பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

85


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 85

அ-2 இல்லறவியல் அ-29 அடக்கம் உடைமை 13

அதிகார முன்னுரை

அடங்குதல் அடக்கம் ஆயிற்று. அஃது எழுச்சியுணர்வு அடங்கிய இயங்குதலாம். -

மாந்தர்க்கு மன - -

வெழுச்சி, அறிவெழுச்சி, உடல் எழுச்சி எனும் மூவகை எழுச்சிகள் உண்டு அவை செருக்கால் வருவன. செருக்கு மிகுதி இதனை வடமொழியில் ‘கர்வம்’ என்பர். அகங்காரம் என்பதும் அது. அகம் காரம் மனத்தினது மிகுந்த உணர்வு இது தூய தமிழ்ச் சொல்.

அடக்கம் அமைவு, ஒடுக்கம், தணிவு, பணிவு, பதவிசு ஆகியவை அடக்கத்தைக் குறிக்கும் தமிழியற் சொற்கள். சிற்சிறு வேறுபாடுகளும் உண்டு

அடக்கத்தை வடமொழியில் ‘பல்வியம்’ என்பர். . . .

மனவடக்கம் - பெரும்பாலும் புலனடக்கத்தைக் குறிக்கும். மன வெழுச்சியே அகங்காரம் அல்லது மனச்செருக்கு எனப்பெறும்.

மனச்செருக்கு தான் என்னும் அகங்காரத்தால் வருவது. பிறரைத் தாழ்த்தித் தன்னை உயர்த்திக் கொள்வது.  ; : “ ...

இதனை யான் எனது என்னும் செருக்கு 34 என்பார் நூலாசிரியர்