புலவர் த. கோவேந்தன்
165
நிலை நாட்டியவர் காச்மீர அணியாசிரியர்களில் தலை சிறந்தவரான ஆனந்தவர்த்தனர் என்பவர் .
சுவை என்பது சிருங்காரம், வீரம், கருணை முதலாக ஒன்பது வகைப்படும். இவை சொல்லளவில் விளங்குவன அல்ல. காதற் சுவையை நம்முளத்தில் சுவைபடச் செய்ய வேண்டுமானால் கவி அச்சுவைக்கு ஏற்பட்ட நிலைகளைச் சரிவரக் கவிதையில் வருணித்தாலோ, நாடகத்தில் காண்பித்தாலோ, அந்நிலைகளிலிருந்து அந்தச் சுவை தானாக வெளியாகும். அதாவது அந்த நிலைகளால் இச்சுவை விளங்கும். கவிதையின் உயிரே இப்படி நேரே வாய்ச் செய்தியால் ஒன்றையும் வெளிப் படையாகச் சொல்லாமல், ஒன்றிலிருந்து ஒன்று தொனிக்கும்படி செய்வதிலே தான் இருக்கிறது. எவ்வளவுக்கு எவ்வளவு கவிதையில் கருத்து மறைவும் குறைவுமாயிருந்து, பின் தொனியின் மூலம் பளிச்சென்று புலனாகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு கவிதையின் திறனும் அழகும் முதிர்ந்து நிற்கின்றன என்பது ஆனந்தவர்த்தனர் தம் துவனியாலோகம் என்ற நூலில் நிலைநாட்டிய கதைத் தத்துவம். ஒர் இன்னிசையைக் கேட்டதும் நமக்கு ஒரு சுவை எழுச்சி ஏற்படுகிறதல்லவா?
சொல்லற்ற இசை நமக்குச் சுவையைத் தருவதானால் அது பொருளின் வாயிலாகவன்றி ஒலியின் வாயிலாகவே என்பதில் சிறிதும் ஐயமில்லை. அதனால் அச்சுவை தொனிக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஆகையால் எல்லாக் கலைகளின் அழகிற்கும், அவை பயக்கும் ஆனந்தத்திற்கும் காரணமாயிருப்பது இந்தத் தொனி (வியஞ்சனம், பிரகாசனம்) என்பதே. இவ்வுண்மையைத் துவடினயாலோகத்திற்க உரை எழுதிய அபிநவகுப்தர் என்ற காச்மீரப் பேரறிஞரும் விரித்து எழு நிலை நாட்டினார். இவர் கொள்கைகளைப் பின்பற்றி விசுவநாதர் தம் சாகித்திய தர்ப்பணத்தில் கவிதை என்பது ரசத்தை ஆன்மாவாகக் கொண்ட