பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பஞ்சாயத்தின் கவனத்திற்குரியனவாகவும் அமைய வேண்டும்.

1. கிராம எல்லையில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் பஞ்சாயத்தின் நிர்வாகத்தின் கீழ் வரவேண்டும்.

2. அனைத்துச் சாலைகளும் பஞ்சாயத்தின் நிர்வாகத் தின்கீழ் வரவேண்டும். (நெடுஞ்சாலைகளும் - தேசிய நெடுஞ் சாலைகளும் தவிர) அனைத்து உரிமங்களும் வழங்கும் உரிமை பஞ்சாயத்திற்கே இருக்க வேண்டும்.

(அ) மீன் பாசிக் குத்தகைகள்.

(ஆ) நெடுஞ்சாலை மரக்குத்தகைகள் இன்ன பிறவற்றுக்கும் உரிமம் வழங்கும் உரிமை வேண்டும்.

நெடுஞ்சாலைத் துறைக்கும் பொதுப்பணித் துறைக்கும் கிராமம், ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும். மீன்பாசிக் குத்தகை, நெடுஞ்சாலை மரங்கள் ஏலம் முதலியவற்றைப் பிரதிநிதிகள் முன் ஏலம் விடவேண்டும் என்ற நியதி வகுக்கலாம்.

4. மேலும் அடியிற் கண்டுள்ள வருவாய் வரக்கூடிய அமைப்புகளை அமைக்கவும் நிர்வகிக்கவும், அதன்மூலம் பஞ்சாயத்தின் நிதி ஆதாரங்களை வளர்த்துக் கொள்ளவும் ஊராட்சி மன்றங்களுக்கு உரிமையும் அதிகாரமும் இருக்க வேண்டும்.

(அ) சந்தை, (ஆ) பேருந்து நிலையம், (இ) ஆடடி கூடம், (ஈ) இடுகாடு, (உ) திருமணமண்டபம், (ஊ) கால்நடை அடைப்புக் கூடம் (பவுண்டு).

5. ஒவ்வொரு ஊராட்சி மன்றத்திற்கும் செயலராக, கிராம நல அலுவலர் (RWO) அயல் வழிப் பணியில் அரசு தர வேண்டும்.

6. செயலரின் நியமனம், மாறுதல், ஊராட்சி மன்றத்தின் இசைவுடனே செய்யப்படவேண்டும். அரசு