தமிழ்ப் பழமொழிகள் 4/ல

விக்கிமூலம் இலிருந்து




லங்கணம் பரம ஒளஷதம். 19415


லங்கிணி இலங்கைக்குக் காவல்.

லயம் கமலாலயந்தான்.

லவா லவா என்று அடித்துக் கொள்கிறான்.

(போல போல என்று.)

லஜ்ஜையை விட்டுக் கஜ்ஜையைக் கட்டு.

லக்ஷ்மி வரும்போது அழகு; மூதேவி போகும்போது அழகு. 19420


லக்ஷணம் அவலக்ஷணம் முகத்திலே.

லா

லாட்டரி அடிக்கிறான்.

லாபம் காட்டுகிறவர்களைக் காட்டிலும் வனிதம் கசட்டுகிறவர்களுக்கே காரியம் கை கூடும்.

லி

லிங்கத்திற்கு எண்ணெய் வழிய விட்டாற் போல.

லோ


லோகாபி ராமம். 19425


லோகோ பின்ன ருசி.

லோபிக்கு இரு செலவு.

(இரட்டைச் செலவு.)

லோபிக்கு நானாவிதத்திலும் சேதம்.


லெள


லெளசிகம் வைதிகம் இரண்டும் வேண்டும். 19430


வக்கணைக் காரன் புளுகு வாசற்படி மட்டும்.

(வாயிற்படி மட்டும்.)

வக்கீலும் வைத்தியனும் வாசலில் நாய் கட்டி வைத்தாற் போல.

வக்குச் சிக்காய் மாட்டிக் கொள்கிறது.

வகுத்து அறியாமல் துணியாதே; படபடப்பாகச் செய்யாதே.

வகை அறிந்து செய்தால் வாதம் பலிக்கும். 19435




வகை தொகை இல்லாத பேச்சும் புகையிலை இல்லாத பாக்கும்

வழவழா கொழ கொழா.

வகை மடிப்பிலே மாட்டிக் கொண்டது.

வங்கணக்காரன் புளுகு வாசற்படி மட்டும்.

வங்கத்துக்கு நிகர் வங்கம்; தங்கத்துக்கு நிகர் தங்கம்.

வங்கம் இறுகினால் மகாராஜன் ஆகலாம். 19440


வங்கம் கட்டினால் தங்கம்.

வங்கம் குத்தத் தங்கம் தேயுமா?

வங்கம் கெட்டால் பங்கம்.

வங்கம் தின்றால் தங்கம் ஆகும்.

வங்கரை கொங்கரையாய் மாட்டிக் கொள்கிறது. 19445


வங்காயக்காரனுக்கு வாய்க் கொழுப்புச் சீலையால் வழிகிறது.

வங்காளத்து நாய் சிங்காதனம் ஏற, வண்ணாரக் குடி நாய் வெள்ளாவி ஏறிற்றாம்.

வங்காளம் போனாலும் வாய்ச் சொல் ஒரு காசு; ஈழம் போனாலும் துடுப்பு ஒரு

காசு.

வங்காளம் போனாலும் வாரியல் வாரியல்தான்.

(வாரியல்-துடைப்பம்.)

வங்காளம் போனாலும் விளக்குமாறு கால் பணம். 19450


வங்கிசம் வார்த்தைக்கு அஞ்சும்; புழுக்கை உதைக்கு அஞ்சும்.

(புழுக்கை உணவுக்கு அஞ்சும்.)

வங்கு நாயை வெளுத்தாற்போல் வெளுக்கவேண்டும்.

வங்கு பிடித்த நாய் வழியில் நின்றாற் போல.

வங்கை வைத்தால் தன் குடிக்கு அனர்த்தம்.

வச்சத்துக்கு மேலே வழி இல்லை; பிச்சைக்குப் போகச் சுரைக் குடுக்கை இல்லை. 19455


வச்ச நாபியிலே புழுத்த புழு.

வச்ச நாபியை உப்புப் பார்க்கலாமா?

வச்சிரம் அளந்த கையால் வைக்கோல் துரும்பு எடுக்கலாயிற்று.

வசனம் பண்ண உபாயம் காரணம்.

வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி என்றது போல். 19460


வஞ்சகம் இல்லாமல் வளர்ந்திருக்கிறான்.

வஞ்சகம் நெஞ்சைப் பிளக்கும்.

வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.



வஞ்சகர் உறவை வழுவி விலகு.

வஞ்சகருக்கு என்ன நேசம் காட்டினாலும் நெஞ்சில் தேசம் கொள்ளார். 19465

(வாஞ்சை காட்டினாலும்.)


வஞ்சகருக்குப் பால் ஊட்டினாலும் தஞ்சாய் விடும்.

(பாலமுதும் நஞ்சு.)

வஞ்சனைக்கு முதற் பாதம்.

வஞ்சனை நெஞ்சை அடைக்கும்.

வஞ்சனை நெஞ்சைப் பிளக்கும்.

(வஞ்சகம்.)

வஞ்சனை வாழ்வைக் கெடுக்கும். 19470


வஞ்சித்து நெடுங்காலம் வாழ்தலினும் மரணம் அடைதலே நலம்.

வட்டம் சுற்றியும் வழிக்கு வரவேண்டும்.

வட்டம் சுற்றி வழியே வா.

வட்டி ஆசை முதலுக்குக் கேடு.

வட்டி ஆசை முதலைக் கெடுத்தது. 19475


வட்டி ஓட்டம் வாத ஓட்டத்திலும் அதிகம்.

(விழா ஓட்டத்திலும்.)

வட்டிக் காசு வாங்குகிற வடமலையானுக்குக் குட்டிக் கோவிந்தம்.

(வடமலையப்பனுக்கு.)

வட்டிக்கு ஆசைப்பட்டு முதலை இழந்தான்.

வட்டிக்குக் கொடுத்த பணம் வாய்க்கரிசிக்கு உதவாது.

வட்டிக்கு வட்டி எதிர் வட்டியா? 19480


வட்டி குட்டி போடும்.

வட்டி தூங்காது.

வட்டியும் முதலும் கண்டால் செட்டியார் சிரிக்காரா?

(சிரிப்பபார் கொண்டால்.)

வட்டியை நம்பி முதலை இழப்பரோ?

வட்டிலுக்கு வழி வாய் வைத்த இடம். 19485


வட்டிலை வைத்து வறுக்கச் சொன்ன கதை.

வட்டி வாங்குகிற வடக்கு மலையாலுக்குக் கோவிந்தம் போட்டா கோவிந்தா.

வட்டிற் சோற்றைப் பங்கு இட்டாலும் வாழ்வைப் பங்கிட மாட்டார்கள்.

வட்டுக் கோட்டைக்குப் போக வழி எது என்றால், துட்டுக்கு



எட்டுக் கொட்டைப் பாக்கு என்பதா?

(யாழ்ப்பாண வழக்கு)

வட்டுவத்திலே சொட்டு விழுந்தால் பாக்கு வெட்டிக்கு வேறே;கரண்டகத்துக்கு

வேறேயா?

18490


வட்டுவத்தின் மேலே சொட்டுப் போட்டால் வட்டுவத்துக்கு மாத்திரமா படும்?

வடககத்தியானையும் வயிற்று வலியையும் நம்பல் ஆகாது.

வடக்குப்பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த தெருத் திண்ணை

நல்லது.
(குச்சு வீடு, திண்ணை வீடு.)

வடக்கே கறுத்தால் மழை வரும்.

(பெய்யும்.)

வடக்கே சாய்ந்தால் வரப்பெல்லாம் நெல். 19495

(பிறை.)

வடக்கே சாய்ந்தால் வரபெல்லாம் நெல்; தெற்கே சாய்ந்தால் தெரு எல்லாம் வெட்டி.

(பஞ்சம் கார்த்திகைப் பிறை)

வடிக்கிறது நாழி, அகப்பை பதினாறு, நீயும் பிள்ளைத் தாய்ச்சி,

நானும் வேலைக்காரன், பார்த்து வட்டித்துப் பழையது மீத்தடி.

வடி கட்டின முட்டாள்.

வடித்த கஞ்சி கொடுக்காத சிற்றப்பன் வாய்க்கால் கரைமட்டும் வழி வந்தானாம்.

வடித்த கஞ்சி வார்க்காத சிற்றப்பன் வழித்துக் கொண்டானாம் பணம் இட. 19500


வடித்தால் காணுமா? பொங்கினால் காணுமா?

வடித்து நிமிர்த்தி வாழைக்காய் உப்பேறி யார் வைத்திருக்கிறார்?

வடிவில் பெண், பட்டிக்காட்டு ஓணான்.

வடிவிலே மன்மதன் போல.

வடுகச்சி அம்மா வால் அம்மா, வாசலைப் பிடித்துக் கொண்டு தொங்கம்மா. 19505


வடுகச்சி காரியம் கடுகுச்சு, முடுகுச்சு.

(கடுகிச்சு முடுகிச்சு.)

வடுகத் துறட்டு மகாவில்லங்கம்.

வடுகத் துறடும் துலுக்க முரடும்.

வடுக வில்லங்கமாய் வந்து வாய்த்தது.

வடுகன் தமிழறியான்; வைக்கோலைக் கசு என்பான். 19510


வடுகனும் தமிழனும் கூட்டுப் பயிர் இட்ட கதை.

வடுகு கொழுத்தால் வறையோட்டுக்கும் ஆகாது.

வடுகு பொடுகாச்சு; வைக்கோற் போர் நெல் ஆச்சு.

வடையைத் தினைச் சொன்னார்களா, துளையை எண்ணச் சொன்னார்களா?

வண்டப் பயலுக்கு ஏற்ற கண்டிப் பெண்சாதி. 19515

(கண்டப் பெண் சாதி.)


வண்டி அலங்காரமாம்; வலத்து மாடு சிங்காரமாம்.

வண்டிக்காரன், மாவுத்தன், ராவுத்தன், பனையேறி இவர்களுக்குப் பதவியில்

ஏறியதும் அகங்காரம் வரும்.

வண்டிப் பாரம் பூமியிலே.

வண்டியில் ஓடம் ஏறும்; ஓடத்தில் வண்டி ஏறும்.

வண்டி வருகிறது; ராட்டினத்தை விலக்கு. 19520


வண்ணான் கெடுத்தது பாதி; வாதி கெடுத்தது பாதி.

(வண்ணான் பண்ணினது பாதி; வாதம் பண்ணினது பாதி.)

வண்ணான் கையில் சேலையைப் போட்டுக் கொக்கின் பின்னே போகிறதா?

(புடைவையைப் போட்டு.)

வண்ணான் சித்து வழியிலே.

வண்ணான் சொல் கேட்டு வீண்பழிக்கு ஆள் ஆனானே!

வண்ணான் துறைக் கல்லிலே வந்த பேர் எல்லாம் துவைக்கலாம். 19525


வண்ணான் தோய்க்கத் தண்ணீர் பாய்ச்சினால் கல்யாணத்துக்குக் காய்

பறிக்கலாம்.
(அவரைக்காய்.)

வண்ணான் பர்மாக்காரியிடம் கொசுவலைக்குக் கூலி கேட்ட மாதிரி.

(-அதிகமாகக் கேட்பான்.)

வண்ணான் பிள்ளை செத்தால் அம்பட்டனுக்கு மயிர் போயிற்று,

வண்ணான் பெண்ணுக்கு அம்பட்டன் துடுப்புக் கொடுத்தது போல.

(துரும்பு)

வண்ணான் பொதி ஏத்துகிற வேளை. 19530



வண்ணான் வீட்டுக்குப் போகப் போகப் போகிறது.

வண்ணான் வீட்டு நாய் வீட்டுக்கும் உதவாது; துறைக்கும் உதவாது.

வண்ணான் வெள்ளாவித் துணியிலே நாய் ஏறின மாதிரி.

(பேண்ட மாதிரி.)

வண்ணானிடம் துணி போட்டுக் கொக்குக்குப் பின்னே திரிந்தது போல்.

(அலைந்தது போல்.)

வண்ணானுக்கு உழைத்த கழுதையும் வாணியனுக்கு உழைத்த காளையும் சரி. 19535


வண்ணானுக்கு நோய் வந்தால் கல்லோடே.

வண்ணானுக்குப் போனான; வண்ணாத்திக்கு வந்தான்.

வண்ணானுக்கும் நிர்வாணிக்கும் உறவு ஏன்?

(என்ன?)

வண்ணானுக்கு வண்ணாத்தி மேல் ஆசை;வண்ணாத்திக்குக் கழுதை மேல்ஆசை.

வண்ணானுக்கு வந்ததும் இல்லை; செம்மானுக்குப் போனதும் இல்லை. 19540


வண்ணானோடு போய் மோழி சுமந்தாளாம்.

(யாழ்ப்பாண வழக்கு.)

வணங்கா முடியால் கேடு வரும்.

வணங்கின காலில் முள் தைக்காது.

வணங்கின புல் பிழைக்கும்.

(வாழும்.)

