10
"ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்” என்னும் சிலப்பதிகார நெறி ஏற்புடையதே. ஊழ்வினை என்பது செய்த வினைகளின் பயன்தானே! நெல்லை விதைத்தால் நெல்லைத்தான் அறுக்க முடியும். எதை விதைக்கின்றோமோ அதைத்தான் அறுவடை செய்கின்றோம். “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்கிறது புறநானூறு. அதேபொழுது ஊழ்வினையை மாற்ற முடியாது என்ற கருத்தினை மறுத்து மகாசந்நிதானம் தெளிவுபடுத்துகின்றார்கள். 'ஊழ் மாற்ற முடியாதது என்கின்றனர். கீழே விழுந்தவன் எழுந்திருக்க முடியாதா? எழுந்திருக்கக் கூடாதா? இது என்ன அநியாயம்? கீழே விழுந்தவன் எழுந்திருக்க முடியும்; எழுந்திருக்க வேண்டும். இதுதான் வாழ்க்கையின் குறிக்கோள்” என்று திட்டவட்டமாக அறிவிக்கின்றார்கள்.
இடுகாட்டில் எரியும் பிணங்கள்!
நடுவீட்டில் நடை பிணங்கள்!
அன்பில்லாத வாழ்க்கை வீட்டுக்குள் மயான அமைதியை வரவழைக்கும் அல்லது போர்க்களத்தை உருவாக்கும்! இன்று பகுத்தறிவுச் செயற்பாடே இல்லை! தொகுப்பறிவுதான் இருக்கிறது. வேண்டும் என்று பழகும் காலத்தில் தமக்குச் சாதகமான நன்மைகளையே தொகுத்துப் பார்க்கிறார்கள். வெறுப்பு வந்தவுடன் நன்மைகளை எல்லாம் மறந்து விட்டு தீமைகளையே - தவறுகளையே தொகுத்துப் பழி சுமத்துகிறார்கள். இன்று சமயங்கள் நிறுவனங்களாக மாறிய பிறகு, சமய நெறியிலிருந்து நெடுந்தொலைவு விலகிச் சென்ற பிறகு தம் தகுதியை இழந்துவிட்டன. அதனால் சமய அடிப்படையில் போர்கள் கூட நடந்தன. நடந்து கொண்டிருக்கின்றன” என்ற கருத்து இன்றும் நடைமுறை உண்மையாகச் சமூகத்தின் போக்கில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
பொங்கல் சிந்தனையில் பொங்கல் நாளன்று “பழைய வீடு புதுப்பொலிவுடன் விளங்குகின்றது. பழைய குப்பைகள் அகற்றப் பட்டுப் பழுது பார்த்துப் புதுவண்ணம் பூசிப் புதுப்பொலிவுடன் விளங்குகின்றது. அதைப் போல இதயத்தில் இடம் பெற்ற மாசுகள் அகற்றப்பட்டு நன்மைகள் எனும் புதுமைகள் சேர வேண்டும்.
'முன்னைப் பழமைக்கும் பழமையாய்
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியதாய்’
என்று சொன்னால் போதுமா? எப்பொழுது அதை நிறைவேற்றுவது?” என்ற சிந்தனையில் ஒன்றும் செயல்படுத்த முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றது
“சமூக நோக்கில் அறிவியல்” என்ற கட்டுரையில் 'நிலமகள் திருமேனியில் பசுமை ஆடை போர்த்தவேண்டும்; நிலமகள் முகத்தில் அழுக்குகளை, கழிவுப் பொருள்களை இட்டு அவளை அவலப்படுத்தாதீர்கள் எல்லாக் கழிவுகளையும் சோம்பல் பாராமல்