உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

viii

“குறைவற்ற பேரறிவு, குறைவற்ற சமுதாய நீதி, குறைவற்ற கோட்பாட்டுச் சுதந்திரம்! இம் மூன்றும் யூத சமுதாயத்தின் உயிர் நாடிகள்”

                          -ஆல்ப்ரெட் ஐன்ஸ்டீன், யூத மதம்.

ஆம்! இவ்வெல்லா மதங்களும் சொல்லளவில் ஆன்மீகத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. ஆயின், நடைமுறை வாழ்க்கையில் இன்று ஆன்மீகம் மக்களை விட்டு வெகு துாரம் விலகிப் போய் விட்டது. ஆன்மீகமே தெய்வீகம் என்பது மறந்து போய் வெறும் பாவனைகளில் உலகம் அமிழ்ந்து கொண்டிருக்கிறது.

உலகில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் சர்வ நாசங்களுக்கும் காரணம் ஆன்மீகம் பற்றி சரிவர விளக்கப் படாததே என்று சொல்லாமலிருக்க இயலாது. புதிர் போட்ட வாறு இவவான்மீகம் கேன, முண்டக, கட, மாண்டூக்கிய , சாந்தோக்கிய , பிருகதாரண்ய உபநிசத்துகளில் மட்டுமே மிக மிக உன்னிக் கற்று உணரத்தக்கவாறு சிதறிக் கிடக்கின்றன வேறு எந்த நாட்டு மத மொழி இலக்கிய நூல்களிலும் ஆன்மீகம் தனித் தத்துவமாக விளக்கப்பட்டிருப்பதாகக் கூற இயலாது என்று கருதுகிறேன்.

உதாரணமாக, ‘எவர்கள் கர்மமாகிய அவித்தையை (மட்டும்) உபாசிக்கிருர்களோ அவர்கள் (சம்சாரமாகிய) காரிருளில் புகுகின்றனர். எவர்கள் தேவதைகளின் உபாசனையாகிய வித்தையில் (மட்டும்) ஆசை வைத்தவர்களோ அவர்கள் இன்னும் அதிகமான காரிருளில் புகுகின்றனர்’ என்றும்,

இந்த ஆத்மா ( பிரம்மம் ) ஹ்ருதயத்திலுள்ளவன் இச் சொல்லின் அமைப்பே, - ஸ வா ஏஷ ஆத்மா ஹ்ருதி தஸ்யைத(ஹ்ருதி - அயம்) ஹ்ருதயத்தில் இவன் உளன் என்று குறிக்கும். ஆனதுபற்றியே இது ஹ்ருதயம் எனப்பட்டது என்றும்,

‘ஏஷ ஆத்மேதி ஹோ வாச, ஏத - தம்ருத - மபய மேதத் ப்ரம்மேதி, தஸ்ய ஹ வா ஏதஸ் ப்ரஹமணுே நாம சத்ய மிதி.’