உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

உதவி யொப்புர வாகவே வாழ்ந்திருந்
துண்மைக் காக வுயிரை மீந்தொரு
முதுபெ ருங்குடி மூத்த மகனென
முயன்று முறைநெறி மேற்கொண் டொழுகியே,
எதுவந் துறினுமோ ரென்னை வச்சமும்
இன்றி வாழ்ந்திரு!" வென்றன னேற்றுநான்
அதுவு மின்று முதல்கொண்டு வாழுவே
னன்னை!" யென்னஅவ் வாவி யகன்றதே!

92