பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

59



8. பஞ்சாயத்து ராஜ்

ன்று நாடு முழுவதும் “பஞ்சாயத்து ராஜ்” பற்றிப் பேசப்படுகிறது. ஆனால் விவாதம் செய்திகளுடன் பொருத்தியதாக - விவரமாக இல்லை என்பது வருந்தத்தக்கது. நாட்டின் நாடி நரம்புகள் பஞ்சாயத்துகளே: பஞ்சாயத்துகள் வலிமை பெற்றாலே கிராமங்கள் வளரும்; நாடு வளரும். அண்ணல் காந்தியடிகள் கண்ட கிராம சுயராஜ்யம் தோன்றும். இதில் இரண்டுவிதக் கருத்திருக்க நியாயமில்லை.

இன்றைய பஞ்சாயத்துகள் நிலை

இன்றைய பஞ்சாயத்துகள் எந்தவிதமான பொறுப்புள்ள நிர்வாகமும், இல்லாதவை. துப்புரவுப்பணி மின்விளக்கு எரித்தல் ஆகியவை மட்டுமே இன்றைய பஞ்சாயத்துகள் செய்கின்றன. இவற்றையும் கூடப் பல பஞ்சாயத்துகள் செய்ய நிதி வசதி இல்லை. நிதி நிர்வாகமும் பஞ்சாயத்தினிடம் இல்லை. உண்மையைச் சொன்னால் பஞ்சாயத்துத் தலைவர் பஞ்சாயத்து ஒன்றிய ஆணையருக்கு எழுத்தர் மாதிரிதான். இந்த நிலைமைகள் மாற்றப்பட வேண்டும் என்பதில் நாட்டு வளர்ச்சியில் அக்கறையுடைய அனைவருக்கும் உடன்பட்ட கருத்திருக்கும் என்று நம்புகின்றோம்.

மதிப்பு மிக்க தகுதி நிலை

முதலில் பஞ்சாயத்துக்கு மதிப்புமிக்க தகுதிநிலை வழங்க வேண்டும். ஒவ்வொரு பஞ்சாயத்தையும் நிதிநிலையில் தற்சார்பானதாக்கவேண்டும். பஞ்சாயத்தின் நிதி நிலையை வலிமைப்படுத்த முதலில் திட்டங்கள். வேண்டும். கிராமப் பஞ்சாயத்து எல்லையில் உள்ள நிர்வாகங்களும் பஞ்சாயத்தில் நேரிடையானவையாகவும் ஒரு சில இனங்கள்