32
யும், அவனது சுற்றத்தாரையும் கெடுத்துவிடும்" என்பது இக் குறளின் பொருள்.
ஒருவன் கொடுப்பதை-படிப்பதை-முன்னேறு வதைக் கண்டு விரும்பித் தானும் அவ்வாறு செய்ய வேண்டும் என முயற்சிப்பது “பொறாமை” ஆகாது. அது “ஊக்கம்” என்றாகிவிடும். தா னு ம் அவ்வாறு செய்யாமல், பிறர் செய்வதையும் பொறாமல், அவனைத் தடுக்கும் இழிசெயலே “அழுக்கறுத்தல்” என்றாகும். இதனையே இக் குறளிலுள்ள “கொடுப்ப தழுக் கறுத்தல்” என்பது கூறுகிறது.
“அழுக்காறு கொண்டு தடுப்பது தீது; அவன் கெடுவான்” எனக் கூறவந்த வள்ளுவர், அவ்வாறு கூறாமல் “தடுப்பவனது சுற்றம் கெடும்” என இக் குறளிற் கூறியிருப்பது ஆராயத் தக்கதாகும்.
“கேடு” அடைவதற்கும் ஒரு அளவுண்டு. உண்பதற்கு நல்லுணவு கிடைக்காத அளவிற்குச் சிலர் கேடடைவர்; ஆனால், இவனது சுற்றமோ உண்ணுவதற்கு எதுவுமே கிடைக்காத அளவிற்குக் கேடுறுமாம். அது மட்டுமல்ல, உடுத்துவதற்கு நல்லாடை கிடைக்காத அளவிற்குச் சிலர் கேடடைவர்; ஆனால், இவனது சுற்றமோ உடுத்து வதற்கு எதுவுமே கிடைக்காத அளவிற்குக் கேடுறுமாம். இவ்வுண்மையை, இக் குறளிலுள்ள “அழுக்கறுப்பான் சுற்றம் உண்பதூஉம், உடுப்பதூஉம் இன்றிக் கெடும்” என்ற சொற்றொடரால் நன்கறியலாம்.
உடையின்றேல் இழிந்துபோவான். உணவின்றேல் மெலிந்து போவான். அதுவும், ஒருவனுக்கு இந்த இழி நிலை; வீடு, நிலம், தொழில், பணம், பண்டம் முதலிய அனைத்தும் இழந்த பிறகே ஏற்படும். ஆதலின் இக் கேடு பெருங்கேடு ஆகும் என்பதையும், இவ்விழப்பு பேரிழவு