64
செந்தமிழ் பெட்டகம்
நிலையில் முடிதல். இவையே ஷேக்ஸ்பியர் இயற்றிய இன்பியல் நாடகங்களின் பொதுவான போக்கு.
துன்பியல் நாடகங்களில் விதிவலியே ஆற்றல் மிக்கதாக இருந்து, கதைத் தலைவனை வீழ்ச்சியடையச் செய்தது. இது ஷேக்ஸ்பியருக்கு முன் இருந்த நிலை. விதியின் வலிமையைக் குறைத்து, அவனவன் செயல்களில் உள்ள குறைபாடே வீழ்ச்சிக்குக் காரணமாகின்றது என்ற தத்துவத்தைத் துன்பியலில் உருவாக்கிய பெருமை ஷேக்ஸ்பியருக்கு உரியது. துன்பியலில் செய்த புரட்சி செய்தார். அவருடைய பல இன்பியல் நாடகங்களில் இன்னார் தாம் தலைமையான பாத்திரம் என்று குறிப்பிட்டுக் கூற முடியாதபடி கதைகளில் வரும் நிகழ்ச்சிகளுக்கே சிறப்பும் வலிமையும் தந்துள்ளார். கதைப் பாத்திரங்களை விட அக்கதை நிகழ்ச்சிகளுக்கு மையமான கதைக் கருவே சிறப்புப் பெறுவதைக் காண்கின்றோம். அவருடைய இன்பியல் நாடகங்களில் மிகுந்து நிற்பது காதற் சுவையே. எனவே சிரிப்பதால்தான் இன்பியல் உருவாகும் என்ற கருத்து வலிமையற்றுப் போகின்றது.
ஷேக்ஸ்பியர் இயற்றிய நாடகங்களை அவருடைய அறிவு முதிர்ச்சிக் கேற்றவாறு இரண்டு பிரிவுகளாக வகுத்துள்ளனர். அவர் முதற் பருவத்தில் இயற்றிய நடுவேனிற்கால இரவுக் கனா, பயன் பெறாக் காதல் முயற்சி, தவறுகளாலாகிய இன்பியல் நாடகம் போன்ற இன்பியல் நாடகங்களில் ஒரே சிரிப்பும் ஆட்டமா யிருக்கும். அவற்றின் பின்னணியும் ஒருவகையான மயக்க மூட்டும் வனப்பைப் பெற்றிருப்பதைக் காணலாம். அவருடைய பின் பருவத்தில் எழுந்த சிம்பலீன், மாரி காலக் கதை, புயல் போன்றவைகளில் ஒரு பெருமிதம் காணப்படுகின்றது. தாழ்ந்த மனநிலையில் விளையக் கூடிய கொடுமையான நகைச்சுவை காண்பதில்லை. இப் பின்பருவ நாடகங்களில் வரும் நகைச்சுவைகளில்