உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

29

“தீப்பெய்தி டாதே தேவீ!
திகைத்துத்தே ராதென் காதில்;
தோப்பெய்தித் துரவு மெய்தித்
துலங்கிடும் செல்வ மெய்திக்
காப்பெய்தி யிணைந்து வாழக்
கணவனைக் கருதல், கன்னி
பூப்பெய்தும் போதே புந்தி
புகுவதொன் றன்றே?” வென்றேன்.

“ஒன்றென வொன்றி வாழும்
ஓரின மதிலொவ் வொன்றும்
ஒன்றினுக் கொன்ரறென் றதே
யுருவுணர் விவைவே றகும்!
ஒன்றென வுரைக்கும் பெண்மைக்
குள்ளது மிதுவே வேர்ந்தால்!
ஒன்றினி யுரைப்பி னஃதென்
ஒருத்தியி னுணர்வா” மென்றள்.

“பழம்போடு காக்கா! காக்கா!
பழம்போ’டென் றிளைஞர் நாவில்
தழும்பாடக் கேட்டும் காக்கை
தான்போடா வாறய் நீயும்
‘முழம்போட முடியா’ தென்றே
முகங்கோணி யகம்ம றைத்தின்
றுழம்பாடச் செய்யா துற்ற
துரைத்தெனக் குதவு” கென்றேன்.

“கொலைகோரும் வேலைக் காட்டிக்
‘கூறெ’லும் போதும், நா’னென்
நிலைகூற இயலா’ தென்னும்
நினைவொன்றன் றுதித்த துண்டால்!
கலைகோரி யதைநீர் கேட்டால்
கைம்மாற யதற்குத் தக்க
விலைகோரு வேன்நான்; தந்து
விடநேரு முமக்கின்” றென்றள்.