இந்த ஆன்மீகத் தத்துவத்தை உபநிசத்களிலன்றி (தாசோபநிசத்) வேறு எங்கும் காண இயலாது. உபநிசத்கள் பலவாகி - மக்களைக் குழப்பி விடப்பட்டுள்ளன. மக்களை பேதிக்க வைத்துள்ளன என்று சொல்ல வேண்டியுள்ளது. ஐயமிருந்தால் நாராயணொபநிசத்தைப் பார்த்தறிக ! இது நிற்க. மதம்' எனும் சொற்பொருள் கொள்கை என்பதுதவிர வேறில்லை; ஆன்மீகமற்ற - வயிரம் பற்றாத மரம் வேலைக்கு உதவாதது போல, வெறும் வழிபாடுகள் மட்டும் வைத்துக் கொண்டுள்ள மதம் வெள்ளை மரம்தான். அதற்கு ஆளுமை கிடையாது என்பதை நம்மக்கள் இனியாகிலும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
"உள்ளத்தாற் பொய்யா தொழுகி னுலகத்தா ருள்ளத்து ளெல்லா முளன்."
"தன்னுயிர் தானறப் பெற்ரறானை யேனைய மன்னுயி ரெல்லாம் தொழும்."
- திருக்குறள். திராவிட மதம்.
"அத்ருஷ்டோ த்ருஷ்டா அஸ்ருத: ஸ்ரோதா
அமதோ மந்தா அவிஜ்ஞாதோ விஜ்ஞாத;
நான்யோ அதோ அஸ்தி த்ரஷ்டா,நான்யோ அதோ அஸ்தி ஸ்ரோதா, நான்யோ அதோ அஸ்தி மந்தா, நான்யோ அதோஸ்தி விஜ்ஞாதைஷத ஆத்மா அந்தர்யாம் - யம்ருதோ அதோன்ய
தார்த்தம்"
அவர் காணப்படாமல் காண்பவர், கேட்கப்படாமல் கேட்பவர், நினைக்கப்படாமல் நினைப்பவர், அறியப்படாமல் அறிபவர்; அவரைக் காட்டிலும் வேரறாகக் காண்பவர் இல்லை; அவரைக் காட்டிலும் வேறாகக் கேட்பவர் இல்லை; அவரைக் காட்டிலும் வேறாக நினைப்பவர் இல்லை; அவரைக் காட்டிலும்