்தனர். சுதந்திரத்தை லட்சியமாகக் கொண்ட காங்கிரஸ் அங்நிய எதேச்சாதிகாரத்தை எதிர்த்து மறுபடியும் போராட வேண்டியதுதான் என்று திட்டமிட்டது.அதனால், காங்கிரஸ் மந்திரி சபைகள் ராஜிநாமாச் செய்தன.
பதவியைத் துறந்து வெளியேறிய தலைவர்கள் காந்திஜியின் ஆக்கினைக்காகக் காத்திருந்தனர். எதிரிக்குக் கூட பெருந்தீங்கு விளேவிக்கக் கூடாது எனும் நல்லெண்ணம் உடைய மகாத்மா திவிரமான போராட்டத்துக்கு இசையவில்லை. எதிர்ப்பைக் காட்டுவதற்காக 'தனிநபர் சத்தியாகிரகம்' மட்டும் போதுமானது என்று அறிவித்தார் அவர் .
பிரிட்டனுக்கும் ஜெர்மனிக்குமிடையே மூண்ட யுத்தம் நாசப் பாதையிலே பயங்கரமாக முன்னேறிக் கொண்டிருந்தது.காலத்துக்கேற்ப, பிரிட்டிஷார் மன மாற்றம் கொள்வர். இந்தியாவுக்கு விடுதலை தருவர் என்று எதிர்பார்த்த நாட்டுமக்கள் ஏமாற்றமே கண்டனர்.செயல் திறம் இழந்து குமைந்தார்கள்.
வேறு வழி இல்லை எனக் கண்டவுடன் காந்திஜி 1940-ல் 'தனி நபர் சத்தியாக்கிரக'த்தை ஆரம்பித்து வைத்தார். நாட்டின் ஆத்மீக எதிர்ப்பைக் காட்டும் ஏகப் பிரதிநிதியாக, காந்திஜியால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சத்தியாக்கிரகி வினோவபா பாவே, இரண்டாவது சத்தியாக்கிரகி ஜவாஹர்லால் நேரு.
வினோபாவை சத்தியாக்கிரகத்தின் போது கைது செய்த சர்க்கார், நேருவுக்கு அந்தச் சந்தர்ப்பத்தை அளிக்கவே இல்லை. காந்திஜீயைக் கண்டு பேசி விட்டுத் திரும்புகிற பாதையில் நடு வழியில் நேருஜீயை கைது செய்தனர். அவருக்கு நான்கு வருஷக் கடுங்காவல் தண்டனை விதித்தது சர்க்கார்.
அரசாங்கத்தின் கன்னெஞ்சக் கொடுஞ் செயல் நாட்டையே ஒரு உலுக்கு உலுக்கியது. நாட்டு மக்களின் ஆவேசத்தைத் தூண்டி விட்டது. சத்தியாக்கிரகத்தில் பங்கு பெறப் பலரும் துடித்தார்கள்.
இந்த சத்தியாக்கிரகத்தின் போது, காந்திஜீயின் அனுமதி பெற்று,கிருஷ்ணாவின் கணவர் ராஜாவும் சிறை புகுந்தார். கிருஷ்ணா, காந்தியின் அனுமதி கோரிய போது, மகாத்மா மறுத்து விட்டார். சின்னஞ் சிறு குழந்தைகள் இருக்கின்றன; அவற்றைக் கவனிக்க வேண்டிய கடமை அவளுக்கு உண்டு என்று அறிவித்துவிட்டார் மகாத்மா. அவரது வாக்கை கிருஷ்ணா எப்படித் தட்டிக் கழிக்க இயலும்?
விஜயலக்ஷ்மி சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டாள். 1940 டிசம்பர் 9-ம் தேதி அவள் சத்தியாக்கிரகம் செய்தாள். சர்க்கார் உடனே அவளைக் கைது செய்து, நான்கு மாதம் சிறைவாசம் என்று தண்டனை விதித்தது.
இரண்டாவது முறையாகச் சிறைத் தண்டனை பெற்ற விஜயலக்ஷ்மி நான்கு மாதங்களையும் ஐக்கிய மாகாணத்தில் உள்ள் நைனி நகர ஜெயிலில் கழிக்க நேர்ந்தது.
உலக நாடுகள் யுத்தக் கொடுமைகளை அனுபவித்து அவதியுற்றன. பிரிட்டனின் நெருக்கடியான
நிலைமையைப் பயன் படுத்திக் கொண்டு, இந்தியாவில் போராட் டம் துவக்கி ஆட்சியினரைத் திணற வைக்க வேண்டும் என்றுறு காந்திஜி விரும்பவே இல்லே. நேர்மையான முறையில் உரிமைகளைக் கோரினார் அவர்.அவருக்கும் வைஸ்ராய்க்கு மிடையே கடிதப் போக்கு வரத்து நடைபெற்றது ராஜதந்திரத்தில் ஊறிப் போயிருந்த ஆங் கிலேயர் முடிவும் தெளிவும் நிறைந்த பதில் எதுவும் தரவில்லை . கண்துடைப்பு சமாதானங்களும் தட்டிக் கழிக்கும் உறுதிமொழிகளும் கூறினர்.சமரசம் பேசத் தூதர்களை அனுப்பி காலம் போக்கினர்.தலைவர்கள் பலரை விடுதலை செய்தனர்.அதே வேளையில் யுத்த நிதி என்ற பெயரில் நாட்டு மக்களிடமிருந்து பணத்தை சுரண்டினர்.ஆயிரகணக்கான மக்களைப் பட்டாளத்தில் சேர்த்தனர்.
1942 ம் வருஷம் இந்திரா நேரு பெரோஸ் காந்தியை திருமணம் செய்து கொண்டாள். காந்திஜீயின் ஆசியுடன் நிழ்ந்த காதல் மணம் அது. சேவா கிராமத்திலே கல்யானனத்தை நடத்தலாம் என்றார் காந்திஜி.
ஆயினும், விஜயலக்ஷ்மியும் கிருஷ்ணாவும் இந்திரா வின் திருமணம் ஆனந்த பவனத்தில் தான் நடைபெற வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். பொலிவு குன்றி யிருந்தபவனத்தில் மீண்டும் ஆனந்தம் பொங்கவேணும் அதற்கு இந்திராவின் கவியாணம் ஆரம்ப விழாவாக அமையும் என்று ஆசைப்பட்டார்கள் அவர்கள்.
அவர்கள் விரும்பிய விதமே கலியாணம் சிறப்பாக நிகழ்ந்தது. ஆனந்த பவனமும் சில தினங்கள் கோலா கலமாக விளங்கியது.