உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

செந்தமிழ் பெட்டகம்


மூன்று வகையில் அமைவன. பின்னர் தோன்றிய வைணவ சைவ நூல்கள் மக்களுக்குப் புத்துணர்ச்சியூட்டிச் சமய விழிப்பைத் தர வந்த பக்திப் பாடல்களும் அவற்றையொட்டிய வழி நூல்களுமாகும். உணர்ச்சியும், செம்மையும், இசைப் பண்பும் சேர்ந்து உருவாகிய பாடல்கள் இவை. பின்னர்த் தோன்றிய சாத்திரங்கள் அனைத்தும் அறிவு நுட்பமும், ஆராய்ச்சிப் புலமையும், தத்துவக் காட்சியும், நிரம்பிய நல்லறிவுக் கொத்துக்கள். பின் ஆங்கிலத் தொடர்பிலே எழுந்த நூல்கள், வசனத்திலும் செய்யுளிலும் ஆங்கில மெருகைப் பிரதிபலிப்பனவாகவும், இக்காலத்து விஞ்ஞான வளர்ச்சியிலே உரம் பெற்றனவுமாக நானவிதங்களில் மலர்ந்துள்ளன.

- பொதுவாக தமிழ் மொழியில் கவிதையின் இலக்கணம் மிக விரிவானது. செய்யுளை முத்தகம், குளகம், தொகை, தொடர்நிலை என நான்கு வகையாகப் பிரித்தார்கள். முத்தகம் என்பது ஒவ்வொர பாடலும் ஒவ்வொரு பயனிலையைக் கொண்டு முடியும். குளகம் என்பது பல பாடல்கள் ஒர பயடினிலையைக் கொண்டு முடியும். தொகை என்பது தனித்தனியே அமைந்து நிற்கும் பாடல்களை யாதானம் ஒரு முறையில் தொகுப்தே இத்தொகை, ஒருவரால் பாடப்பட்ட பல பாடல்கள், அல்லது பலரால் பாடப்பெற்ற பல பாடல்களின் தொகுப்ாக இருக்கலாம். ஆனால் தொகுப்பு முறையில் ஒர் அடிப்படை இருக்க வேண்டும். பாடல்களின் பொருளுக்குத் தக்கவாறோ, அல்லது இடம், காலம், தொழில், பாட்டின் அமைப்பு, அளவு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிப்டையாகக் கொண்டோ, இந்தத் தொகை நூல்கள் தொகுக்கப் பெறும். தொடர்நிலை, பொருள் தொடர் நிலை, சொல் தொடர்நிலையென இரு வகைப்படும், பல பாடல்கள் தொடர்ந்து வந்து, கம்ப ராமாயணம் போன்ற நிகழ்ச்சி நூலாக வருவது பொருட்டொடர் நிலைச்செய்யுள். அந்தாதியைப் போன்று முந்திய பாட்டுக்கும் அடுத்த