இளையர் அறிவியல் களஞ்சியம்/அடிநாச்சதை

விக்கிமூலம் இலிருந்து

அடிநாச்சதை : இதை 'உள் நாக்கு' என்றும் கூறுலார்கள். ஆங்கிலத்தில் இது 'டான்சில்' (Tonsil) என்று அழைக்கப்படுகிறது. அடி நாச்சதை தொண்டையில் உணவுக் குழலுக்கு இருபுறமும் அமைந்துள்ளன. இவை முட்டை வடிவில் உள்ளன. தசையால் ஆனவை. இவை ஒரு வகை நிணநீர் திசுவைச் சேர்ந்தவை. இவை வாயின் உட்புறத்தில் அமைந்துள்ளன. இதன் மூலம் மூச்சுக்குழல், உணவுக்குழல் இன்னும் அடுத்துள்ள பிற பொந்துகளையும் கிருமிகளின் தாக்குதலிலிருந்து இவை காக்கும் காப்பானாகவும் பணியாற்ற முடிகிறது.

அடிநாச்சதை (டான்சில்)

எனினும், சிற்சில சமயங்களில் அடி நாச் சதை அழற்சி அடைவதும் உண்டு. அப்போது அப்பகுதி நுண்கிருமிகள் வாழுமிடமாக மாறிவிட ஏதுவாகின்றது. இதன் மூலம் இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புக்கள் பாதிப்படைய நேர்கின்றது. அத்தகைய தருணங்களில் இவ்வழற்சியைப் போக்க அறுவை மூலம் அடிநாச்சதைகள் அகற்றப்படுகின்றன. இந்த அறுவை சிகிச்சையால் பாதிப்பு ஏதும் ஏற்படுவதில்லை.