வணங்கின முள் தைக்காது. 19545


வணங்கின முள் தைக்குமா? வணங்காத புல்லுத் தைக்குமா?

வணங்கின வில் தீங்கை விளைக்கும்.

வணங்கின வில் தைக்கும்; வணங்காத வில் தைக்காது.

வணிகர்க்கு அழகு வாணிகம் செய்தல்.

வத்திரம் உடையான் அவைக் கஞ்சான்; வாகனம் உடையான் நடைக்கு அஞ்சான். 19550

வத்தி வைக்கிறான்.

வதுவை செய்து வாழ்.

வந்த அளவிலே சிறுக்கி பந்து அடித்தாள்; வரவரச் சிறுக்கிச் சோர்ந்து போனாள்.

வந்த காசுக்கு வட்டம் இல்லை.



வந்த காரியத்தைக் கவனிக்காமல் பந்தற்காலைக் கட்டிக் கொண்டு நின்றானாம். 19555


வந்த காலோடு பந்தற்காலைக் கட்டிக் கொண்டு நிற்கிறாய்,

வந்த கூத்து ஆடித்தானே தீரவேண்டும்?

வந்த சண்டையை விடுவதும் இல்லை; வலியச் சண்டைக்குப் போவதும் இல்லை.

வந்தட்டிக் காக்காய் வரப்பிலே; ஊர்க் காக்காய் கரையிலே.

வந்ததடா சண்டை பிராமணா, இறக்கடா மூட்டையை. 19560


வந்தது எல்லாம் கொள்ளும் மகாராஜன் கப்பல்.

வந்தது கப்பல்; மலர்ந்தது தொப்பை.

வந்தது சண்டை, இறக்கடி கூடையை.

(எட்டினது கூடையை.)

வந்தது பேய், வளர்ந்தது பேய், கொண்டு வந்தது கொள்ளி வாய்ப் பிசாசு.

(மருகன், மகன், மாப்பிள்ளை.)

வந்தது போய் விடும்; இருக்கிறது போகாது. 19565


வந்ததும் அப்படியே, சிவன் தந்ததும் அப்படியே, எனக்கு முன் என் அதிர்ஷ்டம் போய் நிற்கிறது.

வந்ததும் பிசாசு, போனதும் பிசாசு, கொண்டு வந்ததும் கொள்ளிவாய்ப் பிசாசு.

வந்ததே சிறுக்கி பந்து அடித்தாள்; வரவரச் சிறுக்கி கழுதை மேயக்கிறாள்.

(வந்ததே பெண்.)

வந்ததை வரப்படுத்தடா, வலக்காட்டு ராமா!

வந்ததை வரப்பற்ற வேண்டும், 19570

(வரப்பற்று.)


வந்தபின் காப்பவனைவிட வருமுன் காப்போன் புத்திசாலி.

வந்த பேரை வாழ வைக்கும் வைகுண்ட மாநகர் இதுவே

(ஆண்டான் கவிராயர் கூற்று.)

வந்த மாடு கட்டுவதும் இல்லை; கெட்ட மாடு தேடுவதும் இல்லை.

வந்தவர் எல்லாம் சந்தையிற் குடியா?

வந்தவள் கறுப்பு ஆனால் வமிசமே கறுப்பு. 19575


வந்தளவிலே சிறுக்கி பந்தடித்தாள்; வரவர மாமி கழுதை போல் ஆனாள்.

வந்தவனுக்குச் சோறு; வராதவனுக்கு உலை வைக்கிறது.

வந்த விதி வந்தால் வாய் திறக்க வழி இல்லை.

வந்த வினை எல்லாம் வரட்டும்.

வந்த வினை போகாது; வராத வினை வாராது. 19580


வந்தவுடன் மாமியார் பந்து அடித்தாள்; வர வர மாமியார் கழுதைபோல் ஆனாள்.

வந்த வெள்ளம் இருந்த வெள்ளத்தைத் தள்ளினது.

(இருந்த தண்ணீரைக் கொண்டு போயிற்று.)

வந்த வேலையை விட்டு விட்டுப் பந்தற்காலைப் பிடித்தானாம்.

வந்தார் இறங்குமிடம் வழி வந்தார் தங்கும் இடம்.

வந்தாரை வாழ வைக்கும்; மண்ணில் பிறந்தாரைத் தூங்க வைக்கும். 19585

வந்தால் விரவில்லை; வராவிட்டால் செலவில்லை.

வந்தாலும் சரி, போனாலும் சரி.

வந்தாற் போல் மாமியார் பந்தடித்தாள்; வர வர மாமியார் கழுதை போல் ஆனாள்; ஊர் கிட்டே வரும்போது ஊளையிட்டுக் கொண்டே வந்தாள்.

வந்தாற் போலச் சிறுக்கி பந்து அடித்தாள்; வரவரச் சிறுக்கி நொந்து போனாள்.

வந்தாற் போல மாமி பந்து அடித்தாள்; வரவர மாமி கழுதை மேய்கிறாள். 19590


வந்து போகிற புருஷனும் வைத்து உடுத்துகிற புடைவையும் வகையாக அகப்பட்டன.

வம்சத்து வாடிக்கைக்கு ஒரு குருவைப் பொங்கல் இட்டாலும் போகாது.

வம்ச பரம்பரையாய் வந்தீரே சிற்றப்பா, உங்கள் உத்தரீயத்தைத் தாரும்; உடுத்துக் கொண்டு தண்டன் இடுகிறேன்.

வம்சம் வார்த்தைக்கு அஞ்சும்; புழுக்கை உதைக்கு அஞ்சும்.

(உலக்கைக்கு.)

வம்பனுககு வழி எங்கே? போகிறவன் தலை மேலே. 19595


வம்பான வார்த்தை மனசுக்கு அருவகுப்பு.

வம்பி இருந்த மனை பாழ்; தும்பி இருந்த தூன் பாழ்; அறந்தாங்கித் தம்பியிருந்த தரை பாழ்.

வம்பி மகள் மழலை வார்த்தை கேட்டு, ஆடிவரைத் தம்பி என்று அழைக்கத் தலைப்பட்டாள்.

வம்பிலே வருகிறது; குண்டாறு பெருகிறது.

வம்புக்குச் சப்பணி வைத்தாளாம். 19600


வம்புச் சண்டைக்குப் போவதும் இல்லை; வந்த சண்டையை விடுவதும் இல்லை.

வம்புத் துரைத்தனத்தாரைக் கும்பிடத் தகுமோ?

வம்பும் தும்பும் விளைக்கிறது.

(வந்து விளைகின்றன.)

வயசுக்கு ஏற்ற விவரம்.

வயசுக்குத் தகுந்த புத்தி, வல்லமைக்குத் தகுந்த சலுகை. 19605


வயசுக்கு மூத்தவனைக் கட்டி மாரடிப்பது போல,

வயசுக்கோ நரைத்தது, மயிருக்கோ நரைத்தது.

வயசு சென்றால் மதியும் தளர்ந்து போகுமா?

(மதியும் போகுமா?)

வயசுப் பிள்ளை சாயல் கண்ணுக்குள்ளே குத்தும்.

(யாழ்ப்பாண வழக்கு.)

வயசுப் பெண்ணுக்குத்தான் வயசு காலம்; கிழத்துக்கு எல்லாம் என்ன கேடு காலம்? 19610


வயசோ வல்லக்காடோ?

(வல்லக்கேடோ-வல்லக்காடு சுடுகாடு.)

வயல் முயற்சியில் தானியம் உண்டாம்,

வயல் விளைந்து உண்ண வேணும்; வரப்பு விளைந்து உண்ணலாமா?

வயிற்றில் அடிக்காமல் முதுகில் அடி.

வயிற்றில் அடித்தால் எல்லாம் போகும். 19615


வயிற்றில் இருக்கிற பிள்ளையை நம்பி மாடு மேய்க்கிற பிள்ளையைக் கொன்றாற் போலே.

வயிற்றில் குழந்தை, கழுத்தில் தாலி.

வயிற்றில் பிறந்த பிள்ளையும் கொல்லையில் காய்த்த கறியும் சமயத்துக்கு உதவும்.

வயிற்றில் வாழையைப் புதைக்கிறான்.

(நிறைய சாப்பாடு போடுகிறான் என்பது கருத்து.)

வயிற்றிலும் குத்திக்கொண்டு விலாவிலும் குத்திக்கொண்டது போல. 19620


வயிற்றிலே பசி; வாயிலே சிரிப்பு.

வயிற்றில் பல்.

(+ உடையார் வஞ்சகர்கள்.)

வயிற்றிலே பாலை வார்த்தாற்போல.

வயிற்றிலே பிறந்தால் என்ன, விலாவிலே பிறந்தால் என்ன?

வயிற்றில் புளியைக் கரைக்கிறது. 19625


வயிற்றிலே வாழையை வைப்பான்.

வயிற்று அகமுடையான், கயிற்று அகமுடையான்,

வயிற்று எரிச்சல்.

வயிற்று எரிச்சல் பெண்சாதிக்கு மாலைக்கண் அகமுடையான்.

வயிற்று எரிச்சலைச் சொல்கிறேன்; வாடி புழைக்கடைக்கு என்றாளாம். 19630


வயிற்றுக்குச் சோறும் இடுப்புக்குத் துணியும்.

(+ இல்லை வயிற்றுக்குக் தண்ணீீரும்.)

வயிற்றுக் குடல் வாயில் வரக் குட்டுகிறதா?

வயிற்றுக் குடலைக் காட்டினாலும் வாழைநார் என்கிறான்.

வயிற்றுச் சோற்றுக்காக வைத்தீசுவரன் கோயில் மட்டும் நடப்பான்.

வயிற்றுப் பாம்புக்குக் கடுகும் வளைப் பாம்புக்கு வெந்நீரும் இடு. 19635


வயிற்றுப் பிள்ளை நழுவும்படி பேசுகிறான்.

வயிற்றுப் பிள்ளையை நம்பிக் கைப்பிள்ளையைக் கைவிட்டது போல.

(கைபிள்ளையை ஆற்றில் நழுவி விட்டது போல, பறி கொடுத்தது போல, இழத்தது போல.)

வயிற்றுப் பிள்ளையை நம்பி மாடு மேய்க்கிற பிள்ளையைப் பறி கொடுத்தாற் போல.

(மாடு மேய்க்கிற பிள்ளையைக் காலை வாரி விட்டது போல கொன்றானாம்.)

வயிற்றுவலிக்காரிக்கு மாலைக்கண்ணன் அகமுடையான்.

வயிற்று வலிக்கு இடம் கொடுத்தாலும் வைஷ்ணவனுக்கு இடம் கொடுக்கல் ஆகாது. 19640


வயிற்று வலியை விலை கொடுத்து வாங்குவார்கள்?

வயிற்றை அறுத்தாலும் வாகாய் அறுக்க வேண்டும்.

வயிற்றை அறுத்தாளாம்; வைத்தாளாம் பந்தலில்; இதுதான் உங்கள் சீர் என்றாளாம்.

(என்னடி அம்மா என்றால் பெண்ணுக்கு சீர் என்றாளாம்.)

வயிற்றைக் கட்டினவளுக்கு அகமுடையான்; வாயைக் கட்டினவருக்குப் பிள்ளை.



வயிற்றைக் கிழித்துப் பார்த்தால் வாரடையும் கிடையாத திரக்ஷர குக்ஷி. 19645


வயிற்றைக் கீறிக் காண்பித்தாலும் கண்கட்டு வித்தை என்றான்.

(என்பார்கள்.)

வயிற்றைப் பிடித்து நிழலில் இருந்தால் மலடிக்கு மசக்கை.

வயிற்றைப் பீறிக் காட்டினாலும் மகேந்திர ஜாலம் என்பார்.

வயிற்றைப் புரட்டுகிறது வரகரிசிச் சோறு; வாய் நீர் கொளுத்துகிறது கம்பங்கூழ்; பொறுக்கப் போக வில்லை புளியம் பூரசம்; என் பொன்னான பிறந்தகம் போய்வருகிறேன்.

வயிற்றைவிட்டுக் கழிந்தாலும் வீட்டை விட்டுக் கழியவில்லை. 19650

வயிறா? வண்ணாந்தாழியா?

வயிறு ஆரப் போஜனமும் அரை ஆரப் புடைவையும் இல்லை.

(வேண்டும்.)

வயிறு எரிகிறவனிடம் வரம் கேட்கிறது போல.

வயிறு எரிய வழக்கு ஓரம் சொல்கிறதா?

வயிறு என்னைப் பார்க்கிறது. 19655


வயிறு கூழுக்கு அழுகிறதாம்; கொண்டை பூவுக்கு அழுகிறதாம்.

வயிறு நிறைந்தால் வாழ்வு விடியும்.

வயிறு நிரம்பினாலும் கண் நிரம்பாது.

வயிறு நிறைந்தால் பானை மூடான்.

(நிரம்பினால்.)

