ix
இது தான் ஆத்மா; இதுவே (அமிர்தம்) அழிவில்லாதது, (அபயம்) பயமில்லாதது, இதுவே ப்ரம்மம், இந்த ப்ரம்மத்தின் பெயர் சத்தியம் என்றும் கூறப்படுகிறது.
சிந்தித்துப் பார்த்தால் சத்தியம் ஒன்றன்றி நமக்குப் புறம்பான எந்த உலகிலும் தெய்வ மென ஒன்றும் இல்லை யென்பது தெளியக் கிடக்கிறது. நமக்கு இது இவ்வாறென எடுத்து விளக்கப்படாததேன்? முப்பத்து முக்கோடி தேவர்கள் நமது பாரத பூமியில் எவ்வாறு வந்து புகுந்தனர் ? முப்பத்து முக்கோடி தேவர்களை வைத்துக் காலாகாலமும் போற்றிக் கொண்டிருக்க நாம் அந்த அளவுக்கு என்ன பாவம் செய்து விட்டோம்; என் நமக்கு இவ்வளவு பெரிய தண்டனை ? கேட்கத் தோன்றுகிறதே.
‘ஆத்மா’ அன்றித் தெய்வமென வேறென்றில்லை யென்று ஒரு சில உபநிசத்துகள் புதிர்கள் போட்டேனும் (தென்னலி ராமன் சித்திரம் போல்) சொல்லிக் கொண்டிருக்கும் போது, நாராயணேபநிசத்தில்,
‘ஏவா நோ துார்வே ப்ரதனு ஸகஸ் ரேண சதேனச | யா சதேன. ப்ரத னேஷி ஸகஸ் ரேண விரோஹஸி | தஸ்யாஸ்தே தேவீஷ்டகே விதேம ஹவிவடிா வயம்’.
‘நூற்றுக்கணக்கான அரும்பெடுப்பவளும், ஆயிரக்கணக் காக வளர்பவளும் இஷ்டதேவதையாகப் பூஜிக்கப் படுபவளு மான அப்படிப்பட்ட அறுகம் புல்லாகிய உனக்கு ஹவிஸைக் கொண்டு நாங்கள் ஆராதனை செய்வோ மாக’, இவ்விதம் ஏன் எழுதப்பட்டது ?
அறுகம்புல் இங்கு தெய்வ அந்தஸ்தைப் பெறவே பயிரா கிய சத்தியம் சிறுகச்சிறுகச் சிறுகித் தேய்ந்து நாடும் மக்களும் நலிவுற்றனர். உருவ வழிபாடு பெருகி உண்மை வழிபாடு அறவே அற்று ஆன்மீகராகி ஆளுமை செய்யாது ஆசாபாசங் களுக்கு அடிமைகளாகிச் சீரழிவோராயுள்ளோம் ; பேசத் தெரியாதவர்களாகவுள்ளோம்.