பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

தகடூர் யாத்திரை


90 - தகடூர்யாத்திரை தலைவன், தன் படைஞருக்குப் பிறப்பிக்கின்ற ஆணை இச்செய்யுள் ஆகும். * * - "கட்டி போன்ற காரிக் குதிரையின் மேலோனாக வருகின்றனன். அவன் காலிற் செறிந்துள்ளது பல போர்களை வென்றதன் அடையாளமாகிய வீரக்கழலே யாகும். அவன் கையிடத்து விளங்குவதோ வேற்படை அவன் சுட்டிக் சென்று அளிக்க நினைப்பதும் களிறுகளையே ஆகும். அதனால், நம் படை முழுவதையும் செலுத்தியாயினும் நம் யானைகளைக் காப்பீர்களாக அவன் யானைகளையன்றிப் பிறவற்றை வீழ்த்தக் கருதுபவன் அல்லன்” என்கிறான். கட்டி யன்ன காரி மேலோன் தொட்டது கழலே கையது வேலே; சுட்டி யதுவும் களிறே; யொட்டிய தானை முழுதுடன் விடுத்துநம் யானை காமினவன் பிறிதெறி யலனே. (புறத் 132) ‘கட்டியன்ன காரி என்றது. குதிரையின் கருமை நிறத்தை, 'கட்டி - பனை வெல்லம். 'யானை காமின்அவன் பிறிது எறியலன்’ எனக் கூறும் சொற்கள். தமிழ் மறவரது தறுகண்மையின் மேம்பாட்டை நன்கு விளக்குவதாகும். சேரர் படைத் தலைவருள் ஒருவனின் கூற்றாகக் கொள்வது போன்றே, சேரர்க்கு ஒற்றுரைப்பார் வந்து கூறிய எச்சரிக்கை யாகவும் இதனைக் கொள்ளலாம். - . 33. அஞ்சுதக்கனள்! தகடூர் மறவருள் ஒருவன் களத்தில் காட்டிய பேராண்மை மிகவும் சிறப்புடைத்தாக இருந்தது. அவனுடைய அந்தச் செவ்வியை வியந்து பாராட்டுதலை நினைக்கின்ற சான்றோர், அவனை ஈன்ற தாயையும், வியந்து போற்றுகின்றனர். "அஞ்சுவதற்கு உரியவள் இந்த மூதாட்டி அறுவடைக் களத்துக் காவற்குரியவர் இட்டிருக்கின்ற அரிதாளின் பந்தரைப் போன்று விளங்கும், எண்ணெய்ப் பசையற்ற கூந்தலையுடைய மூதாட்டியான இவள், அஞ்சத் தகுந்தவள்! “வெம்மை மிகுந்த போர் வருங்காலத்து என் செய்வேம் என்று வருந்தியிருக்கும் வேந்தருக்கு, 'அஞ்சேல் என வுரைத்து, அந்தப் போரினை மேற்கொள்ளும் களிறு போன்ற மகனை இவள் பெற்றுத் தந்திருக்கின்றனள். அதனால், இவளும் அஞ்சத் தகுந்தவள்!