வயிறு பசித்தால் வைத்த இடத்தைப் பார். 19660


வயிறு வண்ணான் சால் போல.

வரகு அடித்த கம்பை வரகின்மேல் வைத்துத்தான் கட்டுவர்.

(விறகு அடித்த... விறகின் மேல்.)

வரகு கொல்லை உழப்போன கலப்பையா?

வரங்கன் பெற்றது குரங்கைக் கொல்லவா?

வரச்சே துண்டில் கயிற்றின் வழியா வந்தது; போகச்சே இரும்புச் சங்கிலியை அறுத்துக் கொண்டு போயிற்று. 19665


வரதன் சேவையும் வேகவதி மணலும்.

( : வேகவதி மணலில் சுடுகாடு இருக்கிறது.)

வரப்பு உயர்ந்தால் நெல் உயரும்; நெல் உயர்ந்தால் சொல் உயரும்.

வரப்பு உயர நீர் உயரும்; நீர் உயர நெல் உயரும்.

வரப்பு உயர நெல் உயரும்; நெல் உயரக் குடி உயரும்; குடி உயரக் கோல் உயரும்; கோல் உயரக் கோ உயரும்.

வரப்பு ஏறித் தாண்ட மாட்டான்; அவன் பேர் தாண்டவராயன். 19670


வரப் புருஷன் காட்டிலே கடுகு மிடாச் சோடு.

(கொங்கு நாட்டு வழக்கு.)

வரப்பே தலையணை வைக்கோலே பஞ்சு மெத்தை.

வரப்போகிற அரண்மனையை எண்ணிக் குடியிருக்கும் குடிசையை விடலாமா?

வரப்போகிற கண்ணாலத்துக்கு நாள் எண்ணியிருக்குமாப் போல,

வரப்போ தலையனை வாய்க்காலே பஞ்சு மெத்தை. 19675


வரமோ கழுத்தை அறுக்கும்?

வரவரக் கண்டு அறி மனமே.

வரவரத் தெரியும் மெய்யும் பொய்யும்.

வரவர மாமியார் கழுகை போல் ஆனாள்.

வரவர மாமியார் கழுதை போல் ஆனாள்; ஊர்கிட்டே வந்து ஊளை இட்டாள். 19680

(ஊளை இட்டுக் கொண்டு வந்தாள்.)

வரவிலே தீயா? செலவிலே தீயா?

வரவிற் பெரிய செலவு ஆனால் அவரிற் பெரிய திருடன் ஆர்?

வரவுக்குக் தக்கபடி செலவை வரையறு.

(வரத்துக்குச் செலவு செய்.)

வரவுக்கக் தகுந்த செலவு; மாப்பிள்ளைக்குத் தகுந்த மஞ்சள்.

(மஞ்சள்.)

வரவு கொஞ்சம்; வலிப்பு மெத்த. 19685


வராத நோய் வந்தால் குடியாத மருந்தைக் குடி.

வராதவரை வருந்தி அழை.

வரால் மீன் பாய்ந்தது போல.

வரிசை பெற்ற மாப்பிள்ளை வந்து வந்து நிற்பானாம்.

வரிசையும் இல்லை; அரிசியும் இல்லை. 19690


வரி போடேல்; கேட்டைத் தேடேல்.

வரிப்புலியைப் பார்த்து நரி சூடிட்டுக் கொண்டாற் போல.

வரி விழுந்த புலியைப் பார்த்து நரியும் நரியும் கொள்ளிக் கட்டை எடுத்துச் சுட்டுக் கொண்டனவாம்.

வருகிற போது எல்லாம் வலிய வரும்; வந்தபின் போகிறது பேசது எல்லாம் போம்.

வருகிறவன் எப்போதும் வருவான் 19695


வருகிற விதி வந்தால் வளைந்தாடும் பானை.

வருத்தம் அறியாத மன்னனைச் சேவிக்கிறேன்.

வருத்தம் இல்லாமல் லாபம் இல்லை.

வருந்தாதார் வாழ்க்கை திருந்துதல் இன்று.

(பழமொழி நானுாறு.)

வருந்தி அழைத்தால் வராதது இல்லை. 19700


வருந்தி அழைத்தாலும் வாராத வாரா,

வருந்தி வருந்திப் பார்த்தாலும் வருகிற போதுதான் வரும்.

வருந்தினால் திருந்தும்.

வகுந்தினால் வராதது ஒன்றும் இல்லை.

வரும் காரியம் சொல்லும் கெளளி வலியக் கழுநீர்ப் பானையில் விழுந்தாற் போல. 19705

(வரும் காலம்.)


வரும் சொல் வாயிலே.

வரும் போதே காதில் வாருகோல் குச்சி போட்டு வந்தான்.

வரும் விதி எங்கு இருந்தாலும் வரும்,

வரும் விதி தலையைக் காக்காது.

வரும் விதி வந்தால் படுவது பட வேண்டும். 19710

(படும் விதி.)


வரும் விதி வந்தால் வளைந்தாடும் பானையும்.

வரும் வினை வழியில் நிற்காது.

(வரும் விதி வழியில் தங்காது.)

வருமுன் காப்பான் சொன்ன புத்தியை வந்தபின் காப்பான் தள்ளினது போல.

வருவது சொன்னேன்! படுவது படு.

(வருவதை.)

வருவது தெய்வத்தால்; கெடுவது கர்வத்தால். 19715


வருவது வந்தது என்றால் படுவது படவேண்டும்.

வருவது வந்தே தீரும்.

வருவது வழியிலே தங்காது.

(நிற்காது.)


வருவான் குருடன்; விழுவான் கிணற்றிலே.

வருஷம் நூறு ஆனாலும் ஆனைகறுவும். 19720


வல்லடி வழக்கைச் சொல்லடி மாமி.

(மகளே.)

வல்லடி வாரிக்கொண்டு போக.

வல்லவன் ஆட்டின பம்பரம் மணலிலும் ஆடும்.

(எரிந்த பம்பரம் மண்ணிலும் ஆடும்.)

வல்லவன் ஆடின பம்பரம் போல.

வல்லவன் போனது வழி. 19725


வல்லவன் போனதே வாய்க்கல்.

(தாயுமானார்.)

வல்லவனுக்கு எல்லாம் உண்டு.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்:

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பான்.

(உண்டு)

வல்லவனையும் வழுக்கும் பாறை. 19730


வல்லார் இளைத்தால் வந்து இளைப்பாறும் என்று சொல்லாது இரார்கள் சுத்தவீரர்கள்.

(சொல்லாதவர்களா சுத்த வீரர்களா?)

வல்லாள் கொல்லை வாழைப் பழம் ஆகும்.

வல்லாள கண்டியை வா என்றால் வருவாள், போ என்றால் போவாளா?

வல்லாளன் சொன்னதே வழக்கு.

வல்லான் வகுத்ததே வாய்க்கால். 19735

(தாயுமானவர்.)


வல்லான் வகுத்த வாய்க்கால் வடிக்கே பாயும்; தெற்கேயும் பாயும்.

வல்விலைக் கூறையும் மெல்விலைக் காளையும் ஆகா.

வலக்காலை முன் வைத்து வாழ வந்த நாள் முதலாய்.

வலது கை செய்வது இடது கை அறியாது செய்.

வலிமைக்கு வழக்கு இல்லை. 19740 வலிய உறவாடி வாசலிலே வந்தாலும் பொய் உறவாடிப் போய் வா என்று சொல்கிறான்.

வலியச் சண்டைக்குப் போகாதே; வந்த சண்டையை விடாதே,

கலுத்தால் கரும்பு, இளைத்தால் இரும்பு.

வலுவில் வந்தவள் கிழவி.

வலைக்கு முன்னே கல் எறிந்த கதை. 19745


வலைச்சி ஓலைப் பாயில் மூத்திரம் பெய்தாற் போல.

வலையன் பிடித்த மீனுக்கு நுறையன் இட்டதே பேர்.

வலையில் பட்ட மானைப் போல.

(வலையில் சிக்கிய.)

வவ்விடக் கவ்வாயிற்று.

வவ்வுதல் செவ்வியைக் கெடுக்கும். 19750


வழக்கில் விழுந்தவனுக்கும் வழுக்கி விழுந்தவனுக்கும் கை கொடுக்கக் கூடாது.

வழக்குத் தீர்க்கிறதில் மரியாதை ராமன்தான்.

வழலை முடித்தவன் வாதம் முடித்தவன்.

வழவழத்த உறவைக் காட்டிலும் வைரம் பற்றிய பகை நன்று.

வழி ஆச்சுது; காரியம் வெளி ஆச்சுது. 19755

வழியில் போகிற குதிரைக்கு வைக்கோல் புரி கடிவாளம்.

(கண்ட குதிரைக்கு.)

வழியில் போகிற சனியனை விலைக்கு வாங்கினாற் போல.

(வாரத்துக்கு.)

வழியில் போகிறவனை அண்ணே என்றால் உன்னோடு பிறந்தேனா மலமுண்டை என்பானாம்.

வழியில் போகும் நாய்க்கு வாயைப்பார்.

வழியும் இல்லை; வாய்க்காலும் இல்லை. 19760


வழியே ஏகுக; வழியே மீளுக.

வழியேபோய் வழியே வந்தால் அதிகாரி செங்கோல் என்ன செய்யும்?

(செங்கோல் மயிர் மாத்திரம்.)

வழியே வாழ்வு; வழியே சாவு.

வழியோடு போகிறவனுக்கு வீடு கட்டுவது எளிது.

வழி வழியாய்ப் போகும்போது விதி என்ன செய்யும்? 19765


வழி வழியாய்ப் போனாலும் விதி விதியாய் வருகிறது.

வழி வாய்க்கால் இல்லாமல் பேசுகிறாய்.

வழுக்கற் சேற்றிலே நட்ட கம்பம்.

வழுக்கி விழாத குதிரை வளமான குதிரை.

வழுக்கைத் தலையனுக்குச் சீப்பு எதற்கு? 19770


வளர்த்த கடா மார்பிற் பாய்ந்தது போல்.

(கையில்.)

வளர்த்த நாய் முகத்தில் கடித்தாற் போல்.

வளர்த்த நாய் முகத்தைப் பார்ப்பது போல.

வளர்த்த பிள்ளை சோறு போடா விட்டாலும் வைத்த பிள்ளை சோறு போடும்.

(வைத்தபிள்ளை-தென்னம்பிள்ளை)

வளர்த்து வாழ்க்கைப் படுகிறது. 19775

(வளர்த்தி)


வளர்த்து விட்ட மரத்தைத் தறித்து விட்டாற் போல்,

வளர்ந்த உயரத்தை வாசற்படியிலே காட்டுகிறதா?

வளர்ப்பு வக்கனை அறியாது.

வளரும் காய் பிஞ்சிலே தெரியும்; விளையும் பயிர் முளையிலே தெரியும்.

வளரும் குழந்தை மழுப்போலே. 19780


வளவன் ஆயினும் அளவறிந்து உண்.

(அளவறிந்து அழித்து உண்.)

வளைத்துப் போனாலும் வழியிலே போது வேண்டும்.

வளைந்த மூங்கில் அரசன் முடிமேல்; வளையாத மூங்கில் கழைக் கூத்காடி காலின் கீழ்.

வற்றலாய்க் காய்ந்த வடகம் போல் வற்றி.

வற்றி இருக்கிற ஏரியைக் கண்டால் வளைய வளைய நீந்துவேன் என்ற கதை. 19785


வற்றிய ஓலை கலகலக்கும்.

வற்றிற்றாம் கள்; வறண்டாளாம் சாணாத்தி; ஊறிற்றாம் கள்; உதித்தாளாம் சாணாத்தி.

வறட்டுக் கத்தக் கத்துகிறான்.

வறட்டுத் தவளை கத்துகிற மாதிரி.

வறட்டுத் தவளையைப் போல் வாள் வாள் என்கிறது. 19790


வறட்டு மாடு ஆனாலும் ஒரு பீர் பால் கொடுக்காதா?

(ஒரு சேர்.)

வறட்டு ஜம்பத்துக்கு வாய் என்ன?

வறப் போக்கி முண்டலாமா, நாலு மாவு போட்டுக் கிண்டலாமா?

வறியார் இருமையும் அறியார்.

வறியார்க்கு அழகு வறுமையிற் செம்மை. 19795

வறுத்த நெல் முளைக்குமா?

வறுத்த பயறு முளைக்குமா?

வறுத்த பயறு முளைத்ததை வையத்தில் கண்டீரோ?

வறுமை உள்ளார்க்குப் பொறுமை உண்டு.

வறுமைக்கு மூதேவியும் செல்வத்துக்குச் சீதேவியும். 19800


வறுமை கண்டவர் வையகத்தில் அநேகர்.

வறுமை வந்தால் பத்தும் பறந்து போம்.

வறை ஓட்டை நக்கினால் வாய் எல்லாம் கரி.

வன்சொல் வணக்கத்திலும் இன்சொல் வணங்காமை நலம்.

