வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி, நவம்பர் 10, 1920 - நவம்பர் 9, 2006) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள். எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர். அரசுப் பணியிலிருந்து விலகிய பின்னர் தொடக்கத்தில் இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய சிறுகதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவருடைய பெரிய மனுஷி எனும் சிறுகதை அனைத்து இந்திய மொழிகளிலும் நேரு பால புத்தக வரிசையிலும் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய “வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
412223Q7912417வல்லிக்கண்ணன்வல்லிக்கண்ணன்வல்லிக்கண்ணன்19202006வல்லிக்கண்ணன்வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி, நவம்பர் 10, 1920 - நவம்பர் 9, 2006) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள். எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர். அரசுப் பணியிலிருந்து விலகிய பின்னர் தொடக்கத்தில் இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய சிறுகதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவருடைய பெரிய மனுஷி எனும் சிறுகதை அனைத்து இந்திய மொழிகளிலும் நேரு பால புத்தக வரிசையிலும் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய “வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.