உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 447

களால் தேசமும் தேசக்குடிகளும் சீர்கெடுமேயன்றி இராஜாங்ககாரியாதி களுக்கோர் பின்னம் உண்டாமோ ஒன்றுமாகாவாம்.

இத்தகைய மதிகேடாய துற்செயல்களுக்குப் பிரதிபலன் என்ன நேருமென்றால் கருணை தங்கிய ராஜாங்கத்தோர் குடிகளின் மீது அன்பு பாராட்டி தாங்கள் அடையவேண்டிய கலைக்ட்டர் உத்தியோகங்களையும், தாங்கள் அனுபவிக்கவேண்டிய நியாயாதிபதி உத்தியோகங்களையும் அளித்து சீர்பெறச்செய்து வருகின்றார்கள். அவ்வுத்தியோகங்களின் வாயிலும் மண்ணிட்டுக் கொள்ளுவதற்கேயாம்.

இராஜ துரோகிகளே பிரிட்டிஷ் கவர்னர் ஒருவரைக் கொன்றுவிட்டால் ஆ, ஆ, இவன் மெத்த சுத்தவீரனென்று எண்ணி கவர்னர் உத்தியோகங் கொடுத்துவிடுவார்களோ, துரோகிக்கு உடைந்தையானோர்கள் யாவருக்கும் கௌன்சல் மெம்பர் உத்தியோகங்களை அளித்து விடுவார்களோ, இல்லையே. அகப்பட்டுக் கொண்டபோதல்லவா அதன் பலன் விளங்கும். ஒருவரை ஒளிந்துசுட்டவனும், ஒளிந்திருந்து குண்டெறிந்தவனும் என்றென்றும் ஒளிந்தே திரியவேண்டுமன்றி களங்கமற்று வெளியுலாவுவானோ, படுத்தும் சுக நித்திறைக் கொள்ளுவானே, அல்லது கள்ளனுங் கொலைஞனும் ஓர்கால் அகப்படாமற்போவானோ. அவன் முகமும் செயலுமே அவனைக் காட்டிக் கொடுத்து விடுமே. அக்கால் படுந் துன்பம் அனந்தமாகுமே, அகப்பட்டுக் கொண்டவுடன் உடைந்தையாயிருந்த துரோகிகளெல்லாம் உதவி புரிவார்களோ இல்லை. துரோகச் செயல் புரிந்தவனே சீரழிய நேரும். இதன்றி இராஜாங்கத்திற்கே துரோகியாகத் தோன்றுகிறவன் அவன் தெய்வத்திற்கே துரோகியாகின்றபடியால் இராஜாங்க தெண்டனைக்கு அகப்படாவிடினும் தன்னிற்றானே துக்கத்தை உண்டுசெய்யுந்தெண்டனை நேர்ந்துபோமேயன்றி சுகச்சீருண்டாகமாட்டாது. கள்ளன் பெண்சாதியை என்றுங் கைம்பெண்ணென்று கூறுவதுபோல கொலைஞனுடைய மனைவியங் கூறப்பெறுவாள். இத்தேசம் பெரும்பாலுங் கன்மத்தையே நம்பி நடந்தேறிய தேசமாகும். இத்தேசத்தில் வசிப்போர் துற்கன்மம் புரிவதாயின் தங்களுக்கும் அத் துற்கனமந்தானே நேருமென்பதை அறியாது வீணே இராஜதுரோகி களாவது அழகன்றாம். துவேஷயெண்ணந் தன்னையே துவேஷியொன்றுக் காட்டிக்கொடுத்துத் தன்னையே துன்பத்திற்கு ஆளாக்கிவிடும். இது சத்தியம் சத்தியமேயாம்.

- 6:32: ஜனவரி 15, 1912 -


284. பப்ளிக் சர்விஸ் கமிஷனும் அதன் கேள்விகளும் பத்திராதிபர்கள் முறுமுறுப்பும்

தற்காலம் சென்னையில் நிறைவேறிய பப்ளிக் சர்விஸ் கமிஷன் விசாரிணையில் கலைக்ட்டர் உத்தியோகம் இந்துக்களுக்குப் பெரும்பாலும் கொடுக்கலாமா, இங்கிலாந்தில் பரிட்சையை நடத்துவதுபோலவே இந்தியாவிலும் நடத்தலாமா என்பதே முக்கிய விசாரணையாகும்.

இதனில் இந்தியர்களின் அநுபோகத்தை நெடுங்கால் அறிந்துள்ள ஒருவர் இந்தியர்களுக்குக் கலைக்ட்டர் உத்தியோகங்களை அளிப்பதாயின் தாழ்ந்த சாதியோனுக்கு வேறு கிணறு, உயர்ந்த சாதியோனுக்கு வேறுகிணரென்று பிரித்து வெட்டுகின்றீர்களே அவ்வகைக் கேடுபாடுகளுள்ள உங்களுக்குப் பெருத்த உத்தியோகங்களைக் கொடுத்துவிட்டால் இன்னும் என்னென்ன பிரித்து விடுவீர்களோ என்பதே அவருடையக் கேள்வியாகும். அதற்கு இந்துக்களின் உத்திரவு யாதெனில் அது சானிட்டேரி விஷயமாக செய்கிறதே அன்றி வேறில்லை என்றார்கள்.

அது போதுமான சமாதானம் அல்லவென்பது இராஜாங்கத்தோருக்கே தெரிந்த விஷயமாகும். இந்துக்கள் கூறிய உத்திரவு முற்றும் ஒப்புக்கொள்ளக் கூடியதல்ல வென்று யாம் கண்டிப்பாகக் கூறுவோம். அதாவது இந்துக்களென்போர் தங்களுக்குள்ள பொறாமேயால் தாழ்ந்த சாதியோரென்று