பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்/அணி பொருள்
Appearance
மண்ணில் விளைவது தங்கம்!
மங்கை வளையல் தங்கம்!
கடலில் விளைவது முத்து!
கண்ணகி மாலை முத்து!
நிலத்தில் கிடைப்பது வெள்ளி!
நிலாவின் காப்பும் வெள்ளி!
கடலில் இருப்பது பவளம்!
கலைவிழி கழுத்தில் பவளம்!
கரியில் முதிர்வது வைரம்!
கனிமொழி கம்மல் வைரம்!