உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

செந்தமிழ் பெட்டகம்


ஆகையால்தான் இவர் எழுதிய 'சிட்டி நைட்பீஸ்’ போன்ற கட்டுரைகள் அழியாத்தன்மையைப் பெற்று விட்டன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹாஸ்லிட், சார்லஸ் லாம் ஆகிய இரு சிறந்த எழுத்தாளர்கள் தோன்றி, என்றும் அழியாததும் ஆனந்தம் தருவதுமாகிய கட்டுரைகளைத் தந்து ஆங்கில இலக்கியத்திற்குத் தொண்டாற்றினார்கள். ஹாஸ்லிட் தம் அறிவின் திறந்ததால் படிப்போர்களை வியக்கச் செய்தார். சார்லஸ் லாம் தம் அழகிய நடையாலும் அன்புப் பெருக்காலும் படிப்போரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார். ஹாஸ்விட்டின் கட்டுரைகள் அவருடைய கல்விப் பெருக்கையும் நினைவுச் சக்தியையும் எடுத்துக் காட்டும் சின்னங்களாக விளங்குகின்றன. சார்லஸ் லாம்பின் கட்டுரைகள் அவருடைய வாழ்க்கையில் கண்ணாடியாக விளங்குகின்றன. ஹாஸ்லிட்டின் 'டேபிள் டாக்' கட்டுரைகளும் சார்லஸ் லாம்ப் எழுதிய எளியக் கட்டுரைகளும் ஆங்கில இலக்கியத்தில் கருவூல மாக நிலவுகின்றன. இவர்களுக்குப் பிறகு மெக்காலேயும் டிகுவின்சியும் மின்னொளி தவழும் அழகிய நடையில் வரலாற்றுக் கட்டுரைகள் எழுதும் தொண்டில் ஈடுபட்டார்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆர்.எல். ஸ்டீவென்சன் என்னும் ஆசிரியர் தோன்றிக் கட்டுரைகளையும், கவிதைகளையும், கதைகளையும் எழுதி இலக்கியவுலகிற்குப் பெருந்தொண்டுச் செய்தார். இவர் முன்னோர் கையாண்ட முறைகளைப் போற்றிக் கலையழகும் கருத்தொளியும் மிக்க கட்டுரைகளும் கதைகளும் எழுதினார். இவை பொதுமக்களின் உள்ளங்களைப் பெரிதும் கவர்ந்தன. இவருடைய கதைகளும் கட்டுரைகளும் கற்பனையைத் துண்டுவதோடு கவிதையுலக இன்பத்தையும் கண்டு அனுபவிக்க வாய்ப்பளித்தன. ஆகையால்தான் இவருடைய கட்டுரை