பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

 

தமிழ் இலக்கியச் செல்வம் ஏராளம். அவை இலக்கியம் - இலக்கணம் - வரலாறு என வகைப்படுத்தினால் கட்டுக் கடங்காமல் கரைபுரண்டோடும் ஆற்று வெள்ளமாகும்.

மக்கள் சுவைக்கவேண்டிய அச்செல்வங்கள் பெரும்பாலான வற்றைக் கடற்கோள்களும் கால வெள்ளமும் நீரும் நெருப்பும் கறையானும் எலியும் என்று இவை அனைத்தும் சுவைத்தவை மிகுதி.

அழிந்த நூல்களே ஆயிரக்கணக்கில் உண்டு என்றால் தமிழ்ச் செல்வத்தை அளவிட்டு உரைக்க முடியுமா? “தகடூர் யாத்திரை”யும் அழிந்துபோன நூல்களுள் ஒன்றெனக் கொண்டிருக்கின்ற நிலையினை ஓரளவு மாற்றி அது முற்று முழுதாக அழிந்துவிடவில்லை என்பதனை நிலைநாட்டும் வகையில் இன்று "தகடூர்யாத்திரை"பலரால் ஓரளவுக்குத் தேடித் தரப்பெற்றுள்ளது.

“தகடூர் யாத்திரை” சங்க நூலேயாகும். அகவிதழைப் பாதுகாக்கும் புறவிதழைப் போன்ற மதிலையுடைய ஊர் என்னும் பொருளில் தகடூர் என்னும் பெயர் அமைந்துள்ளது என்பர் அறிஞர். முன்பு அதியமான் கோட்டை என்று இருந்து பிறகு அதமன் கோட்டையாகியுள்ள ஊர்க்கு அருகில் இருந்த இந்தத் தகடூர் இப்பொழுது தருமபுரி என வழங்கப்பெறுகின்றது.

“போரின் நேர்முகக் காட்சியாக நமக்குக் கிடைத்துள்ள தமிழ்ப்பாடல் தகடூர் யாத்திரை ஒன்றே எனலாம்”என்று பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார் கூறியுள்ளார்.

“தகடூர் யாத்திரைச்சரித்திரம் பாரதம்போன்று தாயத்தாரிடை நிகழ்ந்த போரின் வரலாற்றினை விளங்கக் கூறுவதாம். உற்றுநோக்குவார்க்குப்பாரத சரித்திரத்திற்கும் இந்நூல் சரித்திரக்