பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 வேறாக அறிபவர் இல்லை; அவர்தான் உன்னுடைய ஆத்மா, அந்தர்யாமி, அழிவற்றவர், மற்ற எல்லாம் அழிவுள்ளது. - ப்ரு. உபநிசத் வைதிகமதம். மனிதனுடைய இருதயத்திலேயே ஆண்டவன் இருக்க வெளியில் கல், செம்புருவங்களை வைத்து வணங்குவது கண்மூடித்தனம்’ - குரு நானக் சீக்கிய மதம். "சத்தியத்தை நாடிக் கொள்வது, அசத்தியத்தை ஒடத்தள்ளுவது, சத்தியத்தில் நிலைபெற்று நின்று நிலையுறுத்துவது (ஸ்மாராக, வாரக, தாரக), இம் மூன்றும் உடையவனே ஆன்மீக ஞானகுரு. " - மகாவீர், சமண மதம். தன் மாமிசத்திற்கென்று விதைக்கிறவன் மாமிசத்தில்ை அழிவை யறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினலேயே நித்ய ஜீவனை அறுப்பான்.' 'அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது மரணம்வெற்றியால் விழுங்கப்பட்டது.

- பைபிள், கிறிஸ்துவ மதம்.

நல்லதைக் கேட்டும் எவனொருவன் அதற்கு உதவவில்லையோ, கெட்டதைக் கேட்டும் எவைெருவன் அதைத் தடுக்கவில்லையோ அத்தகைய ஒருவன் என்றும் நம்முடைய வகைான். சிறு குழந்தைகளிடம் எவனொருவனுக்கு உள்ளார்ந்த அன்பில்லையோ, முதுமகனையும் எவனெருவனுக்குப் புகழ் இல்லையோ அத்தகைய ஒருவன் என்றும் நம்முடையவனா கான். - புனித குரான், இஸ்லாம் மதம்.