வனத்துக்கு வால்மீகி; பேருக்கு வியாசர். 19805


வனத்துப் புலியை மான்குட்டி அடித்தாற்போல.

வனவேடர் மான்கும்பைக் கலைத்து விட்டது போல.

வனாந்தரத்து நுழை நரிகள் இடையர்களின் தீர்க்க விரோதிகள்,

வஜ்ர சும்பன்.

வஜ்ர்ம் அளந்த கையால் வைக்கோல் துரும்பு எடுக்கலாயிற்று. 19810


வஸ்திராபரணம் விசேஷமோ, அன்னம் விசேஷமோ?

வா


வாக்கிலே கெட்ட கழுதையைப் போக்கிலே விட்டுத்திருப்ப வேண்டும்.

(விட்டுத்தான் விட்டு அடி, விட்டுப் பிடி.)

வாக்கிலே சனி.

வாக்கிலே புதன்.

வாக்குக்கு எட்டினது மனசுக்கு எட்ட வில்லை. 19815


வாக்குக் கொடுப்பது மெதுவாகவும், செய்வது விரைவாகவும் இருக்க வேண்டும்.

வரக்குச் சாக்காய் மாட்டிக் கொள்கிறது.

வாக்கும் மனசும் ஒத்து வார்த்தை சொல்ல வேண்டும்.

வாக்கு வயணம் தெரியாமல் பேசுகிறான்.

வாகனம் உள்ளவன் வழி நடிைக்கு அஞ்சான்; பால் உள்ளவன் பந்திக்கு அஞ்சான். 19820

வாகை இளம்பிஞ்சு கண்டவர்கள் இல்லை; வாகான தென்னம்பிள்ளை கண்டவர்களும் இல்லை.

வாங்கி இருந்து துளை என்றார், அப்பம் தின்பார்,

வாங்கிக் கொடுத்த புருஷன் வெளியில் போய்விட்டு வருவதற்குள் நடுக்கிழித்து மூட்டாவிட்டால் நான் என்ன பெண் பிள்ளை என்றாளாம்.

வாங்கித் தின்றவன் வடக்கே போனான்; சீட்டு என்ன செய்யும்?

வாங்கித் தின்னுமாம் வயிறு; விண்ணாரம் பேசுமாம் உதடு. 19825


வாங்கின கடன் கொடாத வல்லாள கண்டன்.

வாங்கின கடனைக் கொடுக்கிறது இல்லை; கொடுத்த கடனைக் கேட்கிறது இல்லை.

(கொடுத்தறியான், கேட்டறியான்.)

வாங்கினபேருக்கு வாய் ஏது? வீங்கின பேருக்கு வெட்கம் ஏது?

வாங்கினதைப் போலக் கொடுக்கவேண்டும்; கொடுத்ததைப் போல வாங்கவேண்டும்.

வாங்கின மோரிலே வெண்ணெய் எடுப்பான். 19830

(தயிரிலே.)

வாங்குகிறது பிச்சை; ஏறுகிறது தந்தப் பல்லக்கு.

வாங்குகிறதைப் போல் இருக்க வேண்டும், கொடுக்கிறதும்.

வாங்குகிறபோது ஒரு பிள்ளை பெற்றது போல; கொடுக்கிற போது ஒரு பிள்ளை செத்தது போல.

வாசம் அறிந்தது வேட்டை நாய்; சுவாசம் முறிந்தது காட்டு மான்,

வாசல்படி இட்டு விடிகிறதோ, மகாதேவர் இட்டு விடிகிறதோ? 19835


வாசல்படி தலையில் பட்ட பிறகா குனிகிறது?

வாசலில் கட்டித் தாழ்வாரத்தில் அறுத்தது போல,

வாசலைக் காக்கிறான்.

வாசனை அற்ற புஷ்பம் வனத்தில் இருந்து என்ன பயன்?


வாசி விட்டால் யோகம் போச்சு. 19840

வாடிய பூவைச் சூடினாலும் சூடிய பூவைச் சூடக் கூடாது.

வாடி வலித்துத் திரங்கிக் கிடந்திடினும் புலித்தலையை நாய் மோத்தல் இல்.

வாணலிக்குத் தப்பி அடுப்பில் குதித்தது போல.

வாணிகம் செய்யின் காணியும்குறி.

(வாணியம் )

வாணியக் கட்டை வைரக் கட்டை; தேயத் தேயத் துடைப்பக் கட்டை. 19845


(வாணியன் கட்டை.)

வாணியர்கள் ஆடும் செக்கை வளைய வரும் எருதுகள் போல.

வாணியன் ஆசை கோணியும் கொள்ளாது.

வாணியன் கையில் மண்ணும் குயவன் கையில் எண்ணெயும் கொடுத்தது போல.

வாணியனுக்கு ஒரு காலம்; சேணியனுக்கு ஒரு காலம்.

வாணியனுக்குக் கொடாதவன் வைத்தியனுக்குக் கொடுப்பான். 19850


வாணியனோடும் வழக்கு; சேணியனோடும் வழக்கு,

வாத்திமச் செட்டு.

வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்.

வாத்தியார் சம்சாரம் மூத்தாள் பதிவிரதை.

வாத்தியார் சொன்னது தர்ப்பயாமி. 19855


வாத்தியார் பிள்ளை மண்டு; வைத்தியன் பிள்ளை நோயாளி

(மகன் வாத்தியார் பிள்ளை முண்டம். முட்டாள்.)

வாத்தியார் பெண்சாதி, மூத்தவள் பத்தினி.

வாத்தியார் பெண்டாட்டிக்கு வாடல் வெற்றிலைதான்.

வாத்தியார் பெண் பெரியவள். ஆனால் எனக்கு ஆச்சா? என் தம்பிக்கு ஆச்சா?

வாத்தியார் மெச்சின சிஷ்யன் இல்லை. 19860


வாத்தியார் மெச்சின பிள்ளையும் இல்லை; மாமியார் மெச்சிய மருமகளும் இல்லை.

வாத்தியாருக்கு என்ன வரும்? வரப் போகப் பேச்சு வரும்; காத்திருப்பதே கடன்.

வாத்தியாருக்கு நாய் இல்லை; வைத்தியனுக்குச் சொர்க்கம் இல்லை.

வாத்தியாருக்குப் பணம் வருகிறது; பள்ளிப் பிள்ளைக்குக் குசு வருகிறது.

வாத்தியாருக்குப் பணம் வருகிறது; பிள்ளைக்கு அடி வருகிறது. 19865


வாத்தியாரே, பிள்ளைக்கு என்ன வரும்? மாதம் எனக்கு இரண்டு பணம் வரும்.

வாத்தியாரே, வாத்தியாரே, என் பெண் திரண்டால் என்றால், எனக்கு என்ன ஆச்சு? என் பிள்ளைக்கு என்ன ஆச்சு என்றாராம்

வாத்தியாரைக் குறைக் கேழ் வரகும் விதைக்க வரச் சொன்னது போல.

(அரைக்கவர.)

வாத்தியாரை மெச்சின பிள்ளை இல்லை.

(+மாமியாரை மெச்சின மருமகளும் இல்லை.)

வாத்தியும் கூத்தியும் ஆறு மாசம். 19870


வாதத்து இயல்பு எடேல்.

(இடேல்.)

வாதத்துக்கு மருந்து உண்டு; பிடிவாதத்துக்கு மருந்து இல்லை.

வாத துர்ப்பலமே ஒழியச் சமய துர்ப்பலம் இல்லை.

வாதம் ஊதி அறி; வேதம் ஓதி அறி.

வாதம் கெட்டால் வைத்தியம். 19875


வாதம் கெடுத்தது பாதி; வண்ணான் கெடுத்தது பாதி.

வாதம் முற்றி வைத்தியன் ஆனாற் போல.

(வாதம் முற்றினால் வைத்தியன்.)

வாதம் ரஸ வாதம்.

வாதராயண சம்பந்தம்.

வாதி கண்ணுக்கு மட்டம் எட்டு மாற்று. 19880


வாதிகள் கூட்டம் வங்கத்தைக் கண்டால் ஓட்டம்.

('வங்கம் கலத்தால் ரஸ வாதம் கெடும்.)

வாதி கெட்டால் வைத்தியன்.

(முற்றினால்.)

வாதி மகன் வைத்தியன் ஆவான்.

வாதுக்கு ஆடின கூத்தாடி வயசு சென்றால் கழுதை.

வாதுக்கு ஆடின தேவடியாள் வயசு சென்றால் கழுதை மேய்ப்பான். 19885


(கழுதை ஆவான். ஆடின தொப்பை, ஆவான்)

வாதுக்குக் கம்பு இடிக்கக் குதிர்க்கம்பு சேதம்,

வாது பாடி வண்ணம் பாடு.

வாது முற்கூறேல்

வாந்தி எடுத்ததைத் திரும்பிச் சாப்பிடலாமா?

வாப்பா, வாப்பா, தொப்பியைப் பிடி, கிணற்றில் விழ, 19890


வாப்பாவும் மாமரமும் ஓடையும் வந்தால் மாலுமி சாஸ்திரம் சொல்லுகிறான்.

வாய் அறியாது தின்றால் வயிறு அறியாது கழியும்.

வாய் இருந்தால் எங்கள் அம்மா வாழச் சொன்னாள்; இல்லா விட்டால் வந்து விடச் சொன்னாள்.

வாய் இருந்தால் மகளே, வாழலாம்.

(வாழ்ந்து வருவாய்.)

வாய் இருந்தால் வங்காளத்துக்கும் போகலாம். 19895


வாய் இரும்பு, கை இரும்பு.

வாய் இல்லாதவன் கழுவிலே இருப்பான்.

வாய் இல்லா விட்டால் நாய் கூடச் சட்டை செய்யாது.

(சீண்டாது.)

வாய் இல்லா விட்டால் நாய் கொண்டு போய்விடும்.

வாய் இல்லா விட்டால் பிறந்த வீட்டிலேயே நாய் தூக்கிக் கொண்டு போயிருக்கும். 19900


வாய் இல்லா விட்டால் பொட்டை நாய் கொண்டு போய்விடும்.

வாய் உண்டானால் பிள்ளை பிழைக்கும்.

(உள்ள பிள்ளை.)

வாய் உபசாரத்திலே வழி விடுகிறது.

வாய் உள்ள பெட்டிக்குத் துார் இல்லை.

வாய் உள்ளவனுக்குக் கலிகாலம். 19905


வாய் உள்ளார் பேசவும் வலதுள்ளார் கொழிக்கவும் ஆச்சுதே!

வாய்க்கு அடங்காத பிடி பிடிக்காதே.

வாய்க்கு அரிசி போட்டேன்.

வாய்க்கு இலையும் கெட்டவன் கல்யாணம் பண்ணினாலும் பால பாரதிக்கு அஞ்சுபணம்.

(பவானிப் பகுதி வழக்கு, வாக்கியம் கெட்டவன்.)

வாய்க்கு உண்டா வாதம்? 19910


வாய்க்கு எளியவன் பிள்ளையார் கோயில் ஆண்டி.

வாய்க்கு என்ன வலிப்பா?

வாய்க்குக் கை உபசாரமா?

வாய்க் குணம் கெட்ட நாயைப் போக்கில் விட்டுத் திருப்ப வேணும்.

(கழுதையை.)

வாய்க்குத் தக்க பிடி. 19915


(தக்கின.)

வாய்க்கு நல்லது, வயிற்றுக்கு மாற்றான்.

வாய்க்குப் பயந்ததோ, மழை நாள் மலத்துக்குப் பயந்ததோ?

வாய்க்குப் பிள்ளையும் மற்றதற்கு மாற்றானும்.

(வயிற்றுக்கு மாற்றான்.)

வாய்க் கொழுப்புச் சீலையிலே வடித்தாற் போல.

(வந்தது.)

வாய் கட்டினவளுக்குப் பிள்ளை, வயிறு கட்டினவளுக்கு அகமுடையான். 19920


வாய் கரும்பு, கை இரும்பு.

வாய் காய்ந்த புலி ஆள்மேல் விழுந்தது போல.

வாய் கைக்கு உபசார வார்த்தை சொல்லுவானேன்.

(முகமன்.)

வாய் கொள்ளுவதைத்தானே கொத்த முடியும்?

வாய் சர்க்கரை; கை கருணைக் கிழங்கு. 19925


(வாய் கருப்பட்டி.)

வாய் சர்க்கரை; கை கொக்கரை,

(கொக்கரை - கருணைக்கிழங்கு. மலையாளம்.)

வாய் சாளப் பட்டி வக்கணையாய்ப் பேசுவான்.

வாய் சொல்லும்; பிடரி கும்பிடும்.

வாய்த் தவிடும் போய் அடுப்பு நெருப்பும் அவிந்தது.

(போனது போல.)

வாய்த்தால் கிழவியும் பாடுவாள். 19930


வாய்த்தான் பிழைத்தான் சமாசாரம்.

(பிழைப்பு.)

வாய் தாராளாம், கை கருணைக்கிழங்கு.

