உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1


நடந்ததும் நடக்க
வேண்டியதும்

      "என்னால் அறியாப் பதம்தந்தாய்
          யான தறியா தேகெட்டேன்
      உன்னால் ஒன்றும் குறைவில்லை
          உடையாய் அடிமைக் காரென்பேன்
      பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும்
          பழைய அடியா ரொடுங்கூடா(து)
      என்னா யகமே பிற்பட்டிங்(கு)
          இருந்தேன் நோய்க்கு விருந்தாயே!”
                                  - ஆனந்த மாலை-2

என்ற மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல் எண்ணி இன்புறத்தக்கது. இப்பாடற்கருத்து நம்முடைய வாழ்க்கைக்கு நூற்றுக்குநூறு பொருந்தும்! ஆம், யாதொரு குறையுமில்லாமல் முதற்சுற்று முடிந்திருக்கிறது. யாதொரு குறையும் இல்லை யென்றால் "முழு நிறை" என்று பொருள் கொள்ளக்கூடாது. "குறை”யைக் குறையென்று கருதி அலட்டிக் கொள்ளாமல் வாழ்க்கைப்பயணம் நடந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் நம்முடைய சமுதாய உணர்வுகள் அடிக்கடி பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறது. உலகியலைப் பொறுத்தவரையில் யாதொரு குறையும் இல்லை. ஆனால் நாட்டின் நிகழ்வுகளில்