6
"குளங்களி கொண்ட லர்ந்த
கோகனம், குவளை கோத்துக்
களங்கொளும் வீரம் கூடக்
காதலாய் மாறக் கண்டா
ருளங்கொளும் முகம், கண் ணோடிவ்
வுடலெழிற் கொப்பொன் றில்லா
இளங்கிளி யிருப்ப தற்கோ
ரிலவேனு மிலையே யிங்கே!
தோடலைத் தியங்கும் வாட்கண் . தொடியலைத் திடுங்காந் தள்கை, ஈடலைத் தியங்கும் வஞ்சி யிளங்கொடி யிடம்ப டாநீர்க் கோடலைத் தியங்கும் கீற்றுக் குடிலிதில் படரக் கூடின், வீடலைத் தியங்கும், ஊரில் வீதிகள்! விதியிஃ" தென்றேன்.
"தற்குறித் தனமெ னும்புல் தரைதனைக் கழனி யாக்கிக் கற்குறைத் திடுமா றோடும் கவின்தமிழ்க் கால்வாய் நீரால், நெற்குறித் துழைத்து நானும் நிலைப்பயிர்க் கவிதை நெய்தற் 'கெற்குரைத் தருள்க’,வென்றேற்
றிங்குவந் திருப்ப தென் றாள்.
கொம்பெனக் கொண்டி ரண்டு கொய்யாப்ப ழங்கள் கொண்டு, செம்பொனால் வார்த்த சிற்பம் சீவனுற் றாங்குற் றென்னை வம்பினில் மாட்டி வைத்து வருத்தாதே ! 'வலிந்து மூங்கிற் கம்பினைப் பாட வைத்தான்
கவிதையைக் கம்ப' னென்பர்.