தமிழில் சிறு பத்திரிகைகள்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக





உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.



தமிழில் சிறு பத்திரிகைகள்
 


வல்லிக்கண்ணன்
 
மணிவாசகர் பதிப்பகம்
31, சிங்கர் தெரு, பாரிமுனை,
சென்னை-600108.

முதல் பதிப்பு : டிசம்பர் 2004
திருவள்ளுவர் ஆண்டு : 2035
உரிமை : ஆசிரியர்க்கு
விலை : ரூ. 120.00

மணிவாசகர் வெளியீட்டு எண் : 1.136

நினைவில் வாழும்

நிறுவனர்
ச. மெய்யப்பனார்

டாக்டர் ச. மெய்யப்பன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர்.

பல்கலைக் கழகங்கள் பலவற்றில் இவர் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார்.
“வள்ளுவம் இதழின் நிறுவன ஆசிரியர்.
குன்றக்குடி அடிகளார் ‘தமிழவேள்’ என்றும் தருமபுரம் ஆதீனத் தலைவர் ‘செந்தமிழ்க் காவலர்’ என்றும் விருதுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளனர்.
'பதிப்புச்செம்மல்' என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர்.

கிடைக்குமிடம் :
மணிவாசகர் நூலகம்
12-B, மேல சன்னதி, சிதம்பரம்- 608001. ✆230069
31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-600108. ✆25361039
5. சிங்காரவேலுதெரு, தி.நகர், சென்னை-600017, ✆24357832
110, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை.625001. ✆2822853
15, ராஜ வீதி, கோயமுத்துர்-641001. ✆2397155
28,நந்தி கோயில் தெரு, திருச்சி-620002. ✆2706450


அச்சிட்டோர்: மணிவாசகர் ஆப்செட்பிரிண்டர்ஸ்: சென்னை-600021, தொலைபேசி:25954528

காணிக்கை

பதிப்புச் செம்மல்

ச. மெய்யப்பனார்

21.6.1933 – 28.6.2004


முன்னுரை

தமிழ்ச் சிறுபத்திரிகைகளின் வரலாறு சுவாரஸ்யமான பல உண்மைகளை வெளிப்படுத்தக் கூடியது. இலட்சிய நோக்குடைய ஒரு சிலரது விடாப்பிடியான முயற்சிகளையும், மவுனப் போராட்டங்களையும், அவர்கள் ஏற்றுக்கொள்கிற சிரமங்களையும் எடுத்துக்காட்டுவது அது. அதேசமயம அவர்களது தோல்வியையும் (தோல்வி என்ற சொல் சரியில்லை என்று தோன்றினால், செயல்முடக்கம் மற்றும் செயலற்ற தன்மையையும் இவ்வரலாறு பளிச்செனப் புலப்படுத்துகிறது.

சிறுபத்திரிகைகளின் வரலாறு முழுவதும் உற்சாகமான பத்திரிகை எழுச்சிகளையும், அவற்றின் 'சென்று தேய்ந்திறுதல்’ களையும், முடிவில் ‘அன்வெப்ட் அன்ஹானர்ட் அன்ட் அன்சங்' என்ற தன்மையில், அவை கவனிப்பற்று - பாராட்டுரைகளின்றி - நினைவு கூர்வாருமின்றி மறைந்து போக நேர்வதையும் கொண்டிருக்கிறது.

ஆனாலும், தெரிந்துகொண்டே கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்து, குன்றாத ஊக்கத்தோடும் குறையாத தன்னம்பிக்கையோடும், ஒன்றைச் சாதித்து முடிக்க வேண்டும் என்ற பிடிவாதத்துடனும் செயல்பட்டவர்களின் கதையாகவும் இருக்கிறது இந்த வரலாறு.

ஒவ்வொரு சிறுபத்திரிகையின் முதலாவது இதழ் வெளியிடுகிற அறிவிப்பு எவ்வளவு நம்பிக்கையை, எவ்வளவு ஆசைக் கனவுகளை, எதிர்பார்ப்புகளை எல்லாம் முழக்கமிடுகிறது! ஆனால் அவை பொய்த்துப் போகும்படி காலம் விளையாடி விடுகிறது. தன்னம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் உழைக்க முனைந்தவர்களின் செயல்பாடுகள் பலவும் மறதிப்பாழில் மக்கிப் போகின்றன.

அது நியாயமில்லை, ஏதோ ஒரு உத்வேகத்தில் பணிபுரியத் துணிந்தவர்களின் சோதனைகள் மற்றும் சாதனைகள் குறித்து, அவர்களுக்குப் பின்வருகிறவர்கள் - அதே பாதையில் நடைபோட வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் - தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அவர்களது செயல் முயற்சிகளை ஒரளவுக்காவது பதிவு செய்ய வேண்டியதும் அவசியம்தான்.

