பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்/பதிப்புரை
Appearance
அன்பார்ந்த வாசகர்களே! வணக்கம், எங்கள் பதிப்பகத்தின், குழந்தைகளுக்கான அறிவியல் நூலாக இதனை வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்வு கொள்கிறோம்.
இந்த அறிவியல் நூலை எங்களுக்குத் தந்துதவிய ஆசிரியர் திரு. கே. பி. நீலமணி அவர்களை வாசகர் வட்டம் நன்கு அறியும். குழந்தைகளுக்காகப் பல அருமையான நூல்கள் எழுதி; தங்கம், வெள்ளி போன்ற பல பரிசுகளைப் பெற்றவர்.
குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கும். ஒழுக்க மேம்பாட்டிற்கும் ஏற்ற சிறப்பான நூல்களை தொடர்ந்து வெளியிட வேண்டு மென்பது எங்களது நோக்கம். இந்த நோக்கம் சிறப்பாக நிறைவேற, வாசகர்களாகிய உங்களது வற்றாத அன்பையும் ஆதரவையுமே பெரிதும் நம்பியிருக்கிறோம்.
மிக்க அன்புடன்
-பதிப்பகத்தார்