வாய்தான் இருக்கிறது, வாய்க்கரிசிக்கு வழி இல்லை.

வாய் திறக்கப் பொய் திறக்கும்.

வாய் நல்லது ஆனால், ஊர் நல்லது. 19935


வாய் நலமோ, ஊர் நலமோ?

வாய்ப் பந்தல் நிழல் தருமா?

வாய்ப் பந்தல் போட யாரால் கூடாது?

(முடியாது.)

வாய்ப் பந்தல் போடுகிறான்.

வாய்ப் பதற்றம் வரிசை கெடுக்கும். 19940


வாய்ப் பேச்சுப் பேசுகிறவன் வளம் இழந்து போவான்.

வாய்ப் பேச்சு வாயில் இருக்கக் கை வைக்க ஆரம்பிக்கிறாய்.

வாய்ப் பேச்சைக் கொண்டு செய்கிறதா? வயிற்றெரிச்சல் கொள்கிறதா?

வாய்ப் பேச்சைப் பிடுங்கி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறது.

(பேச்சைக் கொட்டி.)

வாய் பார்த்தவன் வாழ்வு இழந்தான்; அம்பலம் பார்த்தவன் பெண்டு இழந்தான். 19945

(பார்த்தவன் இழந்தான்.)

வாய் பார்த்தவன் வீட்டில் நாய் காக்கும்.

வாய் பார்த்த வீடு நாய் காக்கும்; வைகாசி மாதம் வறுத்துக் குத்தும்,

வாய் பார்த்த வீடு நாய் கொண்டு போயிற்று.

வாய் பார்த்த வீடு நாய் பார்க்கும்;

(+ வைகாசி மாதத்தில் வறுத்துக் குத்த வேணும் நாய் காக்கும்.)

வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ? 19950


வாய் பொய் சொல்ல, மடி பிச்சை கேட்கும்.

(யாழ்ப்பாண வழக்கு.)

வாய் மதத்தால் வழக்கு இழந்தாள்.

(வாழ்க்கை இழந்தாள்.)

வாய் முத்து உதிர்ந்து போகுமா?

வாய் மூடாப் பட்டினி, கண்மூடாத் தூக்கம்.

வாய் மூடித் தலையை வெட்டுகிறதா? 19955


வாய் வாழ்த்தாவிடினும் வயிறு வாழ்த்தும்.

வாய் வாழைப்பழம் கேட்குது; கை கருணைக் கிழங்கு கேட்குது.

வாய் வாழைப்பழம்; கை கருணைக் கிழங்கு.

வாயசம் வலம் ஆனால் ஆயுசு விருத்தி ஆகும்.

(வாயசம் - காவசை.)

வாயாடிதான் வல்லவன். 19960


வாயாடி மாப்பிள்ளையாக இருப்பதைக் காட்டிலும் வரகூர்க் கூழைக் கடாவாக இருக்கலாம்.

வாயாடி வார்த்தை மட்டு இல்லாதவை.

வாயாரச் சொன்னால் தாயாரை விற்றுக் கொடு.

வாயாரே, வாயாரே, எங்கே போனாய்? கையாரிடத்திலே கடன் வாங்கப் போனேன்.

வாயால் இல்லை என்பதைக் கையால் இல்லை என்றான். 19965


வாயால் ஊதி வண்டாய்ப் பறக்கிறது.

வாயால் கெட்டாள் திரெளபதி.

வாயால் கேட்டால் வாழைப் பிஞ்சும் கொடான், தண்டித்துக் கேட்டால் தானோடே கொடுப்பான்.

வாயால் சொன்னால் தாயாரை விற்றுக் கொடுக்க வேண்டும்.

வாயால் தின்று வாயால் கக்கும் வெளவாலைப் போல. 19970


வாயால் பந்தல் இடுகிறது போல.

வாயாலே வாழ்வு; வாயாலே கேடு.

வாயில் அடிக்கலாம்; வயிற்றில் அடிக்கப்படாது.

வாயில் இருக்கிறது வழி,

(உண்டு.)

வாயில் இருக்கிறது வார்த்தை 19975


(+ வாயை ஏன் ஆட்டுகிறாய்.)

வாயில் ஈப் புகுந்தது தெரியாமல் கேட்கிறான்.

வாயில் உறவு; மனத்தில் பகை.

வாயில் கொழுக்கட்டையா?

வாயில் போகிறதைக் கக்கிக் கொடுக்கிறது.

வாயில் மண் அடிக்கலாமா? 19980

வாயில் மண் போடுவான்.

வாயில் மண் விழுந்தது.

வாயில் மணப்பால்; மண்மறை இல்லை.

வசயில் வந்தது வாசுதேவா!

வாயில் வந்ததை வறுத்துக் கொறிக்கிறது. 19985


வாயில் விரலை வைத்தால் வடிக்கத் தெரியாது.

வாயினால் இல்லை என்பதைக் கையினால் இல்லை என்பது நலம்.

வாயும் கையும் சண்டை இடும்.

வாயும் புல்லும் போல அலைகிறான்.

வாயும் புல்லுமாய் அலைகிறது. 19990


வாயும் மொக்கும்; கையும் மொக்கும்.

வாயு வேகம், மனோ வேகம்.

(கதி.)

வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிச் சேர்க்கிறான்.

வாயைக் காத்தால் தாயைக் காக்கலாம்.

வாயைக் கெடுத்த தெய்வம் மதியைக் கொடுக்கும், 19995

(கையைக் கொடுக்கும்.)


வாயைத் திறக்காதே; கையால் செய்து காட்டு.

வாயைத் திறந்தால் நாடு எங்கும் அசையும்.

வாயைப் பார்க்கச் சேவை செய்கிறவனைப் போல.

வாயைப் பார்த்து ஆளை ஏய்த்தேன்.

வாயைப் பெருக்கி வயிற்றெரிச்சல் கொட்டாதே. 20000


வாயைப் பெருக்கினாள் வாயாடி மாமியார்.

(வாயசாலி.)

வாயை மூடித் தலையை வெட்டுகிறது.

வார்த்தை இருந்து போம்; வழி தூர்ந்து போம்.

வார்த்தைக்குத் தரித்திரமா?

(தரித்திரம் இல்லை.)

வார்த்தைக்கு வார்த்தை சிங்காரம். 20005


வார்த்தைக்கு விலை உண்டானால் மொளனத்துக்கு அதிக விலை.

வார்த்தை காற்று.

வார்த்தை படித்த நாய் வேட்டைக்கு உதவாது.

வார்த்தை வார்த்தையை இழுக்கும்; வடுமாங்காய் சோற்றை இழுக்கும்.

(வார்த்தையை அழைக்கும்.)

வாராத இடத்தில் வார்ககட்டையைச் சார்த்து. 20010

வாராத வாழ்வு வந்தாலும் வடக்கில் தலை வைக்காதே.

வாரிக் கொடுக்கும் வள்ளல் கை.

வாரியல் கட்டைக்குப் பட்டுக் குஞ்சமா?

(வாரியல் கொண்டைக்கு.)

வாரியல் கட்டை வைரக் கட்டை; தேயத் தேயத் துடைப்பக்கட்டை.

வாரைக் கடித்துத் தோலைக் கடித்துத்தானே வேட்டை நாய் ஆகவேண்டும்? 20015


வால் இல்லாத குரங்குக்கு வாய் எல்லாம் பல்.

வால் இல்லாத குரங்கு போல.

வால் இல்லாத நாய்க்கு மனத்திலே சந்தோஷம்.

வால் இழந்த நரி போல.

வால் ஒன்றுதான் இல்லை. 20020


வால் நீண்ட கரிக்குருவி வலமிருந்து இடம் ஆனால் கால் நடையாய்ப் போனவர்கள் கனக தண்டி ஏறுவரே.

வால் பிராணன் தலைக்கு வந்தது.

வால் போச்சு, கத்தி வந்தது. டம்டம்டம்.

வால் போனாலும் போகிறது; எனக்குத் தோல் வேண்டும்.

வால் வைப்பதற்குள் பொழுது விடிந்து விட்டது. 20025


வால ஜோசியனும் விருத்த வைத்தியனும் நன்று.

வாலிபத்தில் இல்லாத மங்கையை வயசு வந்தபின் என்ன செய்கிறது?

(வாலிபத்தில் கிடைக்காத,)

வாலிபத்தில் தேடாத தேவடியாள் வயசு வந்த பின் தேடப் போகிறாளா?

வாலிபத்தில் முதிர்ந்த புத்தி, குறுகின வயசுக்கு அடையாளம்.

வாலில் கலத்தைக் கட்டினால் மாடு வேளைக்குக் குறுணி கறக்கும். 20030


வாலை ஆட்டாதே.

வாலை ஒட்ட நறுக்கி விடுவேன்.

வாவல் மீனைச் சாப்பிட்டு ஆவலைப் போக்கு

வாழ்க்கை கொடுத்தவன் கையில் வாழ்நாள் அடைக்கலம்

வாழ்ககைப் படுகிறதை நம்பி அவிசாரி ஆகிறதும் கெட்டது. 20035


வாழ்க்கை படுகிற பெண்ணுக்குச் சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நிற்குமா?

வாழ்கிறதும் கெடுகிறதும் வாயாலேதான்.

வாழ்கிறதும் தாழ்கிறதும் வண்டி உருளை போல.

வாழ்கிற பெண்ணைத் தாயார் கெடுத்தாள்.

(கெடுத்தது போல.)

வாழ்கிறபோது இல்லாத வாழைப்பூச் சேலை தாலி அறுத்துத் தறி போட்டு வந்ததாம். 20040


வாழ்கிறவளுக்குச் சக்களத்தி வந்து முளைத்தான்.

வாழ்கிறவளை வைய வேண்டாம்; தாழ்கிறவளைத் திட்ட வேண்டாம்.

(தாழ்ந்தவனை.)

வாழ்கிறவன் வாழ்கிறான் என்று மதுரை எல்லாம் பேராம்.

வாழ்கிறவனுக்கு வைரம்.

வாழ்கிறவனை வாழ்த்த வேண்டாம்; தாழ்கிறவனைத் திட்ட வேண்டாம். 20045


வாழ்கிற வீட்டில் மரநாயைக் கட்டினதுபோல.

வாழ்கிற வீட்டில் வனக்குரங்கை வைத்தது போல.

வாழ்கிற வீட்டுக்கு ஒரு பெண்ணும் வைக்கோல் போருக்கு ஒரு கன்றும் இருந்தால் போதும்.

(இரண்டு பெண்ணும் எருமைக்கன்றும்.)

வாழ்கிற வீட்டுக்கு வாழையை வைத்துப் பார்.

வாழ்கிறான் வாழ்கிறான் என்று மதுரை எல்லாம் பேராம்; ஆற்றில் இறங்கினால் ஐம்பத்தெட்டுத் தொல்லையாம். 20050


வாழ்ந்த மகள் வந்தால் வர்ணத் தடுக்கு எடு; கெட்ட மகள் வந்தால் கிழிந்த தடுக்கு எடு.

வாழ்ந்தவர் கெட்டால் வறையோட்டுக்கும் ஆகாது; கெட்டவர் வாழ்ந்தால் கிளைப்புறு தாமரை.

வாழ்ந்தவன் கெட்டால் வறையோட்டுக்கும் ஆகான்.

வாழ்ந்தவன் கெட்டு வறியவனானால் தாழ்ந்தவனும் ஏசுவான்.

வாழ்ந்தவன் தாழ்ந்தால் வறையோட்டுக்கும் ஆகான். 20055


வாழ்ந்தவனை வாழ்த்த வேண்டாம்; தாழ்ந்தவனைத் திட்ட வேண்டாம்.

(வாழ்கிறவனை.)

வாழ்ந்தாளாம சுடபி, வறுத்தாளாம் ஓடு வைத்து: ஓடு உடைந்தது என்று உட்கார்ந்தாளாம சேஷி.

(உட்கார்ந்து அழுதானாம்.)


வாழ்ந்தாளாம் சேஷி; வறுத்தாளாம் வறண்ட ஓட்டை.

வாழ்ந்து கெட்டவன் வடக்கே போ; கெட்டு நொந்தவன் கிழக்கே போ.

வாழ்நாள் உடையான் வலுப்பட்டுச் சாகான் 20060


வாழ்நாளுக்கு ஏற்ற வயிற்றெரிச்சல்.

வாழ்நாளைக் கொடுத்து வாண தீர்த்தம் ஆடு.

வாழ்வதும் கெடுவதும் வாயால்தான்.

வாழ்வாருக்குச் சீதேவி வாயிலே.

வாழ்வாள் பிள்ளையை மண் விளையாட்டிலே தெரியும். 20065

(யாழ்ப்பாண வழக்கு.)


வாழ்வாருக்குச் சீதேவி வாயிலே.

வாழ்வு ஒரு காலம்; தாழ்வு ஒரு காலம்.

வாழ்வும் கேடும் வாயாலே.

வாழ்வும் சில காலம்; தாழ்வும் சில காலம்.

