சமூகம் / 607
வோர் கோடியில் ஒருவரேயன்றி சகலருந் தெரிந்துக்கொள்ளக்கூடாத பேரறிவின்படித் தறத்தினின்றது.
அதுகண்டு சமணமுநிவர்களிற் சிலர் தங்கடங்கள் வசதிக்கும், தங்கடங்களறிவின் விருத்திக்கும், தங்கடங்கள் சாதனத்திற்கும், தங்கடங்கள் காலத்திற்குத் தக்கவாறு புத்தபிரான் தன்மபோதத்திற்கு மாறுபாடின்றி காலத்திற்குத் தக்க ஏதுக்களை மாறுபாடுசெய்து அவரவர்கள் மாறுபடுத்தியக் காலத்தையே சமயமெனக் குறிப்பிட்டு பிரகஸ்பதி கால் மாறுதலை பௌத்த சமயமென்றும், சினன் காலமாறுதலை உலோகயித சமயமென்றும், கபிலன் காலமாறுதலை சாங்கயசமயமென்றும் அங்கயாதன் காலமாறுதலை நொய்யாயிக சமயமென்றும், கணாதன் காலமாறுதலை வைசேஷிக சமயமென்றும், சைமினியின் காலமாறுதலை மீமகாம்ஸசமயமென்றும் மாறுபடுத்தி தங்கள் தங்கள் ஏதுக்களுக்குத் தக்கவாறு நிகட்சியில் விடுத்து ஆறுபெயரால் மாறுபடுத்திய அறுவகைக் காலக்குறிப்புகளை அறுசமயங்களென வழங்கிவந்தார்கள்.
புத்தபிரான் பரிநிருவாணமடைந்த நெடுங்காலத்திற்குப்பின்னர் சீவ காருண்யமும் அன்பும் மிகுத்து போதிக்குந் திடமுள்ள சமணமுநிவர்களிற்சிலர் தாங்கள் பெறுஞ் சுகத்தை ஏனைய மக்களும் பெற்று சுகமடையவேண்டும் என்னும் கருணையால் வெளிதோன்றி வருவதுண்டு, அவ்வகைத் தோன்றியவர்களின் காலக்குறிப்பையும் அவரவர்கள் முக்கியமாக வைப்புறுத்திக் கூறிய வாக்கையும் அதுசரித்து அந்நன்னோர் காலக்குறிப்பை அந்நோர் சமயமென வகுத்துவந்தார்கள்.
இவற்றுள் பௌத்தசமயம் யாதெனில் பிரகஸ்பதி முநிவர் வெளிதோன்றி சகலருக்கும் சத்தியதன்மத்தை விளக்கிவருங்கால் நாம் புத்தரது சமயதன்மத்தை அநுசரிப்பவர்கள் ஆயினும் நமக்குள்ளப் பொய், வஞ்சினம், சூது, பொறாமெய், நம்மெய்விட்டகலாதிருக்கின்ற படியால் நம்மெ நாம் புத்தசமயத்தோரென்றும், புத்தர்களென்றும் கூறுதற்கு இயலாதவர்களாய் இருக்கின்றோம். ஆதலின் நம்மெய் நாம், பௌத்தசமயத்தோரென்றும், பௌத்தர்களென்றுங் கூறி சத்தியதன்மத்தில் நடந்து துக்கத்தைப் போக்கிக்கொள்ளும் வழிகளை போதித்தகாலத்தையும், அவரது பிரதான மொழியையுங்கொண்டு பிரகஸ்பதி முநிவர் காலமாறாது பௌத்தசமயமெனக் கொண்டாடி வந்தார்கள்.
சின முநிவரது காலக் குறிப்பைக்காட்டும் உலோகயித சமயமாவது யாதெனில், சினமுநிவர் வெளிதோன்றி தனது அன்பின் மிகுதியால் சகல மக்களுக்கும் சத்தியதன்மத்தை விளக்கிவருங் காலத்தில் சக்கிரவர்த்தித் திருமகனாய் இருந்தும் உலோக யிதமாம் பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை முதலிய இன்பங்களாம் இதங்களைத் தவிர்த்து அவலோகித ரென்னும் பெயர்பெற்ற அறவாழியானது தன்மத்தைப் போதிப்பவர்களாகிய நாம் மண்ணாசைப், பெண்ணாசை, பொன்னாசை, மூன்றிலொன்றையேனும் விடாச்சிந்தையை உடையவர்களாயிருந்தும் நம்மெய் நாம் அவலோக இத சமயத்தோரென்றும், அவலோகித கூட்டத்தோரென்றும் சொல்லப்போமோ, ஒருக்காலும் சொல்லலாகாது. ஆதலின்மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை இம்மூன்றும் நம்மெய்விட்டகலும் வரையில் உலோகயித சமயத்தோர்களென வழங்கி சத்தியதன்மத்தினின்று ஆசாபாசக் கயிறுகளை அறுத்து அவலோகிதராக வேண்டும். அதுவரையிலும் நாம் உலோகயித சமயத்தோரென்றே வழங்கவேண்டுமெனக் கூறி மூவாசைகளை அறுக்கத்தக்க வழிகளைப் போதித்தக் காலக்குறிப்பை மாறாது சின முநிவர் உலோகாயித சமயமெனக் கொண்டாடி வந்தார்கள்.
கபிலமுநிவரது காலக்குறிப்பைக் காட்டும் சாங்கிய சமயமாவது யாதெனில்; கபில முநிவர் வெளிதோன்றி பகவனது சத்தியதன்மங்களை விளக்கி வருங்கால் புத்தசங்கத்தோர் சாங்கியங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டு நிலை பிறழ்ந்திருப்பதையுணர்ந்து சங்கத்தோர் சாங்கியங்களாகும் படுக்கைநிலையும், எழுந்திருக்குங்காலமும், மணற்கொண்டு தேகத்தைக் கழுவுஞ் செயலும், புசிப்பின் காலமும், பதார்த்த வகையும், ஆசன பீடமும், வாசிப்பின் நேரமும்,