642 / அயோத்திதாசர் சிந்தனைகள்
எட்டியவரைப் போய் பார்க்கக்கூடாத பூமியை வூடா அக்கு வடக்கென்று நான்கு திக்குகளை வகுத்ததுமன்றி, நீராகிய ஜலத்திற்கு நெகிழ்வு, குளிர்ச்சி, வெண்ணிறமாகிய முக்குணங்களும், நெருப்பாகிய அக்கினிக்கு சுடுகை, சிவப்பு, புடைப்பாகிய முக்குணங்களும், வாயுவாகிய காற்றுக்கு மோதல், ஆதலாகிய இரு குணங்களும், வெளியாகிய ஆகாசத்திற்கு சருவசீவப் பிராணிகளின் சுவாசத்திற்குள்ள வூட்டல், தேட்டலாகிய இரு குணங்களும், என்றும் நிலையாயுள்ள நிலத்திற்கு யாதொரு குணமுமின்றி உருவத்தோற்றங்களுக்கும் ஆதரவாயிருந்து மோனநிலை கொண்டிருக்கின்றபடியால் பிரமம் இரணிய கருப்பமென்றும் நீராகிய ஜலமானது பூமியின்கீழும் ஆகாயத்திலும் மத்தியிலும் கருப்பையைப்போல் சூழ்ந்து வட்டமிட்டிருக் கின்றபடியால் மால்-நாராயணமென்றும், நெருப்பாகிய அக்கினியானது முகத்தணுகிப் பார்க்கக்கூடாத சுவாலையைப் பெற்றிருக்கிறபடியால் ருத்திரம் அனலவமென்றும், வாயுவாகியக் காற்றானது சகல பிராணிகளின் சுவாசாதாரமா யிருக்கின்றபடியால் மயேஸ்வரம், துருத்தி என்றும், வெளியாகிய விசும்பானது சகல பூதங்களையும் நிறப்பி விளிப்பதற்கு இடங்கொண்டிருக்கின்றபடியால் சதாசிவம் பெருவெளியென்றும் அதனதன் குணத்திற்கும் செயலுக்கும் நிறத்திற்குத் தக்கப் பெயர்களைக் கொடுத்திருந்தார்கள்.
பௌத்த மடங்களில் தங்கியிருந்த சமணமுநிவர்களால் பூதங்களுக்கு இத்தகையப் பலப்பெயர்களைக் கொடுத்திருந்ததுமன்றி நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் யாவும் பூமியிற் தோன்றியுள்ள சீவராசிகளிடத்து யாதொரு பலனையுங் கருதாது தாங்களே சகல பலன்களையும் கொடுத்துவருகின்றபடியால் அப்பூதங்கள் யாவற்றையும் தெய்வப்பெயரில் சேர்த்து வரைந்து வைத்துள்ளதுமன்றி வழங்கியும் வருகின்றார்கள்.
இத்தகையக் காரணக் காரியப் பெயர்களின் விவரங்கள் இப்புரு சீகர்களாகும் வேஷப்பிராமணர்களுக்குத் தெரியாதிருப்பினும் மிக்கத் தெரிந்தவர்கள்போல் அபிநயித்து பூதங்களுக்கென்று வைத்துள்ள தேவர்களென்னும் பெயர்களில், நெருப்புக்கு வைத்துள்ள ருத்திரமென்னும் பெயரை ருத்திரனென்னும் ஓர் ஆணுருவாக்கி அவனுக்கு ருத்திரியென்னும் ஓர் பெண் சாதியும், நீருக்கு வைத்துள்ள நாராயணமென்னும் பெயரை ஓர் ஆணுருவாக்கி அவனுக்கு சிவணியென்னும் பெண்சாதியும், மண்ணுக்குக் கொடுத்துள்ள பிரமமென்னும் பெயரை ஓர் ஆணுருவாக்கி அவனுக்கு பிரம்மணியென்னும் பெண்சாதியும் ஏற்படுத்தி கல்வியற்றக் குடிகளுக்கும், காமியமுற்ற சிற்றரசர்களுக்கும் போதித்து இத்தேவர்களை வணங்கிவருவீர்களாயின் தனசம்பத்து, தானிய சம்பத்து, புத்திர சம்பத்து, பெற்று வாழ்வீர்களென மயக்கி சிலா வணக்கங்களைப் பெருக்கிக்கொண்டே வரவும் அவற்றைக் காணும் பெளத்த உபாசகர்களுக்கு மனஞ்சகியாது மிலேச்சராம் ஆரியர்களை அடித்துத் துரத்தவுமுள்ளச் செய்கைகளே இருவகுப்பாரையும் பெரும்விரோதத்துக் குள்ளாக்கிவருகின்றது.
ஆரியராகிய மிலேச்சர்கள் பிராமணவேஷ மணிந்து பௌத்தர்களுக்குள்ள யதார்த்தபிராமணர்களது மகத்துவங்களைக் கெடுக்கவும், அதன் சாதன சிறப்புகளை அழிக்கவும், அவர்களது தன்மசாஸ்திரங்களைக் கொளுத்தி தங்களது அதன்மசாஸ்திரங்களைப் போதிக்கவும், பௌத்தர்களால் வகுத்திருந்த தொழிற்பெயர்கள் யாவையும் கீழ்ச்சாதி மேற்சாதியென்று மாற்றியும், பௌத்தர்களின் ஞானச்செயல்கள் யாவையும் அஞ்ஞானச்செயல்களாக்கியும், ஒற்றுமெயுற்று வாழ்ந்துவருங் குடிகளை சாதிபேதமென்னும் பொய்யாகிய கட்டுப்பாடுகளினால் ஒற்றுமெய்க் கெடச் செய்து புத்தியிலும், யீகையிலும் சன்மார்க்கத்திலும் நிறைந்து சதா உழைப்பிலும், நிதா சுறுசுறுப்பிலும் மிகுத்தக் குடிகளை, கல்லுகளையுங் கட்டைகளையும் தெய்வமெனத் தொழுது கடைச்சோம்பேறிகளாக விடுத்துவருவதைக் கண்ணுற்றுவரும் பௌத்ததன்ம விவேகிகள் புருசீக தேசத்தோர் பொய்வேஷங்களினாலும், பொய்ப் போதகங்களினாலும் இந்திரதேசக் குடிகள் சீரழிவதையும் இன்னும் மேலும் மேலும்