வாழ்வும் தாழ்வும் ஒரு வழி நில்லா. 20070


வாழ்வு வந்து வலக்காலைச் சுற்றுகிறது; வாங்கடா பித்தளை பாடகத்தை.

(வாங்கடி வலக்கைப் படத்தை.)

வாழ்வு வரும்போது மதி ஓடி வரும்.

வாழ்க்கை கொடுத்தவன் கையில் வாழ்நாள் அடைக்கலாம்.

வாழ்வைத் தள்ளினாலும் சாவைத் தள்ளப்படாது.

வாழத் தெரியாது வாழச் சொன்னால் வாயாலும் கையாலும் வாழச் சொன்னாள். 20075


வாழப் போகிற பெண் சீப்பை எடுத்து ஒளித்த கதை.

வாழ மாட்டாத பெண்டாட்டிக்குக் கைபட்டாலும் குற்றம்; கால் பட்டாலும் குற்றம்.

வாழ வந்த குரங்கு வையகம் புகழைத் தேடிக் கொண்டதாம்.

வாழ வந்தவனுக்கு வழியிலே என்ன சோலி?

வாழ வரம் வாங்கி வந்த பிறகு முடியவில்லை என்றால் யார் விடுவார்? 20080


வாழாக் குமரி மூளா நெருப்பு.

(யாழ்ப்பாண வழக்கு.)

வாழாத நாய் வாழ்ந்த நாயைக் குறை சொல்லும். 

வாழாத பெண்ணுக்கு மை ஏண்டி? பொட்டு ஏண்டி?

மஞ்சள் குளி ஏண்டி?

வாழாத பெண்ணைத் தாயார் கெடுத்தாள்.

வாழாத பெண்ணைத் தாழ்வாய் உரைக்காதே. 20085


வாழாப் பெண் தாயோடே.

வாழும் குமரிக்கு வலப்புறத்தில் மச்சம்; மனையாளும் மன்னனுக்கு இடப்புறத்தில் மச்சம்.

வாழும் பிள்ளையை விளையாட்டில் தெரியும்.

(மண் விளையாட்டு.)

வாழும் வீட்டுக்கு ஒரு பெண்; வைக்கோற் படப்புக்கு ஒரு கன்று.

வாழும் வீட்டுக்கு வெறிநாய் கட்டியது போல. 20090


வாழும் வீட்டுக்கு வேட்டை நாய் வேண்டாம்.

வாழையடி வாழையாய்.

(+ வாழைக்கு ஒரு குலை.)

வாழை ஆடியும் முள் ஆடியும் வாழைக்குச் சேதம்

வாழை ஆடினானும் மூங்கில் ஆடினாலும். வாழைக்குத்தான் நஷ்டம்.

வாழை இல்லை, தையல் இலை. கை இல்லை. 20095


வாழை இளசும், வழுதலை முற்றலும் நடு.

வாழைக்காய்க் கறியும் வளர்த்த பிள்ளையும்.

வாழைக்காய்க் கூட்டும் வாத்தியார் பெண்ணும் நிஷித்தம்.

வாழைக்காய் மடங்கினது போல.

வாழைக்கு இரண்டு குலைகள் கண்டதில்லை. 20100


வாழைக்கு ஓர் இலை.

வாழைக்குக் கீழ்க் கன்று வந்து முளைப்பது போல்.

வாழைக்குக் கீழ்க் கன்று வாங்கிப் பயிர் வைக்க வேண்டும்.

வாழைக்குக் கொத்து; வழுதலைக்குத் தண்ணீர்.

வாழைக்குத் தான் ஈத்த காய் கூற்றம். 20105


வாழைக்கு வெட்டும் வழுதுணங்காய்க்குத் தண்ணீரும்.

வாழை நட்டால் தாழ நடு.

வாழைப் பழத்தில் ஊசி ஏற்றினாற்போல்.

வாழைப் பழத்தில் வழ வழ என்று ஊசி ஏறுவது போல. வாழைப்பழத்துக்கு வீங்கித் தோலைப் போட்டான் புல்லாப் பூச்சியே. 20110

(புல் மேலே போட்டால் ஆகாதே. )


வாழைப்பழம் அறியாதவனுக்குத் தோலைப் பிதுக்கிக் காட்டுகிறதா?

வாழைப்பழம் கொண்டு போனவன் வாசலில் இருந்தான்; வாயைக் கொண்டு போனவன் ஒரு வீட்டில் இருந்தான்.

வாழைப்பழம் கொண்டு வக்கவன் வாசற்படியிலே; வாய் கொண்டு வந்தவன் நடு வீட்டுக்குள்ளே.

வாழைப்பழம் சாதத்தோடு எல்லோரும் சாப்பிட்டுப் போகக் கீரைச் சோற்றுக்குக் கதிகெட்டு தின்றவன்.

வாழைப்பழம் தின்னாக குரங்கு உண்டா? 20115

(பிடிக்காத குரங்கு இல்லை.)


வாழைப்பழம் தின்னுகிறது வருத்தமாய் இருக்குமா?

வாழைப்பழம் வேண்டாக் குரங்கு உண்டா?

வாழையில் இருக்கிறது வைப்பு.

வாழை வடக்கு ஈனும்; வான் கமுகு தெற்கு ஈனும்.

(+ மேற்கு வாழ்வு வரும் காலத்திலே.)

வாழை வாட்டமும் வரகு வாட்டமும் தெரியா. 20120


வாழை வாழ வடக்கு, வைத்தவன் வாழக் கிழக்கு, வாழை சாக மேற்கு, வைத்தவன் சாகத் தெற்கு

வாழை வசட்டமும் வெங்காய வாட்டமும் தெரியா.

வாழை வாழ வடக்கு. வைத்தவன் வாழக் கிழக்கு: நாடு வாழ

மேற்கே; நாசமாய்ப் போகத் தெற்கே.

வாள் ஏறுபடத் தேனேற மாய்ந்தாற் போல்.

வாள் பிடித்தவன் கையில் வாழ்நாள். 20125


வானம் இல்லாது நீளாது.

வானாடி மாப்பிள்ளையாய் இருப்பதைக் காட்டிலும் வரகூர்க் கூழைக் கடாவாக இருக்கலாம்.

(வரகூரில் நன்கு வளர்ப்பார்கள்.)

வாளுக்கு ஆயிரம்; தோளுக்கு ஆயிரம்.

வாளுக்கு ஆயிரம், தோளுக்கு ஆயிரம் சம்பாதித்தாலும் மட்டாய்ச் செலவிடு.

வான் குருவியின் கூடும் வன் கறையான் புற்றும் தேன் சிலந்தி இறாட்டும் செய்யத் தெரிவரிது. 20130 வான் குருவியின் வயிற்றெரிச்சல் வழி வழி விடாது.

வான் குருவி வாழ்வு பெற்றால் வையகம் செழிக்கும்.

வான் செய்த நன்றிக்கு வையகம் என் செய்யும்?

(உதவிக்கு.)

வான் செய்யும் கொடுமைக்கு வையகம் என் செய்யும்?

வான அம்புலி வா என்றால் வருமா? 20185


வானக் கறுப்போ, ஆனைக் கறுப்போ?

வானத்தில் உள்ள அம்புலியை வா என்றால் வருமா?

வானத்தின் கீழ் இருந்து இடிக்கு ஒளிக்கிறதா?

வானத்தின் கீழ் இருந்து மழைக்கு அஞ்சினால் தீருமா?

வானத்துப் புறாவை நம்பி கைப் புறாவை இழந்தது போல. 20140


வானத்தை வில்லாய் வளைப்பான்; மணலைக் கயிறாய்த் திரிப்பான்.

வானம் இழந்து தலைமேல் விழுந்தது போல்.

வானம் இருக்க மழை போமா?

வானம் ஈன்றது; பூமி தாங்கிற்று.

வானம் கருக்கப் பிசானம் கருக்கும். 20145


வானம் சுரக்கத் தானம் சுரக்கும்.

(சிறக்கும்.)

வானம் சுருங்கின் குணம் சுருங்கும்

வானம் சுருங்கின் தானம் சுருங்கும்.

வானம் பார்க்கப் போயும் இடம் இடைஞ்சலா?

(இடு முடுக்கா?)

வானம் பொத்தல் என்று சிற்றெறும்புத் தோலால் அடைந்தான். 20150


வானம் பொழிய வேண்டும்; பூமி தழைக்க வேண்டும்.

வானம் வழங்க தானம் வழங்கும்.

வானமும் பூமியும் கொள்ள தான் மரத்திலும் கல்லிலும் இருப்பானா? 

வி

விக்க விக்கச் சோறு போட்டுக் கக் சக் கக்க வேலை வாங்க வேணும்.

விக்குகிற வாய்க்கு விளாங்காய்; விழுகின்ற இடத்துக்கு அரிவாள் மனை. 20155


விகட கவியா?

விச்சுளி வலமானால் நிச்சயம் வாழ்வு உண்டாம்.

(தரும்.)

விசாகத்தில் மழை; பயிர்களில் புழு.

விசாரம் முற்றினால் வியாதி.

விசிறிக் காதும் வேள்விப் பணமும் விரைவில் வரும். 20160


விசிறிக்குக் காற்றும் வேள்விக்குப் பணமும் எங்கிருந்தாலும் வரும்.

விசும்பில் துளி விழின் அல்லது பசும்புல் தலை காண்பது அரிது.

(குறள். இல்லாமல் )

விசும்பு முட்டான கோலும் துரும்பு முட்டத் தீரும்.

விசுவாசக்காரனுக்கு வெந்நீரும் பருக்கையும்; தாட்டோட்டக்காரனுக்குத் தயிரும் சோறும்.

(வெந்நீரும் சோறும்.)

விசுவாசக் கொக்கு நடமாடிச் செத்ததாம். 20165


விசுவாசப் பூனை கருவாட்டைத் தூக்கிக் கொண்டு போகிறதாம்.

(தூக்கிற்று)

விசுவாசம் இருந்தால் வேசியும் பிழைப்பாள்; நிசம் இருந்தால் நீசனும் தழைப்பான்.

விசுவாசம் கெட்ட நாயே!

விட்ட இடம் பட்டணம்; விழுந்த இடம் சுடுகாடு.

விட்ட குறை. தொட்டகுறை. 20170

(+ விடுமா?)


விட்டத்தில் இருக்கிற பூனை இங்கிட்டுத் தாவுகிறதோ, அங்கிட்டுத் தாவுகிறதோ?

விட்டத்துக்கு எட்டாம் நாள் அட்டமி.

(விட்டம் - அவிட்டம்.)


விட்டதடி உன் ஆசை விளாம் பழத்து ஓட்டோடே.

(விட்டாதடா ஆசை.)

விட்டதே நம் உறவு, வெண்கலத்தில் ஓசை போல.

விட்ட பாம்பும் பட்டுப் போகும். 20175

(வெயில்)


விட்டில் பூச்சியைப் போல் பறந்த திரிகிறான்.

விட்டில் பூச்சி விளக்கில் விழுவதுபோல.

விட்டு அடித்தால் என்ன? கட்டி அடித்தால் என்ன?

விட்டு அடிக்கிறதிலும் தொட்டு அலை.

விட்டு அறுத்தாலும் ஆகாது என்று ஒட்ட அறுத்திடுவேன். 28180


விட்டுக் கெட்டது காது; விடாமல் கெட்டது கண்.

(எண்ணெய். தட்டிக் கெட்டது வயிறு தட்டாமல் கெட்டது. கலை.)

விட்டுச் சொன்னால் குட்டுக் குலையும்.

(விரித்து உடுத்தினால் அமுக்குப்படும் படியும்.)

விட்டு விட்டாலும் ஒட்டிக் கொண்டு வருகிறான்.

விட்டு விட்டுப் பெய்கிற மழையிலும் விடாமல் பெய்கிற தூவானம் நல்லது.

விட்டு வைத்த கடனும் பெற்று வைத்த பிள்ளையும் எங்கும் போகா 20185


விடக்கே ஆயினும் வடிக்கு ஆகாது.

விடாச் சுரத்துக்கு விஷ்ணுக் கரந்தை.

விடாத மழை பெய்தாலும் படாத பாடு பட வேண்டும்.

விடாத மழையால் இல்லி ஒழுக்கு அடைபடும்.

விடா முன்டனும் கொடாக் கண்டனும். 20190

(கண்டனும்.. முண்டனும்.)


விடாய் தீரச் கங்க ஸ்நானம் பண்ணிப் பாவம் போகுமாப் போலே.

விடிக்கப் போன இடத்தில் விளாம் பழம் கிடைத்தது போல்.

விடிகிற மட்டும் இறைத்தவனும் சாலை உடைத்தவனும் சரியா?

விடிந்ததும் பெண்ணுக்கு முக்காடோ?

விடிந்தால் தெரியும் மாப்பிள்னை குருடும், பெண் குருடும். 20195


விடிந்தால் தெரியும் வெளிச்சம்.