இந்த என்னத்தோடுதான் நான் ‘தமிழில் சிறு பத்திரிகைகள்' கட்டுரைத் தொடரை எழுதலானேன். ‘தீபம்’ பத்திரிகை எனக்குத் தாராள இடம் தந்தது.



என் விருப்பம் போல், கட்டுப்பாடின்றி. எழுதுவதற்கு ‘தீபம் ஆசிரியர் நா. பார்த்தசாரதி இடம் தந்திராவிட்டால் 'சரஸ்வதி காலம்’ ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், ‘பாரதிக்குப்பின் தமிழ் உரை நடை’, ‘தமிழில் சிறு பத்திரிகைகள்' ஆகிய பயனுள்ள கட்டுரை வரிசைகள் பிறந்திருக்க மாட்டா. அமரர் நா. பா. அவர்களுக்கும், ‘தீபம்’ இதழுக்கும் என் நன்றி என்றும் உண்டு.

இது தமிழில் வெளிவந்த சிறுபத்திரிகைகள் அனைத்தையும் பற்றிச் சொல்கிற முழுமையான வரலாறு இல்லை. என் கவனிப்பை ஈர்த்து, என் உள்ளத்தில் பதிவுகளை ஏற்படுத்திய, முக்கியமான பத்திரிகைகள் பற்றிய தகவல்களே இவை. கனமும் ஆழமும் கொண்ட புதுமையான சோதனை முயற்சிகள் பல எனக்குத் தெரியவராமலே போயிருக்கலாம். அப்படி விடுபட்டிருக்கக் கூடியவற்றுக்கு எனது அறியாமைதான் காரணம் ஆகும். மற்றப்படி அத்தகைய முயற்சிகளை அலட்சியப்படுத்துவதோ, புறக்கணிப்பதோ என் எண்ணமில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்தக் குறையை இப்போது மணிவாசகர் பதிப்பகம் தீர்த்து வைக்கிறது. இதை அழகான நூல் வடிவில் கொண்டுவரும் மணிவாசகர் பதிப்பகத்துக்கும். அன்புடன் உதவிய நினைவில் வாழும் பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பனார் அவர்களுக்கும் என் நன்றி.

வல்லிக்கண்ணன்.

உள்ளுறை


பக்கம் எண்
1. அறிமுகம் 11
2. சில முன்னோடிகள் 15
3. மணிக்கொடி 19
4. மணிக்கொடியின் பிற்காலம் 23
5. கலா மோகினி 27
6. கிராம ஊழியன் 34
7. சில தகவல்கள் 44
8. சரஸ்வதி 55
9. சாந்தி 59
10. எழுத்து 64
11. ‘எழுத்து’ காலத்தில் 70
12. கசட தபற 74
13. ஞானரதம் 79
14. ஃ( அஃக் ) 83
15. நீலக்குயில் 89
16. சதங்கை 94
17. பிரக்ஞை 99
18. வானம்பாடி 109
19. கொல்லிப் பாவை 116
20. தெறிகள் 123
21. சுவடு 127
22. வைகை 133
23. சிதைந்த கனவுகள்‌ 142
24. விழிகள்‌ 149
25. மானுடம்‌ 152
26. ஒரு விளக்கம்‌ 155
27. தாமரை 159
28. சிகரம்‌ 162
29. முற்போக்கு இலக்கிய இதழ்கள்‌ 168
30. யாத்ரா 175
31. இலக்கிய வெளிவட்டம்‌ 184
32. வாசகன்‌ 189
33. புதிய வானம்‌ 192
34. மகாநதி 196
35. முழக்கம்‌ 199
36. சில புதிய முயற்சிகள்‌ 205
37. விடியல்‌ 208
38. இடது சாரிப்‌ பத்திரிகைகள்‌ 214
39. ஆர்வத்தின்‌ மலர்ச்சிகள்‌ 220
40. வித்தியாசமான வெளியீடுகள்‌ 225
41. படிகள்‌ 231
42. பரிமாணம் 243
43. தீவிரவாதப்‌ பத்திரிகைகள்‌ 245
44. சர்வோதயம்‌ 251
45. இன்னும்‌ சில பத்திரிகைகள்‌ 255
46. இலக்கிய இதழ்கள்‌ 258
47. பாராட்டப்பட வேண்டிய முயற்சிகள்‌ 272
48. பொங்கும்‌ தமிழமுதம்‌ 278
49. வேறு சில பத்திரிகைகள் 281
50. மல்லிகை 284
51. இலங்கை இதழ்கள் 291
52. இன்னும் சில பத்திரிகைகள்⁠ 304
53. கணையாழி⁠ 311
54. பாரதி சோலை⁠ 317
55. தீபம்⁠ 320
56. முடிவு இல்லாத வரலாறு 325
57. எண்பதுகளிலும் பிறகும் 331