பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யளிக்கின்றன இவ்விடங்களில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் யாவும் டிமிரிகாவில் செய்யப்பட்டனவே யாகும். மற்றும் எப்பொழுதேனும் எகிப்திலிருந்து[1] கொண்டு வரப்படும் சரக்குகளில் பெரும்பாகம் இங்கு வந்து குவிக்கப்படுகின்றன. இவை டிமிரிகாவிலிருந்து வாங்கப்படும் பொருள்கள் யாவற்றினோடும், மற்றும் பராலியா[2] வழியாக எடுத்துச் செல்லப்படும் பொருள்களோடும் ஒன்று சேர்க்கப் பட்டுக் கொண்டு வரப்பட்டனவாகும்.

[பெரிபுரூஸ் கி.பி. 50-80) வி.எஸ்.வி. இராகவன் பக். 2641]

மேலும் பூம்புகாரில் காலினும் கலத்தினும் வந்திறங்கிய பண்டங்கள் குறித்து:

"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிலும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெளிய ஈண்டி"

என்று, பட்டினப்பாலை விரிவாகக் கூறுவதை அறிக.

இந்திய நாட்டில் நடைபெற்றுள்ள அகழ்வாராய்ச்சி களும் இந்த உண்மையை எடுத்துரைக்கின்றன.

சோழப் பேரரசின் துறைமுகம் பூம்புகார். இதனைக் காவிரிப்பூம்பட்டினம் என்றும் அழைப்பர். சிலப்பதிகாரத்தின் தொடக்கம் பூம்புகாரேயாம். “பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்" என்று இளங்கோவடிகளால் போற்றப் பெற்றது பூம்புகார். இது, காவிரியாறு கடலில் கலக்கும்


  1. 10. எகிப்து
  2. 11. பரலீசர். பரமீசர் என்பதன் திரிபு. இன்றைய திருவனந்தபுரம்.