உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்


துன்பமோ துன்பம்

கூட்டினிலே சிக்கியவீட் டெலியின் துன்பம்
கொப்பத்தில் சிக்கியகுஞ் சர்த்தின் துன்பம்,
காட்டினிலே கட்டைபிளந் தடுக்கிக் கட்டிக்
கால்நோகச் சுமந்துவரும் கடையர் துன்பம்,
மேட்டினிலே யேறாத வண்டி யோட்டி
மேலுதவிக் கெதிர்நோக்கி மெலியும் துன்பம்
வீட்டினிலே மூட்டை, கொசு விருதுக் காளாய்
விளைகின்ற துன்பத்துக் கிணையா காதே!

சீட்டாட்ட மாடிப்பைத் தேட்ட மெல்லாம்
சிறுகதினம் சிந்திச்சீ ரிழந்தோன் துன்பம்;
பூட்டில்லாப் பெட்டியிலே பொருளை வைத்து;
பொழுதெல்லாம் வயலையுழப் போனோன் துன்பம்;
தீட்டாத கத்தியினால், திருமலைக்கண்
தெரியாமல் மழித்ததலைச் சிறுவர் துன்பம்
வீட்டினிலே மூட்டை, கொசு விருந்துக் காளாய்
விளைகின்ற துன்பத்துக் கிணையா காகே!

ஊட்டியிலே உடைபோது மளவி லின்றி
ஓரிரவு போர்வையிலா துறங்கும் துன்பம்;
கூட்டலிலே கழித்தலிலே கூர்மை யில்லாக்
குழந்தைக்குப் புரியவைக்கும் குருவின் துன்பம்;
வேட்டையிலே வழிதவறி வெயிலாய்த் தண்ணீர்
வேட்கைமிகுங் கானகத்தில் வேடன் துன்பம்;
வீட்டினிலே மூட்டை கொசு விருந்துக் காளாய்
விளைகின்ற துன்பத்துக் கிணையா காதே!

118