உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியகம்

துள்ளியே எழுந்தேன், 'வீட்டின்
துயர்தீர்க்கும் வழியுன் னாலே
கள்ளி நான் கண்டே' னென்று
களிப்புடன் தழுவ லானேன்.
உள்ளுணர் வோராப் பேதை
ஒட்டாளா யொதுங்கி நின்று
பிள்ளையைப் போன்று, நீங்கள்
பிதற்றுவ தென்னிஃ' தென்றாள்.