விடியக் கல்யாணம்; பிடி தாம்பூலம்.

விடிய விடிய இறைக்க, விடித்த பிறகு உடைக்க.

விடிய விடியக் கதை கேட்டுச் சீதைக்கு ராமன் சிற்றப்பன் என்றானாம்.  விடிய விடியக் கதை கேட்டு ராமனுக்குச் சீதை என்ன வேண்டும் என்றானாம். 20200


விடிய விடியத் துரத்தியும் ஆண் கழுதையாகத்தான் முடிந்தது

விடிய விடியத் தேய்த்தாலும் கறுப்பு நாய் வெள்ளை நாய் ஆகுமா?

விடிய விடியப் பாடுபட்டும் விளக்குக்கு எண்ணெய் இல்லை

விடிய விடிய மழை பெய்தாலும் ஒட்டாஞ்சில்லு முளைக்காது

(ஒட்டாங் கிளிஞ்சல். கொட்டாங்கச்சி.)

விடிய விடிய ராமாயணம் கேட்டுச் சீதைக்கு ராமன் என்ன ஆகவேணும் என்றானாம். 20205

(சீதைக்கு ராமன் சிற்றப்பா என்றாளாம்.)


விடியற் காலத்தில் கல்யாணம்; பிடியடா பயலே பாக்கு வெற்றிலை

விடியற்காலைத் தூக்கம் வெல்லம் போல

விடியாமல் உலை வைத்து வடியாமல் விடுவேனோ?

விடியா மூஞ்சி வேலைக்குப் போனால் வேலை கிடைத்தாலும் கூலி கிடைக்காது

விடியும் மட்டும் இறைத்தவனும் விடிந்த பின்பு சாலை உடைத்தவனும் சரி 20210


விடியும் மட்டும் குரைத்தாலும் வீட்டு நாய் வேட்டை நாய் ஆக முடியுமா?

விடியும் மட்டும் மழை பெய்தாலும் ஒட்டாங் கிளிஞ்சில் கரையுமா?

விடியும் மட்டும் மழை பெய்தாலும் ஒட்டாஞ்சில்லுக் கரையுமா?

(ஒட்டாங் கிளிஞ்சல்.)

விடு விடு சங்கிலி, வேப்பஞ் சங்கிலி, விட்டால் குடி கெட்டும் போம்.

விடை தனிக்கு அஞ்சாது. 20215


விண் ஏற தப்பினாலும் கண் ஏறு தப்பாது

(பொய்த்தாலும் பொய்க்காது.)

விண் காட்டப் போனவன் கண் காட்ட வந்தானாம்

விண்டு அழுத பிள்ளையைக் கொண்டு அணைப்பா இல்லை

விண்ணாண எங்கே கிண்ணாரம் எங்கே

விண்ணு மாலைக்குக் கல்யாணம்; விழுந்து கோட்டா சாம்பலா 20220


வின்தொடு கொடுமுடி மேகுவும் வீறளி தென்திசைக் கிரியும்

விண் பொய்த்தால் மண் பொய்க்கும்

விண் வலிதேச, மண் வலிதோ? 

விண் விடும் குடிக்கு விண் விடும்; என் பாவி குடிக்கு விண் விடுமா?

வித்தாரக் கள்ளி விறகு ஒடிக்கப் போனாளாம்; கற்றாழை முன் கொத்தோடே தைத்ததாம். 20225

(கத்தாரி முன்.)


வித்தாரக்காரன் செத்தால் பிழைக்கான்.

வித்தியா சாலை விநோத சாலை.

வித்து இருக்கும் இடத்தில் வேர் இருக்க வேண்டும்.

வித்து இல்லாத சம்பிரதாயம், மேலும் இல்லை; கீழும் இல்லை.

வித்து இல்லாமல் மரம் இல்லை; மரம் இல்லாமல் வித்தும் இல்லை. 20230


வித்து இல்லாமல் முளை உண்டாகுமா?

வித்து இன்றிச் சம்பிரதம் இல்.

(பழமொழி நானூறு.)

வித்துக்கு விட்ட சுரைக்காய்போல.

வித்துப் பலம் பத்துப் பலம்.

வித்துவான் அருமையை விறகு தலையன் அறிவானா? 20235


வித்துவான் அருமையை வித்துவான் அறிய வேண்டுமே.

அல்லாமல் விறகு விற்கிறவனா அறியப் போகிறான்?

வித்துவான் கத்துவான்.

வித்துவான்களுக்கு எது பெரிது?

வித்துவான் தனவான். 20240


வித்துவானுக்கு ஏது பரதேசம்?

(வேற்று நாடு ஏது?)

வித்துவானும் மதயானையும் சரி.

வித்துவானை அடித்தவனும் இல்லை; பெற்ற தாயுடன் போனவனும் இல்லை.

வித்தை அடிக்கிற கோழிக்கு விலாவில் இருக்கிறதாம் பித்து.

(அழிக்கிற)

வித்தை அடித்தான் தட்டான்; பொன்னிறம் ஆச்சுது கொக்கு. 20245


வித்தை அடித்தே செத்த பாம்பு ஆடுது.

வித்தை அடி மாமி, கொத்துதடி கோழி.

வித்தை அடி மாமி, விற்கிறதடி பணியாரம்.  வித்தை அழிக்கிற கோழிக்கு விலாவில் இருக்கிறதாம் பத்து.

வித்தை அற்றவன் அழகு, வாசனை இல்லாத முருக்கம்பூப் போல. 20250


வித்தை இல்லாத மாந்தர் விலங்கினும் கடையர்.

வித்தை உள்ளவன் தூங்கமாட்டான்; விசாரம் உள்ளவனும் தூங்க மாட்டான்.

வித்தை உள்ளவன் பெரியவன்.

வித்தைக் கள்ளி மாமியார் விறகொடிக்கப் போனானாம்; கற்றாழை முள் கொத்தோடே தைத்ததாம்.

வித்தைக் கள்ளி, விளையாட்டுக் கள்ளி, பாகற்காய் விற்ற பழங்கள்ளி. 20255


வித்தைக்காரப் பெண்பிள்ளை செத்த பாம்பை ஆட்டுகிறாள்.

வித்தைக்காரன் தவறி விழுந்தால் அதுவும் ஒரு விளையாட்டு.

வித்தைக்காரன் நாய்க்குக் கற்ற வித்தை எல்லாம் தெரியும்.

வித்தைக்குச் சத்துரு விசனம் தரித்திரம்.

வித்தைக் குதிரைக்குப் புல்லா? 20260


வித்தை பதினெட்டும் விழல்.

வித்தையில் எளிது சூனியம்.

பன்னத்திலே எளிது நீற்றுப் பெட்டி.

வித்தையில் வித்தை வகார வித்தை.

(வகர்ற.)

வித்தை விரும்பு.

விதி அற்ற நாய்க்கு வில்லி வீரமாம் தாய் வீடு. 20265


விதி அற்ற மாடு கதி வெட்ட புல்லைத் தின்னும்.

விதி அற்றவன் வேட்டகத்துக்குப் போவான்.

விதி உடையவன் கண்ணுக்கு விளக்காய்த் தெரிந்தது.

(விளக்குப் போல் இருப்பாள்.)

விதி உள்ள அகமுடையானுக்கு ரதியாக இருப்பாளாம்.

விதி எப்படியோ, மதி அப்படி. 20270


விதி கெட்டவல் விறகுக்குப் போனால் விறகு கிடைத்தாலும், கட்டக் கொடி கிடைக்காது.

(யாழ்ப்பாண வழக்கு.)

விதித்த விதியை விட வேறு நடக்குமா?

(கிடக்க வேறு விதி.)

விதிப்பயனை வெல்ல முடியுமா? 

விதிப்பழத்தை விலை கொடுத்து வாங்குவது போல.

விதி பார்த்து வகுத்த விபத்தை விஷ்ணுவாலும் தடுக்க முடியாது. 20275


விதி போகிற வழியே மதி போகும்.

விதி முடிந்தவனை விரியன் கடிக்கும்.

(முடித்தால்.)

விதியின் பயனே பயன்.

விதியின் வழியே மதி செல்லும்.

விதியை மதியால் தடுக்கலாமா? 20280

(தடுக்கலாம்.)


விதியை மதியால் வெல்லலாம்.

விதியை வெல்லுவார் உண்டோ?

விதிவசம் போல் ஆகும்.

விதி வலிது.

விதி வழி மதி செல்லும். 20285


விதி வழி வந்த நிதி சதி செய்து விடும்.

விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?

(போடக்.. காய்க்குமா?)

விதைக்கு ஏற்ற விளைச்சல்.

விதைக்கு விட்டி காய் போல,

விதைக் கூடை எடுக்கையில் பட்டி மாடு தொடர்ந்த கதை. 20290


விதைக் கோட்டையில் எலியை வைத்துக் கட்டலாமா?

விதைத்ததும் குறுணி, கண்டதும் குறுணி.

விதைத்தால் வரகை விதை; சேவித்தால் வடுகனைச் சேவி.

விதைப்பதன் முன் வேலி அடை

விதை முதல் அகப்பட்டாலும் வேளாண்மையை விடாதே. 20295


விதை முந்தியா, மரம் முந்தியா?

விதையின் தன்மைதானே விளைச்சலில் வரும்?

விதையை அடித்தானாம்; விலவிலே, போய்ப் பட்டதாம்,

விதையைக் குற்றித் தின்னு.

விதையை விழுங்கிய கோழி போல். 20300


விந்து விட்டாயோ, நொந்து கெட்டாயோ?

(வெந்து.)

விநயம் இல்லாத வித்தை பயன் இல்லை.

விநாச சாலே விபரீத புத்தி.

விபசாரம் செய்வாரைச் சுட்டாலும் விடமாட்டார்.

விபசாரி என்று விமானம் ஏறினாலும் திருடி என்று தெரு வழிப்போக முடியுமா? 20305

வியாச்சியம் சேற்றில் நட்ட கம்பம்.

வியாதிக்குப் பத்தியம்: வேதாந்தத்துக்கு வைராக்கியம்.

வியாதிக்கு மருந்து உண்டு; விதிக்கு மருந்து உண்டா?

வியாதியிலும் மருந்து கொடியது.

வியாழன் கூடினால் விவாகம் கூடும். 20310

(வியா தியாயினும்.)


வியாழன் தெற்கே சூலம்.

விரகன் கோசம் கட்டை தட்டிப் போம்.

விரதத்திலும் பெரிதோ ஒரு சந்தி?

விரதம் கெட்டாலும் சுகம் தக்க வேண்டும்; சுகம் கெட்டாலும் விரதம் தக்க வேண்டும்.

விரல் உதவி விருந்தினர் உதவார். 20315

விரல் உரல் ஆனால் உரல் உத்தரம் ஆகாதா?

(உரல் என்ன ஆகும்?)

விரல் கண்ணிலே குத்தினது என்று வெட்டி விடுவார்களா?

விரல் சுற்றின் மேல் அம்மி விழுந்ததுபோல்.

(உரல் விழுந்தது போல்.)

விரல் நக்கி மோர் குடிப்பது போல.

விரல் நுழைய இடம் உண்டானால் தலையைப் புக விடலாம். 20320

<poem>விரல் நுழைய இடம் கொடுத்தால் கூரலை நுழைக்கிறான்.

(உலக்கையை, தலையை.)

விரல் போகாத இடத்தில் உரல் போகுமா?

விரலுக்குத் தகுந்த வீக்கம்.

(வீக்கந்தான் வீங்கலாம்.)

விரலுக்குமேல் நீணடால் வெட்டி விடவேண்டும் என்கிறாயே!

விரலூண்டு இடம் கொடுத்தால் வீடு எல்லாம் கைக் கொள்கிறதா? 20825

விரலைக் காட்டி உரலை விழுங்குவான். விரித்த ஜமக்காளம். விடியும் மட்டும் கச்சேரி.

விரித்து உடுத்தினால் அழுக்குப் படும்.
விரித்த உலகில் தெரிந்தவர் சிலர்.
விரியன் புரளுகிறது போல.

20330

விருத்தாசலம் போனால் திரட் பாவம் போகும்.
விருத்தர நாரீ பதிவ்ரதா.
விருதுக்காகவா வேட்டை ஆடுகிறது?
விருதுகூறி வந்து செடியிலே நுழைகிறது போல.
விருதுப்பட்டிக்குப் போன சனியனை வீட்டுக்கும் வந்து விட்டுப்
போ என்றானாம்.

20335

விருதுபட்டிச் சனியனை விலைக்கு வாங்கினது போல.
விருந்து இட்டுப் பகையை விளைக்கிறது .
(இட்டா - பகைமையை.)
விருந்து இல்லாச் சோறு மருந்தோடு ஒக்கும்.
விருந்து இல்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்.
விருந்துக்காகவா வேட்டை ஆடுவது?

