இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3. அடக்கமுடைமை
"காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினுஉங் கில்லை உயிர்க்கு."
என்பது திருக்குறளில் அடக்கமுடைமை என்ற தலைப்பில் இரண்டாவதாக வந்துள்ள குறள்.
நாமெல்லாம் பொன்னையும் பொருளையும் உடைமைகள் எனக் கருதி வருகிறோம். வள்ளுவரோ இவையல்லாத உடைமைகளைப் பற்றிக் கூறுகிறார். அவைகளையும் அதிகாரத்தின் தலைப்புகளாக அமைத்திருக்கிறார். அவை பத்து. அவற்றை வரிசையாக வைத்து முறைப்படுத்தினால் முதலில் வந்து நிற்பது “அடக்க முடைமையே” அதைத் தொடர்ந்து வருகிற மற்ற உடைமைகள் அருளுடைமை, அறிவுடைமை, அன்புடைமை, ஆள்வினையுடைமை, ஊக்கமுடைமை, ஒழுக்கமுடைமை நாணமுடைமை, பண்புடைமை, பொறையுடைமை என்பன.
ஆற்றலுள்ளவர் அடங்குவதற்கே “அடக்கம்” என்று பெயர். ஆற்றலற்றவரின் அடக்கம் ‘அடக்கம்’ என்ற பெயரைப் பெறாது. “கற்றுணர்ந்து அடங்கல்”