பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

வேங்கடம் முதல் குமரி வரை

வசதியாக இருந்து பார்க்க ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகிகள் செய்திருக்கிறார்கள். சரியாய்ப் பதினோரு மணி அளவில் இரண்டு வெள்ளைக் கழுகுகள் மலையைச் சுற்றியும்,

கழுகுகளுடன் பண்டாரம்

மலையில் உள்ள கோயிலைச் சுற்றியும், மலையில் உள்ள கோயிலைச் சுற்றி வட்டமிடுவதைப் பார்ப்போம்.

அதில் ஒன்று கோயில் மதில் சுவரிலே வந்து தங்கும். அதன் பின், படிப்படியாக இறங்கித் தத்தித் தத்தி ஒரு சிறு பாறையிலே சர்க்கரைப் பொங்கல் தட்டோடு வந்திருக்கும் பண்டாரத்தின் பக்கத்துக்கு வந்து சேரும். அவர் கையிலே உள்ள சர்க்கரைப் பொங்கலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடும். அங்குள்ள தண்ணீரிலே தங்கள் அலகுகளைக் கழுவிக் கொண்டு, திரும்பவும் வட்டமிட்டுப் பறந்து, வான் வழியில் மறைந்து போகும்.

அதன் பின் அங்கு கூடியிருப்பவர்கள் என்ன என்ன எல்லாமோ பேசிக் கொள்வார்கள். ஒருவர் சொல்வார்: 'இந்த இரண்டு கழுகுகளும் காலையில் காசியில் கங்கையில் ஸ்நானம் செய்கின்றன. மத்தியானம் உணவு அருந்தக் கழுக்குன்றம் வந்து விடுகின்றன. இரவு ராமேஸ்வரம் கோயில் கோபுரத்தில் சென்று நித்திரை செய்கின்றன!' என்று.

இருக்கலாம். ஆனால் காசியிலும் ராமேசுவரத்திலும் இவர்களுக்குப் பூஜை இல்லை. பார்த்ததற்குச் சாட்சியும்