இளையர் அறிவியல் களஞ்சியம்/சூறாவளி
சூறாவளி : 'டைபூன்’ 'சைக்ளோன்’ என்றெல்லாம் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சூறாவளி சுழற்காற்று பெரும்பாலும் கடற்பகுதிகளிலிருந்து உண்டாகிறது. வெப்பம் காரணமாகக் காற்றுச் சூடேரி மேலெழுந்து செல்லும். அப்போது காற்றில்லா அப்பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உண் டாகும். அவ்விடத்தை நோக்கிப் பாயும் காற்று, பூமிச் சுழற்சி காரணமாகச் சுழன்று பாயும். இதுவே சூறாவளிச் சுழற்காற்று, பெரும் புயல் வடிவில் கடலிலிருந்து தரையை நோக்கிப் பாயும். இப் புயற்காற்றால் பேரலைகள் உருவாகும், அவை கடற்கரைப் பகுதியில் பாய்ந்து வெள்ளக் காடாக்குவதும் உண்டு. இப்புயலின் போது வரும் கருமேகங்கள் பெரு மழையாகப் பெய்யும். இப்புயல் காற்றுக்கு ஒரு
மையம் இருக்கும். அஃது 'புயற்கண்’ அல்லது 'சுழி' எனக் கூறப்படுகிறது. இச் சூறாவளிப் புயக்காற்று மணிக்கு 50 முதல் 800 கி.மீ. வேகத்தில் வீசி மரங்களையும் வீடுகளையும் சேதமடையச் செய்யும்.
இத்தகைய சூறாவளிப் புயல் இந்தியாவைப் பொறுத்தவரை கிழக்குக் கடற்கரையிலேயே உருவாகி வீசுகின்றன. இதனால் இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியும் பங்களாதேசின் கடற்கரைப் பகுதியும் பாதிப்புக்காளகின்றன. நவம்பர் முதல் மேவரை இத்தகைய சூறாவளிக்காற்று தென் இந்தியாவின் மேற்குக்கரைப் பகுதிகளிலிருந்து வடபகுதியில் வீசுவதுண்டு.
காற்றின் வேகத்தைப் பொறுத்து வெவ்வேறு பெயர்களால் இது அழைக்கப்படுகிறது.