பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

343


வைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையைச் சார்ந்த ரகசியங்களை அவர்களிடத்தில் சொல்லிவிடக்கூடாது. அவர்களுக்குக் கிடைத்த செய்தியை அவர்கள் தாமே தெருத்தெருவாகச் சென்று, பறைசாற்றிப் பல கேடுகளை விளைவிப்பர். கயமைத்தன முடையவர்களின் காதும், வாயும் சமூகக் கலகங்களின் நுழைவாயில்களாகும். ஆதலால் அவரிடத்தில் அதைச் சொல்வதற்குப் பயப்படவேண்டும். அதுபோலவே அவருடைய வாய்ச் சொல்லை மதித்து ஏற்காமல் தள்ளிவிடவேண்டும். இதனை,

அறையறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்

என்றார் திருவள்ளுவர்.

கயமைத்தனம் நாட்டின் நல்லூழ் இன்மையில் காரணத்தினால் எந்த இடத்திலிருக்கும் அல்லது இருக்க முடியாது என்று சொல்லமுடியாவண்ணம் நிலவும். கயவர்களுக்குப் பெரும்பாலும் தமது வரவிலேயே நாட்டம். மற்றவர்களைப்பற்றிக் கவலைப்பட மாட்டார்கள் பெற்றுக்கொண்டதற்குத் திரும்பப் பணமாகவோ அல்லது உழைப்பாகவோ அன்றி நன்றி கடப்பாடாகவோ, ஈடாகத் திருப்பித் தரமாட்டார்கள். தரரேண்டுமென்ற எண்ணங்கூடவராது. மாறாக "இன்னும் கொடுக்கவில்லையே, என்ன பிரமாதமாகச் செய்து விட்டார்கள்?’ என்று அங்கலாய்ப்பர்.

கயமைத்தனம் உடையவர்கள் பெரும்பொருளையுடையவரா யிருப்பின் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கமாட்டார். கயமைத்தனமுடையவர்களுக்கு, மற்றவர்களுக்குப் பசியும் கவலையும் உண்டு என்பதே தெரியாது. அவர்கள் இயல்பாகக் கொடுக்கமாட்டார்கள். யாரொருவர் கையை வளைத்து மடக்கி மேல் வாய்க் குறட்டில் ஓங்கிக் குத்தி