இளையர் அறிவியல் களஞ்சியம்/ஆப்பிள் (செயற்கைக்கோள்)

விக்கிமூலம் இலிருந்து

ஆப்பிள் (செயற்கைக்கோள்) : இந்தியா ஏவிய முதல் செயற்கைக்கோளின் பெயர் ‘ஆப்பிள்' (APPLE) என்பதாகும். இது 'Ariane Passenger pay load experiment’ என்ற ஆங்கிலச் சொற்களின் முன்னெழுத்துச் சேர்க்கையாகும். இது ஏரியான் விண்கோள் ஊர்தியால் 1981 ஜூன் 19ஆம் நாள் ஏவப்பட்ட செயற்கைக்கோள் ஆகும். இது 1991 ஜூலை 16ஆம் நாள் சுமித்திராவுக்கு மேல் 86,000 கி.மீ. உயரத்தில் நிலைபெற்றது. இரண்டாண்டு காலம் செய்தித் தொடர்புச் சாதனமாகப் பயன்பட்டு வந்தது. இதை உருவாக்க

ஆப்பிள் செயற்கைக்கோள்

இந்திய அறிவியல் வல்லுநர்கட்கு மூன்றாண்டுகள் பிடித்தன. இதன் வெற்றிகரமான செயற்பாடுகள் இத்துறையில் மேலும் மேலும் திட்ட

செயற்கைக்கோள் மூலம் செய்தி பரவுதல்

மிட்டுச் செயலாற்ற நம்மவர்க்கு உந்து சக்தியாக அமைந்தன.

இதன் மூலம் நான்கு இந்திய நகரங்களில் உள்ள மாணவர்கட்கு உயர் தொழில்நுட்பக் கல்வி அளிக்கப்பட்டது. பல்வேறு இடங்களிலிருந்த கணிப்பொறிகள் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. குடியரசு நாள் விழாவும் பிரதமரின் வெளிநாட்டுப் பயண திகழ்ச்சிகளும் நாடெங்கும் ஒளிபரப்பப்பட்டன. இதன் மூலம் இந்திய ஒருமைப்பாட்டு உணர்வு மக்களிடையே வலுப்படஏதுவாயின. இவை ஆப்பிள் செயற்கைக்கோளின் சாதனைகளாகும்.

அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட விண்வெளி செயற்கைக்கோள் தொலைத் தொடர்பு திட்டங்களை வகுக்க வழியமைத்த பெருமை இச்செயற்கைக் கோளுக்கு உண்டு.