20340

விருந்துக்கு அழைத்து விஷத்தைக் கொடுத்தது போல.
விடுத்துக்கு நான்; பரியப் பணம் அண்ணளைக் கேள்.
விருந்தும் மருந்தும் மூன்று நாள்.
(வேனை, பொழுது.)
விருந்தைப் பண்ணிற் பொருந்தப் பண்ணு.
விருப்பத்தினால் ஆகாதது விம்பினால் ஆகுமா?

20345

விரும்பினால் வேம்பும் கரும்பு ஆகும்.
விருஷ்டியில் விதை மேல்,
விரை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா
(விதை .)
விரைக்கு விட்ட காய் போல.
{விதைக்கு.)
விரைக் கோட்டையில் எலியை வைத்துக் கட்டினது போல
(விதைக் கோட்டையில் பெருச்சாளி புகுந்தாற் போல.)

20350

விரை முந்தியோ மரம் முந்தியோ?
{விதை .)
விரைவில் கருமம் சிதையும் இடராய் விடும்.
(பழமொழி நானூறு.)
வில் அடியால் சாகாதது, கல் அடியால் சரகுமா?
வில் அம்பை விடச் சொல் அம்பு கொடியது.
வில் அம்போ, சொல் அம்போ?

20355

வில் இல்லாதவன் அம்பு தேடுவானேன்?
வில்லங்கத்தை விலைக்கு வாங்கினாற் போல.
வில்லுக்குச் சேரன்; சொல்லுக்குக் கீரன்,
வில்லுக்கு விஜயன்; சொல்லுக்கு அரிச்சந்திரன்.
வில்லுக்கு விஜயன்; சொல்லுக்குக் கீரன்.

20360

வில்லுக்கு விஜயன்; பரிக்கு நகுலன்.
வில்லுக் குனியாது எய்தால் விலகாது எதிரிபடை.
(எதிர்த்த பகை.)
வில்லும் விளாங்காயுமாக இருக்கிறது,
வில்வப் பழம் தின்பார் பித்தம் போக; பனம்பழம் தின்பார்
பசி போக.
வில்வம் பித்தம் தீர்க்கும்; பனை பசி தீர்க்கும்,

20365

வில் வளைந்தால் மோசம் தரும்.
வில் வளைவதும் பெரியோர்கள் பணிவதும் நல்லதற்கு
அடையாளம் அல்ல.
விலக்கக் கூடாத துன்பத்துக்கு விசனப்படாதே. விலங்கும் பறவையும் விதித்த கோடு கடவா,
(தவறா,)
விலங்கு வேண்டாம்; குட்டையில் மாட்டு என்றது போல,

20370

விலங்கு வேண்டாம்; தொழுவில் இருக்கிறேன்,
விலங்கை விட்டுத் தொழுவில் மாட்டிக் கொண்டது போல.
விலா இறச் சிரிப்பார்கள்.
விலாங்கு மீன் வழுக்கி ஓடுவது போல.
விலைக்குக் கொண்டு விருதுக்கு வேட்டை ஆடுகிறது.

20375

விலைமகட்கு அழகு மேனி மினுக்குதல்.
விலை மோரில் வெண்ணெய் எடுத்துத் தலைமகனுக்குக்
கல்யாணம் பண்ணுவான்,
(தலைமகனுக்கு )
விலை மோரில வெண்ணெய் எடுப்பது.
(வெண்ணெய் எடுத்தாளாம்.)
விவேகத்தில் மேன்மை அவிவேகத்தை ஒழித்தல்,
விழக்குழி பாய்ச்சுகிறது.

20380

விழலுக்கு இறைத்த நீர் போல.
விழலுக்கு முத்துலை போட்டு இறைத்தேன்.
விழிக்கு விழி பாய்ச்சுகிறது.



விழித்த முகம் நல்ல முகம்.

விழித்தவன் கன்று நாகு கன்று; தூங்கினவன் கன்று கடாக்கன்று. 20385


விழித்து இருக்க விழியைத் தோண்டினாற் போல.

விழியில் குத்தின விரலை அறுப்பார் உண்டோ?

விழுகிற சுவரில் கை வைத்தாற் போல.

விழுகிற பிள்ளைக்கு அரிவாள்மணையை அண்டல் கொடுத்தாற் போல.

(அண்டை கொடுப்பதா.)

விழுங்கின இரகசியம் வயிற்றில் இராது. 20390


விழுந்த இடம் சுடுகாடு.

விழுந்த இடம் பொழுது; விட்ட இடம் விடுதி.

விழுந்தது பாம்பு; கடித்தது மாங்கொட்டை.

விழுந்த பிள்ளையை எடுக்க நேரம் இல்லை.

(சவிட்ட)

விழுந்தவன் எழுந்திருந்தால் வெட்கத்துக்கு அஞ்சிச் சிரிப்பான். 20395


விழுந்தவன் சிரித்தான் வெட்கத்துக்கு அஞ்சி.

விழுந்தாரைச் சிரியாத வெந்துக்களும் இல்லை.

(பந்துக்களும், யாழ்ப்பாண வழக்கு.)

விழுந்தால் சிரிப்பார்; வேடிக்கை பார்ப்பார்.

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறான்.

விழுந்து உடுத்தால் அழுக்குத் தெரியும். 20400


விழுந்தும் கரணம் போட்டேன் என்ற கதை.

விழுந்து விழுந்து சம்பாதிக்கிறான்.

விழுந்து விழுந்து புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும்.

விள்ளாதது குறையாது; இல்லாதது வராது.

விளக்கில் கொளுத்தின பந்தம் போல. 20405


விளக்கில் விழும் விட்டிற் பூச்சி போல.

(விளக்கில் மொய்த்த விட்டிற் பறவை போல.)

விளக்கு இருக்க நெருப்புக்கு அலைவானேன்?

விளக்கு இருக்க மின்மினித் தீக் காய்ந்தவாறே.

(தேவாரம்.)

விளக்கு இல்லாத வீட்டில் பேய் குடி இருக்கும்.

(குடி புகும்.)

விளக்கு ஏற்றிக் கூடையால் மறைக்கிறது. 

விளக்கு ஏற்றிக் கெட்டவரும் வெற்றிலை கொடுத்துக் கெட்டி வரும் இல்லை.

விளக்கு ஒளிக்கு ஆசைப்பட்ட விட்டில் போல.

விளக்குக்கு முன் மின்மினி போல.

விளக்குமாற்றால் அடித்துக் குதிரையோடு தீவட்டி கொடுத்தாற் போல.

(குதிரைமேல் ஏற்றி.)

விளக்குமாற்றுக்குப் பட்டுக்குஞ்சலம் கட்டினாற் போல. 20415

(விளக்குமாற்றுக் கட்டைக்கு.)


விளக்கு வைத்துத்தாவி பார்க்க வேண்டும்.

விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிரப் பிள்ளை பிழைப்பது இல்லை.

(கேடே ஒழியும்.)

விளக்கெண்ணெய் குடித்தவன் மூஞ்சி போல.

விளக்கெண்ணெய் வார்த்துப் பிட்டம் கழுவின கதை.

விளக்கெண்ணெயாம் தலைக்கு எண்ணெய். 20420


விளக்கெண்ணெயிற் போட்டி கழற்காய் போல.

(கழற் சிக்காய்.)

விளக்கெண்ணெயைத் தடவிக்கொண்டு ஆற்று மணலில் புரண்டாலும் ஒட்டுகிறதுதான் ஒட்டும்.

(வீதியில் புரண்டாலும்.)

விளக்கைக் கண்ட விட்டிற் பூச்சிகள் போல.

விளக்கைக் கையில் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவாரைப் போல.

விளக்கைக் கொளுத்திக் கீழே வைப்பார் உண்டோ? 20425


விளக்கைப் பிடித்துக் கொண்டே கிணற்றில் இறங்குகிறதா?

(விழுகிறதா?)

விளக்கை வெளியே வைத்தாற்போல.

விளக்கை வைத்துக கொண்டு நெருப்புக்கு அலைகிறது போல.

(அலைவானேன்?)

விளங்கா மூடி விறகுக்குப் போனால் விறகு அகப்பட்டாலும் கொடி அகப்படாது.

(விளங்கா மடையன்.)

விளங்காய்க்குத் திரட்சி உண்டு பண்ணுகிறதா? 20430


விளங்காய் தின்று விக்கின கதை.

(விளங்காய்.)


விளைகிற போதே சோணலாய் விளைந்தால் விறகு விராட்டி என்னத்துக்கு?

(விறகுக் கட்டை.)

விளைந்த கதிர் வணங்கும்.

விளைந்த காட்டுக்குப் பறந்த குருவியாக இருக்கிறான்.

(குடியாக.)

விளைந்ததும் விளையாததும் வைக்கோலைப் பார்த்தால் தெரியும். 20435


விளைந்த நெல் கால்மாட்டில் விழுந்தாற் போல.

விளைச்சே சோறாய் விளைந்தால் விறகு விராட்டி எதற்கு?

விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.

விளையாட்டுச் சண்டை வினைச் சண்டை ஆகும்.

(வினையில் முடியும்.)

விளையாட்டுப் பண்டம் வீடு வந்து சேராது. 20440


விளையாட்டுப் பிள்ளைக்கு மண்மேல் ஆசை.

விளையாட்டுப் பிள்ளைக்கு விதரணை தெரியாது.

விளையாட்டுப் பிள்ளைகள் விட்ட வெள்ளாமையைப் போல்.

விளையாட்டுப் பிள்ளை விஷத்துக்கு அஞ்சாது.

விளையாட்டுப் பூசல் வினைப் பூசல். 20445


விளையாட்டே வினை ஆகும்.

விளையும் பயிர் முளையிலே தெரியும்.

விளைவது அரிசி ஆனாலும் மேல் உமி போனால் விளையாது.

விளைவது ஆகிலும் அளவு அறிந்து அழி.

விற்ற குண்டைக்குப் புல் போடுவானேன்? 20450

(குண்டை- எருது.)


விற்ற பசுவுக்குப் பச்சைப் புல் போடுவார் உண்டோ?

விற்ற மாட்டுக்கு விலை இல்லை.

விறகுகட்டுக்காரனுக்குத் தலைவலி வந்தால் விறகிலே ஓரடி அடித்தால் போய்விடும்.

விறகுகட்டுக்காரனுக்கு நாரை வலமானால் ஒரு பணம் விற்கிறது

ஒன்றே கால் பணம் விற்கும்.

விறகு கட்டுக்காரனுக்குப் பிளவை புறப்பட்டால் விறகுக் கட்டையால் ஓர் அடி. 20455

(நோய் வந்தால்.)


விறகு கோணலானால் நெருப்புப் பற்ற தா?

விறகுதலையனுக்குக் கால் பிளவை வந்தால் விறகு கட்டையால் ஓங்கி ஓர் அடி அடிப்பான். 

விறகுதலையனுக்கு நோய் வந்தால் விறகுக் கட்டோட போய் விடும்.

வினைக் காலம் வரும் காலம் மனைவழியும் தெரியாது.

வினை கெட்ட அம்பட்டன் பூனையைச் சிரைத்தானாம். 20460


வினை கெட்ட பூதி திளை குத்தப் போனாளாம்.

(யாழ்ப்பாண வழக்கு.)

வினைதீர்த்தான் கோயில் விளக்கு அழகு.

வினைதீர்த்தான் கோயிலுக்குப் போயும் வினை தீரவில்லையா?

வினைப் பயனை விலக்க முடியுமா?

வினைப் பயனை வென்றாலும் விதிப்பயனை வெல்லல் ஆகாது. 20465


வினையை விலை கொடுத்து வாங்கினானாம்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான்.

வினை வெந்து போகிறது.

விஷ்ணு பெரியவர் என்பது ஶ்ரீரங்கத்தில் பார்க்க வேண்டும்.

விஷ்ணுவே சமஸ்தம் என்பார் சிலர்; சிவனே பெரியவன் என்பார் சிலர். 20470 }


விஷ்ணுவைப் பெரியவன் என்பார் சீரங்கத்தில்; சிவனைப் பெரியவன் என்பார் அருணாசலத்தில்.

விஷ கடி வேளை.

விஷத்தின்மேல் விஷம், விஷம் போக்கும்.

(விஷத்துக்கு விஷம். )

விஷத்துக்கு மாற்று விஷம்.

விஷத்தைக் குடிக்கப் பால் ஆகுமா? 20475


விஷத்தைக் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வேண்டும்.

விஷப் பரீட்சை பண்ணலாமா?

விஷம் என்றால் தலைக்கு ஏறுமா? தீ என்றால் வாய் சுடுமா?

விஷம் குடித்தாலும் சர்க்கசரி விசுவசிகன்.

விஷம் தின்றால் கொல்லும். 20480


விஷம், தீர வைத்தியன் வேண்டும்; பாவம் தீரத் தெய்வம் வேண்டும்.

விஷம் போல் ஏறுகிறது.

விஸ்தாரம் இருந்தால்தானே நீட்டிப் படுக்கலாம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_4/ல&oldid=1161635" இலிருந்து மீள்விக்கப்பட்டது