மண்ணும் மனிதர்களும்
177
ஜமீன் துரை அரசன் தலைமையில் ஊர்வலம். ஆயினும், எந்தவிதமான சலசலப்பும் இல்லை; மோதலும் இல்லை. திருவாசக விழா ஊர்வலம் முடிந்தவுடன் திருக்கோயில் முன்பு அருள்நெறித் திருக்கூட்டக் கொடி ஏற்றப் பெற்றது! பின் வழிபாடு நடந்தது.
திருவாசக விழா மாநாடு தொடங்கியது. மேடையில் ஈரோடு எஸ். மீனாட்சி சுந்தர முதலியார் பேசுகையில் ஒன்றிரண்டு சூடான சொற்கள் வந்துவிட்டன. உடன் மாநாட்டில் இருந்த திராவிடர் கழகத்தினர் கூச்சல்போட ஆரம்பித்து விட்டனர். தேவர் திருமகனாருக்கு ஆற்றொனா நிலை! தம்பி சிறுமருதூர் முத்துக்குமாரசாமி சேர்வைக்கு அளவற்ற கோபம் ! கழகத்தினரின் சலசலப்பை அறைகூவலாக ஏற்றுக்கொள்வதாகப் பேச்சு: இந்த நிலையில் நாம் ஒலிபெருக்கியின் முன் வந்து வழக்கம்போல் சமாதானம் கூறி வேண்டுதல் செய்தோம். கூட்டம் அமைதியாகியது. அடுத்து பசும்பொன் தேவர் திருமகனாரின் அற்புதமான பேச்சு. இந்த பணியில் உற்ற துணையாக இருந்த மணி இன்று அமரர். இன்று துரை அரசன் சிறந்த பக்தர். அறங்காவலர். நமக்கு மிகவும் வேண்டிய உழுவலன்பர்.
தம்பி முத்துக்குமாரசாமி. சேர்வை இன்றும் நமக்கு நல்ல உழுவலன்பராகத் திருப்பெருந்துறை ஈசனுக்கு நல்ல தொண்டராக விளங்கிப் பணி செய்கிறார். அண்மையில் திருப் பெருந்துறைத் திருக்கோயில் திருப்பணித் 'திருப்பணிநாயகம்’ என்று பாராட்டப்பெறும் தவத்திரு சுந்தரசுவாமிகளின் அரிய முயற்சியால் நடைபெற்றது. இந்தத் திருப்பணியிலும் தம்பி முத்துக்குமாரசாமி சேர்வையின் ஒத்துழைப்புப் பாராட்டுதலுக்குரியது. இங்ங்ணம் பெரியாருக்கும் நமக்கும் இடையே விவாதங்கள் முற்றி வளர்வதை தமிழகத்தில் அறிஞர்கள் சிலர் விரும்பவில்லை. பெரியாரும் நாமும் நட்பாக இருக்கவேண்டும் என்று எண்ணினர். முயற்சி நடந்தது-முயற்சியின் முடிவு என்ன?