76
அ-2-17 தீவினையச்சம் -21
சில விளக்கக் குறிப்புகள் :
1) ’’’தீவினை என்னும் செருக்கு’’’ : (மன) ஆணவத்தாலும், (உடல் திமிராலும் பிறர்க்குத் தீமை செய்வதற்கு.
தீவினை செய்ய எண்ணுவதற்குக் காரணமாக விருப்பது செருக்கு.
- அது மனச்செருக்கும் உடல் செருக்கும்.
- மனச் செருக்கு ஆணவம்.
- உடல் செருக்கு திமிர்.
- செருக்குக்கு என்பது உருபு தொக்கிச் செருக்கு என நின்றது.
- மனச் செருக்கே பிறர்க்குத் தீமை செய்யத் துரண்டுவது.
உடல் செருக்கு அதற்குத் துணை நிற்பது.
2) தீவினையார் அஞ்சார் : தீவினை செய்வதிலேயே ஈடுபட்டுப் பழகியவர் அஞ்சமாட்டார்.
- தீவினையார் என்பதற்கு, மனக்குடவர் 'தீத்தொழில்' செய்வார் என்பார்.
- பரிதியாரும், காலிங்கரும், பரிமேலழகரும் 'முற்பிறப்பில் தீவினையுடையார் என்று மதவியல் சார்ந்து பொருள் தந்தது. மூடநம்பிக்கையாம்.
- இப்பிறப்பில் தீவினையுடையானுக்கு முற்பிறப்புத் தீவினை காரணமானால், அதற்குக் காரணம் யாது? அதற்கும் முன்பிறவியோ? - எனில் அதன் தொடக்கந்தான் எது? - எனற்கு ஏற்ற விடையிரா தென்க.
- வேதமதக் கொள்கையினை வலியுறுத்தவே 'வினை' என்னும் செயற்பொருள் சொல் வருமிடங்களிலெல்லாம், 'முன்வினையே' என்று பரிமேலழகர் போலும் ஆரியமதவியலார் வலியப் பொருள் கூறினர், என்க.
- எனவே, வினைப்பழக்கமே தீவினைக்குக் காரணம் என்க.
3) விழுமியார் அஞ்சுவார் : மேன்மையுள்ளம் கொண்டவரோ (பிறர்க்குத் தீமை செய்ய) அஞ்சுவர்.
- விழுமியோர் - சிறந்த, பண்பட்ட, மேன்மையான, சீரிய, நல்ல உள்ளத்தவர்.
- தீவினைக்கு அஞ்சுதல் அதன் விளைவு கருதி ஏற்படும் முற்காப்புணர்வாம், என்க.