பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

செயல் எனும் மூன்று இடத்திலும் தூய்மை துலங்க நரேந்திரன் எனும் பாத்திரத்தைப் படைத்து இயக்கிக் காட்டுகிறார். ஆம் சரத் சந்திரர் ஒரு இலக்கிய கர்த்தா!

அன்புசால் புலவர் பெருமக்களே! இங்கு நம் கணியன் பூங்குன்றனாரின் 'தீதும் நன்றும் பிறர் தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன' என்ற வரிகளைச் சற்று உற்று நோக்குங்கள். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' சிந்தித்துப் பாருங்கள், சாதலும் புதுவதன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின் இன்னாதென்றலும் இலமே! அவ்வளவும் ரத்தினச் சுருக்கமான உபநிசத்துக் கருத்துகள். சுவர்க்கம் நரகம் இரண்டும் நம் கையில் தான் உள்ளன. எத்த ஆண்டவனும் புற உலகில் இல்லை; என்பது இந்தப்பாவின் வரிகள் உறுதி செய்கின்றன.

நாம் அடிமைகள்; நாம் விடுதலை பெறவில்லை; சமூக மத பொருளாதார ரீதியாக ஒரே முறையை ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் திரும்பத் திரும்பச் செய்து வருகிறோம். நமது அடிமனத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. நாம் நவீன அரக்கர்கள், என்கிறார் ஜே. கிருஷ்ணமூர்த்தி 'நம்மை நாம் அறிவது உலகத்தோடு நமக்கு இருக்கும் உறவை அறிவதாகும்' என்கிறார் இவர். 'தனிப்பட்ட ஒருவரது பிரச்சினையே உலகப் பிரச்சனை' என்பதும் இவர் கருத்து.

'தீதும் நன்றும் பிறர் தரவாரா' போன்ற சில வரிகளின் விளக்கம்தான் என்னால் இயற்றப்பட்ட 'புரவலன்' என்ற இந்தத் தொடர் நிலைச் செய்யுள் நூல். நூலாராய்ச்சியில் விருப்பு வெறுப்பற்ற நடு நிலைப் புலவர் பெருமக்கள் நாடு மொழி, கலைப்பற்றுடன் கூடிய அறிஞர் பெருமக்கள் என்னுடைய புரவலனைச்சந்தித்து அவன் சொல்வதைக் கேட்டு ஆராய்ந்து பார்ப்பார்களாக! நாம் ஒரு தடவையே பிறக்கிறோம், ஒரு தடவையே வாழ்கிறோம், ஒரு தடவையே! சாகிறோம். நம்முடைய வாழ்வு வெறும் சாப்பாட்டு வாழ்வாக